உலக நாடுகளெங்கிலும் செறிவுடன் வாழும் காயல்பட்டினத்தைச் சார்ந்த பொதுமக்கள், அவரவர் பகுதிகளில் காயல் நல மன்றங்களைத் துவக்கி, தமக்கும் - நகருக்கும் தங்களாலியன்ற நலத்திட்டப் பணிகளை செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில் வசிக்கும் காயலர்கள் இணைந்து, ஹைதராபாத் காயல் நல மன்றம் என்ற பெயரில் நகர்நல அமைப்பைத் துவக்கிட ஆர்வங்கொண்டுள்ளனர். அதற்கான முன்முயற்சியாக, 10.05.2012 வியாழக்கிழமை இரவு 07.30 மணியளவில், காயல்பட்டினத்தைச் சார்ந்த பி.எஸ்.ஹஸன், ஹபீப் முஹம்மத், முஹம்மத் இஸ்மாஈல், அப்துல் பாரி ஆகியோர், ஹைதராபாத் ராணிகுஞ்ச் பகுதியிலுள்ள மாயா டீலக்ஸ் ஹோட்டலில் கலந்தாலோசனை நடத்தினர்.
ஹைதராபாத் நகரில் வசிக்கும் சுமார் 15 காயலர்கள் மற்றும் ஹைதராபாத்திலிருந்து 3 மணி நேர பயணத் தொலைவில் வசிக்கும் காயலர்களை ஒருங்கிணைத்து, “ஹைதராபாத் காயல் நல மன்றம்” என்ற பெயரில் அமைப்பைத் துவக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதிகளில் வசிக்கும் காயலர்களுக்கு முறைப்படி தகவல் அனுப்பி, 12.05.2012 அன்று ஹைதராபாத் நகரில் முறைப்படியான கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தி, அக்கூட்டத்தில் உறுப்பினர்களின் முழு முகவரிகளைப் பெற்று, அமைப்பை முறைப்படி துவக்கிட திட்டமிட்டுள்ளனர்.
இச்செய்தியைக் காணும் ஹைதராபாத் - சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த காயலர்கள் இதையே அழைப்பாக ஏற்று, நாளை நடைபெறும் கூட்டத்தில் அவசியம் பங்கேற்க வருமாறு, கூட்ட ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தகவல்:
சென்னையிலிருந்து...
A.H.M.முக்தார் B.Com. |