காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் வளாகத்தில், அப்பள்ளி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் திருக்குர்ஆன் மனனப் பிரிவான, அல்மத்ரஸத்துல் அஸ்ஹர் லி தஹ்ஃபீழில் குர்ஆனில் கரீம் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா, கடந்த 05, 06 தேதிகளில் (சனி, ஞாயிறு) அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் உள்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
துவக்க நாளான 05.05.2012 சனிக்கிழமையன்று மாலை முதல் இரவு வரை, கிராஅத், பேச்சு, ஹிஃப்ழு (திருக்குர்ஆன் மனனம்) மற்றும் பொதுமக்களுக்கான வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றன.
06.05.2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் ஹிஃப்ழுப் போட்டி நடைபெற்றது. இரவு 07.00 மணிக்கு ஹாஃபிழுல் குர்ஆன் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) மேலாளரும், அல்மத்ரஸத்துல் அஸ்ஹர் நிறுவனத்தின் மார்க்கக் கல்வி ஆசிரியருமான டி.வி.செய்யித் ஜக்கரிய்யா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
பட்டம் பெறும் மாணவர்களான ஹாஃபிழ் என்.ஏ.சுல்தான் ஹில்மீ, ஹாஃபிழ் கே.எஸ்.முஹம்மத் இம்ரான் ஆகியோர் இறைமறை வசனங்களை தமிழாக்கத்துடன் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, ஸனது பெறும் மாணவர் ஹாஃபிழ் பி.எம்.செய்யித் இஸ்மாஈல் சிற்றுரையாற்றினார்.
பின்னர், மத்ரஸா நிர்வாகி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், மத்ரஸா அறிமுகவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர். இந்த மத்ரஸாவில் பயின்று திருமறை குர்ஆனை முழுமையாக மனனமிட்டு முடித்துள்ள 8 மாணவர்களுக்கு ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது (பட்டம்) வழங்கப்பட்டது.
ஹாஃபிழுல் குர்ஆன் பட்டம் பெற்ற மாணவர்கள் விபரம் பின்வருமாறு:-
(1) ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.ஃபாஸில் முஹம்மத்,
த.பெ. சேகு அப்துல் காதிர்,
கே.டி.எம். தெரு, காயல்பட்டினம்.
(2) ஹாஃபிழ் எம்.எம்.எஸ்.காதிர் ஸாஹிப் ஜாஸிம்,
த.பெ. மொகுதூம் மீராஸாஹிப்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
(3) ஹாஃபிழ் எஸ்.எம்.முஹம்மத் இப்றாஹீம்,
த.பெ. செய்யித் முஹ்யித்தீன்,
காயிதேமில்லத் நகர், காயல்பட்டினம்.
(4) ஹாஃபிழ் எம்.எஃப்.முஹம்மத் ஃபஹீம்,
த.பெ. முஹம்மத் ஃபைரோஸ்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
(5) ஹாஃபிழ் பி.எம்.செய்யித் இஸ்மாஈல்,
த.பெ. பரக்கத் முஹம்மத்,
கே.டி.எம். தெரு, காயல்பட்டினம்.
(6) ஹாஃபிழ் என்.ஏ.சுல்தான் ஹில்மீ,
த.பெ. நூருல் அமீன்,
தைக்கா தெரு, காயல்படடினம்.
(7) ஹாஃபிழ் கே.எஸ்.முஹம்மத் இம்ரான்,
த.பெ. காதிர் ஸாஹிப் மரைக்கார்,
தைக்கா தெரு, காயல்பட்டினம்.
(8) ஹாஃபிழ் கே.எஸ்.எல்.முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ்,
த.பெ. கோனா ஷேக்னா லெப்பை,
அம்பல மரைக்கார் தெரு, காயல்பட்டினம்.
மத்ரஸா ஆசிரியர்களான ஹாஃபிழ் எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத், ஹாஃபிழ் முஹம்மத் இம்ரான் உமரீ, கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் மஹ்ழரீ, சிறப்பு விருந்தினர் மவ்லவீ முஜீபுர்ரஹ்மான் ஃபாஸீ ஆகியோர் ஸனது - பட்டங்களை வழங்கினர்.
பின்னர், பட்டம் பெற்ற மாணவர்களின் சார்பில், ஹாஃபிழ் எம்.எம்.எஸ்.காதிர் ஸாஹிப் ஜாஸிம் ஏற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - குவைத் நாட்டின் இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவீ முஜீபுர்ரஹ்மான் ஃபாஸீ பட்டமளிப்புப் பேருரையாற்றினார்.
பின்னர், விழாவின் இரு தினங்களிலும் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும், பார்வையாளர் போட்டிகளில் பங்கேற்ற பொதுமக்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அப்பரிசுகளை அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ ஆகியோர் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகரில் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்து ஹாஃபிழுல் குர்ஆன் பட்டம் பெறும் மாணவர்கள், ஹாஃபிழத்துல் குர்ஆன் பட்டம் பெறும் மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில், இந்நிகழ்ச்சியில் பட்டம் பெற்ற 8 மாணவர்களுக்கும் தலா ரூ.2,500 பணப்பரிசு வழங்கப்பட்டது. அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் அப்பரிசுகளை வழங்கினார்.
பின்னர் பட்டம் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்கு திருமறை குர்ஆனையும், பள்ளிக் கல்வியையும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நன்றியுரைக்குப் பின், துஆ கஃப்ஃபாராவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சியில், நகரின் பல பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு பள்ளி மாடியில் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகளின் வழிகாட்டலில், மத்ரஸா ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் இம்ரான் உமரீ, ஹாஃபிழ் செய்யித் முஹம்மத் மற்றும் பள்ளி இமாம் நெய்னா முஹம்மத், பிலால் ஏ.எச்.லுக்மான் ஆகியோர் செய்திருந்தனர்.
ஹாஃபிழுல் குர்ஆன் பட்டம் பெற்ற மாணவர்கள் தனித்தும், ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்தும் எடுத்துக்கொண்ட குழுப் படக் காட்சிகள் பின்வருமாறு:-
|