| |
செய்தி எண் (ID #) 8408 | | | ஞாயிறு, மே 6, 2012 | ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படாத பணிகளுக்கு மறு டெண்டர் அறிவிப்பு! மே 9 இறுதி நாள்!! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 2515 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினம் நகராட்சியின் பொது நிதி திட்டத்தின் கீழ் 17 லட்சத்து, 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 7 பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு ஏப்ரல் மாதம் 3ம் தேதி வெளியிடப்பட்டது.
அதில் கீழ்க்காணும் மூன்று பணிகளுக்கு மட்டும் ஒப்பந்தப்புள்ளிகள் - இறுதி நாளான ஏப்ரல் 24க்கு முன்னர் - சமர்ப்பிக்கப்பட்டது.
(1) நகராட்சிப் பகுதிகளில் உள்ள குடிநீர் விநியோகப் பராமரிப்பு பணிக்குத் தேவையான வால்வுகள் சப்ளை (எண்ணிக்கை - 62) (மதிப்பு: ரூபாய் 2,00,000)
டெண்டர் வென்றவர்: மோகன பிரியா ட்ரேடர்ஸ், மதுரை (மதிப்பீட்டை விட 0.09 சதவீதம் குறைவு)
(2) சிவன்கோயில் தெரு மயான சாலையில் சிறுபாலம் கட்டுதல் (மதிப்பு: ரூபாய் 4,00,000)
டெண்டர் வென்றவர்: நாகூர் மீரான்சா, ஏர்வாடி (மதிப்பீட்டை விட 4.92 சதவீதம் கூடுதல்)
(3) கே.எம்.டி மருத்துவமனை அருகில் உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இருபுறமும் (கிழக்கு மற்றும் மேற்கு) தடுப்புச்சுவர் கட்டுதல் (மதிப்பு: ரூபாய் 2,40,000)
டெண்டர் வென்றவர்: நாகூர் மீரான்சா, ஏர்வாடி (மதிப்பீட்டை விட 4.90 சதவீதம் கூடுதல்)
ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படாத கீழ்க்காணும் பணிகளுக்கான மறு டெண்டர் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் மே 8 வரை விநியோகிக்கப்படும். சமர்ப்பிக்க இறுதி நாள் மே 9.
(1) நகராட்சிப்பகுதிகளில் உள்ள சேதமடைந்த குடிநீர் வால்வு தொட்டிகளை இடித்துவிட்டு புதிய வால்வுதொட்டிகள் கட்டுதல (மதிப்பு: ரூபாய் 7,00,000)
(2) நகராட்சி பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள சுகாதார வளாகத்தை மேம்பாடு செய்தல் (மதிப்பு: ரூபாய் 1,50,000)
ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படாத கீழ்க்காணும் சிறு பணிகள் - விலைப்புள்ளிகள் பெற்று - மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
(1) நகராட்சிப்பகுதிகளில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்தல் (மதிப்பு: ரூபாய் 60,000)
(2) தபால் நிலையம் அருகில் உள்ள சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றுதல (மதிப்பு: ரூபாய் 3,000)
இதுவரை ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படாத கீழ்க்காணும் பணிகளுக்கும் மறு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
மங்களவாடியில் புதிய கழிப்பறை கட்டுதல்
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 09.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 7,20,000)
கீழலட்சுமி புரத்தில் உள்ள பழுதடைந்த கழிப்பறையை மேம்பாடு செய்தல்
(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 09.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 2,00,000) |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|