1. மனிதர்களுக்கேத் தெரியாத போது...மாட்டுக்குத் தெரியுமா? மக்கும் குப்பை...மக்காத குப்பை...? posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்.)[23 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18432
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி திடக் கழிவு மேலாண்மை செயல் திட்ட ஆய்வாளர் திரு,தனிகாச்சலம் இரண்டு நாட்களுக்கு காயல்பட்டிணம் மற்றும் அதன் சுற்றுப்புற புறம்போக்கு நிலங்களில் கொட்டப்படும் குப்பை மற்றும் கழிவுகளை ஆய்வு செய்து வருகின்றார். கழிவுகளை எரியூட்டாமல் மக்கும் குப்பை,மக்காத குப்பை எனப் பிரித்து சேகரிக்கும் பட்சத்தில், மக்கும் குப்பைகளை மண்புழு உரமாக மாற்றவும், மக்காத குப்பைகளை புதிய சாலைகள் அமைக்கும் பணிக்குப் பயன் படுத்தவும் செய்யலாம் என ஆய்வாளர் கருத்து தெரிவித்தார். மக்கள் மத்தியில் குப்பைகளைப் பிரித்து கையாளும் செயல்பாடு பற்றிய போதிய விழிப்புணர்வு வர வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் இரு குப்பைக்கூடைகளை வழங்கி அதில் மக்கும் குப்பை மக்காத குப்பை எனத் தனிதனியாக பெறவேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
நகராட்சியின் குப்பை வண்டிகளில் மிகத் தெளிவாக குப்பைகளைப் பிரித்துப் போடும் படி எழுதியிருந்தும் நம் மக்கள் அதை சற்றும் கண்டுகொள்ளாமல் ஒன்றாகக் கலந்தே கொட்டுகின்றனர். ஆறறிவுள்ள மனிதர்களுக்கேத் தெரிய வில்லை! மக்கும் குப்பை,மக்காத குப்பை! இந் நிலையில் பாவம் மாடுகளுக்கு எங்கேத் தெரியப் போகின்றது? அது படு லாவகமாகக் கூடி நின்று கூட்டஞ்சோறு உண்பதை காண முடிகின்றது. பிளாஸ்டிக் கழிவுகளால் காலா காலத்திற்கும் மக்காமல் மண்ணில் மண்டிக்கிடக்கும் குப்பைகளால் நிலத்தடி நீர் வற்றி வறண்டு போகும் நிலமை ஒரு பக்கம், வாயில்லா ஜீவன்கள் அதை உட்கொண்டு வயிற்று உபாதைகளுக்கு ஆளாகி செத்து மடியும் கொடுமை மறு பக்கம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாத வரையில் நகரில் ஒரு சீர்திருத்தமும் வரப் போவதில்லை!
3. Re:ஒருவேள ப்ளாஸ்டிக் பால் ஏத... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[23 April 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 18440
மாடு பிளாஸ்டிக் பால் கறக்கிறதோ. என்னவோ நிறைய பால் கம்பனிகள் பாலை இன்னும் பிளாஸ்டிக் பையில்தான் அடைத்து விற்கின்றன. ஒருவகையில் அதுவும் "பிளாஸ்டிக் பால்"தான்.
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோதரர்களே........ நம் நகர்மன்றம் குப்பை தொட்டியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று எழுதி இருக்கிறார்களே.... தவிர உள்ளில் பார்டிசன் செய்யவில்லை. படித்தவன் பாட்டை கெடுத்தான்..... எழுதினவன் ஏட்டை கெடுத்தான் என்பார்கள். அது இங்கு ஊர்ஜிதம்.
படித்தவனுக்கே.... மக்கும் குப்பை, மக்காத குப்பை போடும் விதம் தெரியாமல் இருக்கும் போது..... மக்கு களுக்கு தெரியவா செய்யும்.?
மனிதர்களுக்கே......... இது புரியாமல் இருக்கும் போது மாக்களுக்கு இது புரியவா செய்யும்.?
தலைப்பில் "ஒருவேள ப்ளாஸ்டிக் பால் ஏதும் கறக்குமோ...? (?!)"
இதில் என்ன சந்தேகமும், ஆச்சரிய குறியீடும்..? நம் வீடுகளில் யார் மாட்டின் மடுவை பிடித்து பால் கறக்கிறார்கள்...? எல்லாவரும் பிளாஸ்டிக் பையின் மடுவில் இருந்தல்லவா கறக்கிறார்கள்.
6. Re:ஒருவேள ப்ளாஸ்டிக் பால் ஏத... posted byKader K.M (Dubai)[23 April 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18451
வெள்ளை மாடு சிகப்பு மாட்டிடம் கேட்டதாம் மனிதர்களுக்கு
ஆறு அறிவு என்று சொல்கின்றார்களே நண்பா, ஆறாவது அறிவு என்றால் என்ன? ஆறாம் அறிவு என்றால் பகுத்தறிவு என்று சிகப்பு மாடு வெள்ளை மாட்டிடம் சொன்னதும், பகுத்தறிவு என்றால் என்ன? என்று வெள்ளை மாடு கேட்டதாம். சிகப்பு மாடு சொன்னதாம் பகுத்தறிவு என்றால் நன்மை, தீமை (etc.) களை பிரித்து பார்ப்பது. வெள்ளை மாடு கேட்டதாம் மக்கும் குப்பை, மக்காத குப்பையையே பிரித்து அறியாத இவர்களுக்கா .......???
உடனே சிகப்பு மாடு இடைமறித்து இது பெரிய இடத்து சமாச்சாரம், உனக்கு வாய் அதிகமாயிடுச்சு, மரியாதையாக கிடைத்ததை சாப்பிடு. அதிகமாக பேசினால் நாளை காலை சேட்டு காக்கா கடையில் தொங்க வேண்டியதுவரும் !
சகோதரனே! இப்புவியில் உள்ள வளங்கள் அழிய நாமும் ஒரு காரணமாக இருக்கவேண்டுமா? சிந்திப்போம்! செயல்படுவோம்!!
7. Re:ஒருவேள ப்ளாஸ்டிக் பால் ஏத... posted byOMER ANAS (DOHA QATAR.)[24 April 2012] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 18462
தம்பி ரபீக் ஊருக்கு வந்தமா போனமா என்றில்லாமல் ஊரில் நடக்கும் அநியாயங்களை அப்ப அப்ப புட்டு புட்டு வைக்கிறது நன்றாக இருக்கு தம்பி! சபாஸ்! பாராட்டுகிறேன்!
ஆமா மக்கும் குப்பை சரி. மக்காத குப்பைதான் ( பிளாஸ்டிக்) கூடாது என்று நகராட்ச்சி சொல்லிவிட்டது இல்லாமல் அபராதமும் விதிப்போம் என்றும் ,பறை அடிச்சாச்சு! அப்புறம் என்ன குப்பை வண்டியில் மக்கிய குப்பை மக்காத குப்பை என்று இரண்டு போர்டு! முதல்ல குப்பை வண்டிய தினமும் ஒரே வழியில், அதுவும் குறிப்பிட்ட நேரம் நின்று குப்பையினை கொண்டு போக சொல்லுங்கப்பா! பீ பீ என்கிறான்கள் எந்தப்பக்கம் வருகிறான்கள் எந்தப்பக்கம் போகிறான்கள் என்றே தெரிவதில்லை! ஆனா மாதம் முடிந்தா, கரக்டா காசு வாங்க மட்டும் வண்டி 10 நிமிடம் ஸ்டேசனில் நிற்கிறது!
நடக்க முடியாத எத்தனையோ நம் தாய்மார்கள் நம் ஊரில் இருக்கிறார்கள்.அவர்களை அலைகழிக்கும் இந்த நகராட்ச்சி குப்பை வண்டிகளை பின் தொடர்ந்தால் ஒரு மெகா கட்டுரையே எழுதலாம்.
மாட வளக்கிறவன் ஒழுங்கா புண்ணாக்கும், கழனியும் கொடுத்தா, ஏம்பா குப்ப தொட்டி பக்கம் போகப் போகிறது? முதல்ல நகராட்ச்சி குப்பை தொட்டிக்கு மூடி போட பார்க்கணும். இல்லன்னா போட்டோ பிடித்தவருக்கு மட்டுமின்றி அத பார்த்தவருக்கும் குடலை பிரட்டும்தானே! எந்த பக்கம் எந்த நோய் இருக்குமோ ரபீக். இப்படி குப்ப டப்பாக்கு பின்னால் சுத்தாதே தம்பி! அப்புறம் இங்க வந்தா, பலதிய்யா காரன் படிப்பான் தம்பி!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross