சென்னையில் வசிக்கின்ற - சென்னைக்கு வருகின்ற காயல்பட்டினம் நகர மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தகுந்த வழிகாட்டுதலை அளித்திடும் பொருட்டு அண்மையில் துவக்கப்பட்ட அமைப்பு காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC).
அவ்வமைப்பின் வேலைவாய்ப்பு குழுவின் ஏற்பாட்டில் மார்ச் 31, சனிக்கிழமை அன்று மாலை - WHAT EMPLOYERS EXPECT OUT OF A CANDIDATE? மற்றும் A CANDIDATE'S PREPAREDNESS FOR INTERVIEWS என்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அந்நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் - ஏப்ரல் 28 (சனிக்கிழமை) அன்று சென்னை CITY CENTRE -ல் உள்ள ETA MELCO நிறுவனத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் RANDSTADT (முன்னர் MAFOI என அழைக்கப்பட்டது) நிறுவனத்தின் அன்ட்லின் ஜோ மற்றும் ETA MELCO நிறுவனத்தின் அஷ்ரப் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
வேலைவாய்ப்புகள் குறித்து துவக்கமாக - அன்ட்லின் ஜோ, Projector உதவிக்கொண்டு விளக்கவுரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து கலந்துக்கொண்ட மாணவர்களுக்கான - பொதுஅறிவு சோதனை (Aptitude Test) மற்றும் குழு கலந்துரையாடல் (Group Discussion) நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பொதுஅறிவு சோதனை (Aptitude Test)...
குழு கலந்துரையாடல் (Group Discussion)...
குழு கலந்துரையாடலில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட RANDSTADT நிறுவன அலுவலர் அன்டலின் ஜோவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து ETA MELCO நிறுவனத்தின் அஷ்ரப் - TNPSC உட்பட பல அரிய வேலைவாய்ப்புகளுக்கு காயல்பட்டினம் மாணவர்கள் முக்கியத்துவம் வழங்காதது குறித்தும், மாணவர்கள் தங்களை எவ்வாறு கடினமான வேலைவாய்ப்பு சந்தைக்கு தங்களை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
இறுதியாக - அமைப்பின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஹெச்.என். சதக்கத்துல்லாஹ் நன்றியுரை நவில - நிகழ்ச்சி நிறைவுற்றது.
|