ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தினர் - உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில், 09.05.2012 புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் கலந்தாய்வு மேற்கொண்டனர்.
அம்மன்றத்தின் துணைச் செயலாளர் எம்.ஜே.ஹபீபுர்ரஹ்மான் தலைமையில், அதன் செயற்குழு உறுப்பினர்களான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ, எஸ்.ஏ.சி.ஷாஹுல் ஹமீத், சேகு அப்துல் காதிர் ஆகியோரடங்கிய குழுவினர், இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மதிடம், இக்ராஃவின் கடந்த கால மற்றும் நடப்பு செயல்பாடுகள், சுழற்சி முறை தலைமை பற்றிய விபரங்கள், சாதனை மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் திட்டங்கள், அபூதபீ காயல் நல மன்றத்தின் நகர்நல செயல்பாடுகளில் இக்ராஃ நிர்வாகத்தின் ஒத்துழைப்பு, இக்ராஃவின் செயல்பாடுகளில் அபூதபீ காயல் நல மன்றத்தின் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கம் பெற்றனர்.
தொடர்ந்து இக்ராஃவின் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கிய நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், இதர காயல் நல மன்றங்களைப் போல அபூதபீ காயல் நல மன்றமும் IQRA EDUCATIONAL SCHOLARSHIP திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்கு உதவிட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.
நகரின் கல்வி முன்னேற்றத்திற்கு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து நீண்ட நேரம் கருத்துப்பரிமாற்றங்கள் செய்யப்பட்ட இக்கலந்தாய்வு மதியம் 02:30 மணியளவில் நிறைவுற்றது.
இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இக்கூட்டத்தில் உடனிருந்தனர்.
தகவல்:
N.S.E. மஹ்மூது,
மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம். |