சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் “நலிந்தோருக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி” வழங்கும் திட்டத்தின் கீழ், காயல்பட்டினத்தைச் சார்ந்த - ஏழ்மை நிலையிலுள்ள, ஆதரவற்ற, உழைக்கவியலாத 52 குடும்பங்களுக்கு, 1,000 ரூபாய் மதிப்பிலான சமையல் பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், சமூக ஆர்வலர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோரிணைந்து அப்பொருட்களை பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கினர்.
|