காயல்பட்டினம் பேருந்து நிலையத்தின் மேற்குப் பகுதியில் - எல்..எஃப்.ரோடு நுழைவாயிலில், பேருந்து போக்குவரத்தைக் கவனிக்கத் தடையாக இருந்த கோட்டைச் சுவர் அகற்றப்பட்டுள்ளது.
இச்சுவற்றால் பெரும் விபத்துகள் நடக்க நேரிடும் என அச்சம் தெரிவித்து நகரின் பொதுநல ஆர்வலர்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் நகராட்சிக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. காயல்பட்டணம்.காம் இணையதளத்திலும் இதுகுறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
கடந்த 28.03.2012 அன்று காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், இச்சுவற்றை அகற்றக் கோரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் அதன் அப்போதைய துணைச் செயலாளரும் - தற்போதைய செயலாளருமான ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளர் ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன், பொதுநல ஆர்வலர் பி.ஏ.ஷேக் ஆகியோர் அடங்கிய குழு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவிடம் கோரிக்கையை அளித்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அச்சுவரின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளது. இதனால், பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் பேருந்துகளை ஓரளவுக்கு வெளியிலிருந்து கவனித்துக்கொள்ள வாய்ப்பேற்பட்டுள்ளது.
|