டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கான மருந்தடிப்பு குறித்து, பொதுமக்கள் கவனத்திற்காக காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் முக்கிய அறிவிப்பு ஒன்றை பின்வருமாறு வெளியிட்டுள்ளார்:-
1939ஆம் வருட தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சட்டப்பிரிவுகள் 83 (1), (அ), (ஆ), 84 (1), 2 (1), 85 மற்றும் 134 ஆகியவைகளின்படி வழங்கப்படும் அறிவிப்பு!
டெங்கு வைரஸ் கிருமிகளை பரப்பும் 'ஏடிஸ்' வகை கொசுப்புழுக்கள் நல்ல தண்ணீரில்தான் உற்பத்தியாகும் என்பதால் அதனை தடுக்க பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
* பொதுமக்கள் தங்களது வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளில் கொசுக்கள் உட்புகாவண்ணம் நன்கு இறுக மூடி வைக்க வேண்டும்.
* பொதுமக்கள் தங்களது வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகளில் நகராட்சி பணியாளர்கள் கொசுப்புழுக்கொல்லி மருந்தினை ஊற்ற வரும்போது எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் பணியாளர்களே நேரடியாக கொசுப்புழுக் கொல்லி மருந்தினை ஊற்றிட அனுமதிக்க வேண்டும்.
* வீடுகளின் சுற்றுப்புறங்களிலும், மொட்டை மாடிகளிலும் உபயோகமற்ற மழைநீர் தேங்குவதற்கு ஏதுவாக கிடக்கும் டயர்கள், ஆட்டுரல்கள், தேங்காய் கூந்தல்கள், சிரட்டைகள், பால் கவர்கள், பாட்டில் மூடிகள், கண்ணாடி பாட்டில்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் டீ கப்புகள் போன்ற பொருள்களை பொதுமக்கள் அப்புறப்படுத்தி கொசுப்புழு உற்பத்தியை தடுத்திட வேண்டும்.
* பொதுமக்களுக்கு காய்ச்சல் அல்லது காய்ச்சல் அல்லது காய்ச்சலுக்கான அறிகுறி ஏதும் தென்படின் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
* பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளை நன்கு காற்று புகாது வைக்க வேண்டும்.
* வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளின் பின்பகுதியில் தேங்கும் தண்ணீரை அவ்வப்போது துடைத்து உலர வைக்க வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் டெங்கு காய்ச்ல் வரும் முன்னர் காக்க ஓத்துழைப்பு கொடுக்குமாறு கேடடுக்கொள்கிறோம்.
இவ்வாறு, காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
M.ஜஹாங்கீர். |