காயல்பட்டினம் நகராட்சிக்கு - தமிழக அரசு - ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுக்குழுமம் (IUDM) 2011 - 12 திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management) வகைக்காக 50 லட்ச ரூபாய் வழங்கியுள்ளது.
10 லட்ச ரூபாய்க்கு மேலான கொள்முதல்கள் - etender அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்ற விதிமுறைப்படி - காயல்பட்டினம் நகராட்சி இந்த டெண்டரை - டெண்டர் இறுதி நாள் வரை அறிவிக்கவில்லை. இதில் சில நிர்வாக சிக்கல்கள் இருப்பதாக அலுவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆகவே இந்த டெண்டர் மீண்டும் - மே மாதம் 23 ம் தேதி வரை - ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விளம்பரங்கள் - இன்றைய தினத்தந்தி மற்றும் THE NEW INDIAN EXPRESS நாளிதழ்களின் மாநிலப்பதிப்பில் வெளியாகியுள்ளன.
1. Re:40 லட்ச ரூபாய் மதிப்பிலான... posted byMohamed Adam Sultan (kayal patnam)[04 May 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 18659
குடு குடுப்பை சத்தம், குழுமியகூட்டம் நாற்சந்தியில் சாகசங்களை காட்டுகிறேன் என்று சர்க்கஸ் காரனின் வாய்சவடால்,அவனின் முக்கிய வாய்பந்தல் என்ன தெரியுமா, இந்த கீரிக்கும் இந்தபாம்புக்கும் பயங்கர சண்டை நடக்கபோகிறது அதை எல்லோரும் பார்க்கபோகிறீர்கள். ஒரு தடவை எல்லோரும் கைதட்டி கையில் உள்ள காசை போடுங்கள் என்று சொல்லி பாம்பை பெட்டிக்குள்ளும் ,கீரியை ஒரு ஓரத்தில் கட்டிவிட்டு எல்லோருடைய காசையும் கறந்துவிடுவான்.
நாமும் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடக்கும் பார்த்துவிட்டு செல்லலாம் என்று கடைசிவரை காத்திருந்து முடிவில் ஒரு சண்டையையும் பார்க்காமல் ஏமாற்றத்துடனும் ஏமாளியாகவும் திரும்புவோம்.
இதே உதாரணம் தான் இந்த டெண்டர் விடுவோம் என்ற கதையும். ஏமாற்றமடைவரும், ஏமாளியும் யார் என்பதை அன்புக்குரிய வாசக உள்ளங்களுக்கு விட்டு விடுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross