சென்னையில் வசிக்கின்ற - சென்னைக்கு வருகின்ற காயல்பட்டினம் நகர மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தகுந்த
வழிகாட்டுதலை அளித்திடும் பொருட்டு அண்மையில் துவக்கப்பட்ட அமைப்பு காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு
மையம் (KCGC).
அவ்வமைப்பின் வேலைவாய்ப்பு குழுவின் ஏற்பாட்டில் மார்ச் 31, சனிக்கிழமை அன்று மாலை 3:00 மணி அளவில் - WHAT EMPLOYERS EXPECT OUT OF A CANDIDATE? என்ற தலைப்பில் MAFOI அதிகாரியும், A CANDIDATE'S PREPAREDNESS FOR INTERVIEWS என்ற தலைப்பில் ETA MELCO நிறுவனத்தின் பொது மேலாளரும் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
அந்நிகழ்ச்சியின் இரண்டாம் பாகமாக எதிர்வரும் சனிக்கிழமை அன்று (ஏப்ரல் 28) சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விரும்பும் காயலர்கள் - தங்கள் சுயவிபரங்களுடன் (பெயர், முகவரி, தொடர்பு எண்) - உடனடியாக
jobs@kcgc.in என்ற ஈமெயில் முகவரியை தொடர்பு கொள்ளவும். மேலதிக விபரங்களுக்கு - பீ.ஏ.கே. சுலைமான் (98410 73994), குளம் முஹம்மது தம்பி (98401 84838), எம்.எஸ். அப்துல் காதர் (ஸ்மார்ட்) [98421 85967] அல்லது முஹம்மது முக்தார் (96771 73790) - ஆகியோரையும் தொடர்பு கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சி - மாலை 4 மணிக்கு -
4th Floor,
Chennai Citi Center,
Dr.Radhakrishnan Salai,
Mylapore,
Chennai - 4.
- என்ற முகவரியில் நடைபெறும்.
தகவல்:
முஹம்மது முக்தார்,
ஒருங்கிணைப்பு குழு, KCGC. |