மின் உற்பத்தி பற்றாக்குறையைக் காரணங்காட்டி, காயல்பட்டினம் உட்பட தமிழகத்தின் (சென்னையைத் தவிர்த்த) அனைத்து பகுதிகளிலும் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை செய்யப்பட்டு வந்தது. சுழற்சி முறையில் அந்தந்த துணை மின் நிலையங்களிலிருந்து வெவ்வேறு நேரங்களில் மின்தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக மின் தடை செய்யப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள், “என்னப்பா... கரண்ட்டு போகும்னு நெனச்சிதானே நான் இன்னிக்கு மதியம் செய்ய வேண்டிய வேலைய காலையிலேயே செஞ்சேன்...?”, “வேல மெனக்கெட்டு அதிகாலையிலேயே அத இத செஞ்சி வச்சா, இன்னும் கரண்டே போகலை...” என தற்போது வேறு வகையில் கவலைப்படத் துவங்கியுள்ளனர். |