காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில் இயங்கி வரும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பில், வரும் ஜூன் மாதம் 04ஆம் தேதியன்று, அமைப்பின் 28ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தின மீலாத் விழா ஆகியவற்றை நடத்திட, அவ்வமைப்பின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
எமது ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது மற்றும் பொதுநல பேரியத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், 30.03.2012 வெள்ளிக்கிழமையன்று மாலை 05.00 மணியளவில், அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஹாஜி எம்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஜனாப் எல்.டி.அஹ்மத் முஹ்யித்தீன் (குவைத்), ஜனாப் எம்.என்.செய்யித் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஜி எம்.எஸ்.அஹ்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். தோல்சாப் ஹாஜி எம்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்ற மம்னாகார் அனைவரையும் வரவேற்றதோடு, அமைப்பின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார்.
இக்கூட்டத்தில், அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் எங்கள் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தின மீலாது பெருவிழா மற்றும்
பேரியத்தின் 28ஆம் ஆண்டு துவக்க விழாவை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 04-06-2012
(ஹிஜ்ரி 1433 ரஜப்15ஆம் நாள்) திங்கட்கிழமையன்று, கீழ்க்காணும் நிகழ்முறை விளக்கப்படி
நனி சிறப்புடன் நடத்திட ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது:-
காலை 07: 00 ,மணிக்கு இறை மறை ஓதியும் அடுத்து சுன்னத் எனும் கத்னா வைபவம்,
08:00 மணிக்கு, மாநபியின் மாண்பின் புகழ் கூறும் புனித மவ்லிது மஜ்லிஸ்.
10:00 மணிக்கு, அருள்மறையை அகத்தில் ஏந்திய இளம் ஹாபிழ்களுக்கான ஹிஃப்ழ் போட்டி.
மாலை 05:00 மணிக்கு இளம் மாணவர்களுக்கான இனிய சன்மார்க்க பேச்சுப்போட்டி.
இரவு 07:00 மணி முதல் இஸ்லாமிய சன்மார்க்க சிறப்பு சொற்பொழிவு மஜ்லிஸ்
இவ்விழாவில், நாடறிந்த நாவலரும், சன்மார்க்க விளக்கவுரையாளருமான மவ்லவீ ஷேக் அப்துல்லாஹ் ஜமாலீ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சியும், எமது பேரியத்தின் முத்தாய்ப்பு நிகழ்வான உயர் கல்விக்கான உதவி தொகை கடந்த ஆண்டுகளைப்போல் இந்த வருடமும் உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலமாக தலா ஐந்து ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு பயனாளிகளுக்கு மொத்தம் இருபது ஆயிரம் ரூபாய் இந்நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளது.
பாத்திஹா துஆவுடன் இப்புனிதமிகு நிகழ்வு இனிதே நிறைவு பெறும், இன்ஷாஅல்லாஹ்.
இவ்வாறு விழா நிகழ்முறைகள் அமையவுள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை இப்பொழுதிலிருந்தே துவக்கி, சிறப்புற செய்திட, கூட்டத்தில் பங்கேற்ற அனைவராலும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்விழா குறித்து, சென்னையிலுள்ள ஜனாப் எம்.எஸ்.கே.இப்றாஹீம் மற்றும் வெளியூர் - வெளிநாடுகளிலுள்ள அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஆர்வலர்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.
நிறைவாக, ஆசிரியர் இசட்.ஏ.ஷெய்கு அப்துல் காதிர் நன்றி கூற, ஹாஜி எம்.எஸ்.அஹ்மத் முஹ்யித்தீன் அவர்களின் ஃபாத்திஹா துஆவுடன் அமைப்பின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
கூட்ட ஏற்பாடுகளை, ஜனாப் தோல்சாப்.எம்.எல்.மூஸா ஸாஹிப், ஜனாப் எஸ்.என்.ஆஷிக் ரஹ்மான் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.
எமது பேரியத்தின் பிரதிநிதிகளாக வெளிநாடுகளிலிருந்து நல்ல முறையில் செயலாற்றி வரும்
செயற்குழு உறுப்பினர்களான,
வியட்நாம் ஹாஜி கே.எஸ்.டி.மன்சூர் ஷேக்னா.
சிங்கப்பூர் பொறியாளர்கள் ஹாஜி எம்.எம்.மொஹ்தூம் முஹம்மது, ஜனாப்எம்.எ.கே.ஷேக்னா லெப்பை (மான்),
ஹாங்காங் ஹாஜி எம்.எ.கே.அப்துல் பத்தாஹ், ஹாஜி கூஸ்,பி.அப்துல் காதர்,
பஹ்ரைன் ஹாஜி வேனா எஸ்.எஸ்.ஜாகிர் ஹுசைன்,
பாங்காங், ஜனாப் வேனா எஸ்.எஸ்.பஜுல் கரீம்
துபாய் ஹாஜி கே.எஸ்.டிஅஹ்மது லெப்பை, ஜனாப் எஸ்.எம்.டி.முஹம்மது ஹசன்,
அபுதாபி, ஜனாப் வி.எஸ்.ஐ. முஹம்மது ஹசன்,
குவைத் ஜனாப் எஸ்.எம்.டி.மொஹ்தூம் முஹம்மது.
ஜித்தா ஹாஜி சட்னி எஸ்.எ.கே.முஹம்மது உமர் ஒலி, ஜனாப், கே.எஸ்.டி.முஹம்மது அஸ்லம்,
புனிதமக்கா ஹாஜி வி.எம்.டி.முஹம்மது அலி (வி.பி) மற்றும் அனைவர்களுக்கும் அவர்கள் அளித்து வரும் நல்லாதரவிற்கு மனமார்ந்த நன்றிகளை கூட்டத்தின் மூலமாக பதிவு செய்யப்பட்டது.
கடந்த 27 ஆண்டுகளாக எங்களுக்கு நல்லாதரவும்,ஆலோசனைகளும் வழங்கி வரும்
உள்ளுரிலும்,வெளி ஊரிலும் குறிப்பாக கடல் கடந்து வெளி நாடுகளில் வாழும்
நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரர்களான உறுப்பினர்கள், தயாள மனம் கொண்ட கொடையாளர்கள்,பெரியோர்கள்,நண்பர்கள் அனைவர்களும் தொடர்ந்து ஒத்துழைப்பும், உதவியும் தங்களது பங்களிப்பை தாராளமாக செய்வதுடன் இனிய இவ்விழாவில் கலந்து சிறப்பித்து தருமாறும் மிகுந்த அன்புடன் வேண்டி விரும்பி அழைக்கின்றோம்.
தகவல் தொடர்பிற்கு:
ஹாஜி தோல்ஷாப்.எம்.எல்.மொஹிதீன் அப்துல் காதிர் - + 91 9094 252 248,
ஹாஜி சட்னி எஸ்.எ.கே.செய்யது மீரான், ஜித்தா - +966 501 592 134 - satnimeeran@gmail.com
ஜனாப் ஆசிரியர் Z.A.செய்கு அப்துல் காதிர் - + 91 9994 437 398 - rlameelad1985@gmail.com
இவ்வாறு, ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது மற்றும் பொதுநல பேரவை சார்பாக,
சட்னி S.A.K.செய்யித் மீரான்,
ஜித்தா,சஊதி அரபிய்யா. |