காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், இக்ராஃவில் கலந்தாலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து, அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், கடந்த 2010-11ஆம் ஆண்டு முதல் சுழற்சி முறை நிர்வாகத் தலைமையின் கீழ் நடைபெற்று வருகிறது. சுழற்சி முறை நிர்வாகத்தின் துவக்க ஆண்டான 2010இல், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அப்போதைய தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைவராக இருந்தார். 2011-12ஆம் ஆண்டிற்கான நடப்பு தலைவராக, சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் இத்ரீஸ் இருந்து வருகிறார்.
அவரது தலைமைப் பொறுப்புக் காலம் நிறைவுறுவதையடுத்து, 2012-13 புதிய பருவத்திற்கான தலைவராக, அடுத்த வரிசையிலுள்ள - தாய்லாந்து காயல் நல மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் பொறுப்பேற்கவுள்ளார். விரைவில் நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவு செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், இக்ராஃவின் கடந்த கால மற்றும் நடப்பு செயற்பாடுகள், வருங்கால செயல்திட்டங்கள் குறித்து அவர் 30.04.2012 அன்று இரவு 08.30 மணியளவில், இக்ராஃ அலுவலகத்தில் கலந்தாலோசனை நடத்தினார்.
இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது ஆகியோர் அவருக்குத் தேவையான விளக்கங்களை வழங்கினர். இக்ராஃ செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |