காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டரின் வலைப்பணியின் கீழ் இயங்கி வரும் புனித குர்ஆன் கல்லூரி மூலம் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் கோடை விடுமுறையின்போது, கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நடத்தப்படுவது வழமை.
பள்ளிக்கூடத்தில் 08ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் உள்ளூர்-வெளியூர்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டிற்கான பயிற்சி முகாம் வரும் மே மாதம் 01ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, தீனிய்யாத் பிரிவு - ஹிஃப்ழுப் பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது.
திருமறை குர்ஆனின் சிறிய அத்தியாயங்கள் மனனம்,
அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்,
இஸ்லாமிய கொள்கை விளக்கம்,
நபி (ஸல்) அவர்களின் வரலாறு,
நற்குணங்கள்,
குர்ஆன் ஓதத் தெரிந்தோருக்கு முறையான உச்சரிப்பு (தஜ்வீத்) பயிற்சி
ஆகிய அம்சங்கள் அடங்கிய பாடத்திட்டம் முதற்பிரிவான தீனிய்யாத் பிரிவில் இடம்பெறுகிறது.
திருமறை குர்ஆனின் அஸ்ஸஜ்தா, யாஸீன், அர்ரஹ்மான், அல்வாகிஆ, அல்ஜும்ஆ, அத்தஹ்ர் போன்ற அத்தியாயங்கள் மனனம்,
துஆக்கள் மனனம்,
நற்குணங்கள்
ஆகிய அம்சங்களைக் கொண்ட பாடத்திட்டம், இரண்டாம் பிரிவான ஹிஃப்ழுப் பிரிவின் கீழ் நடத்தப்படுகிறது.
தினசரி வகுப்புகளுக்கு உள்ளூர் மாணவர்கள் தினமும் காலை 09.00 மணி முதல் 01.30 மணி வரை இருத்தல் வேண்டும்.
வெளியூர் மாணவர்களுக்காக,
காயல் மாநகரின் அறுசுவை உணவு,
விளையாட்டுகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசுகள்,
நடத்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வு முடிவுகளின்படி பரிசுகள்,
அகன்ற திரையில் பயனுள்ள அழகிய காட்சிகள்,
சிறப்பு தலைப்புகளில், சிறப்பழைப்பாளர்களின் உரைகள்,
கோடையின் வெப்பத்தைத் தணிக்க, பசுமை நிறைந்த தோப்புகளில் உற்சாகக் குளியல்
ஆகிய சிறப்பம்சங்கள் வெளியூர் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்புக்கான பாடத்திட்டம் முற்றிலும் குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியுள்ள மாணவர்களை சேர்க்க விரும்புவோர், 98421 77609> 91500 50554> 91500 50556> 91504 48312 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தமது விண்ணப்பங்களை அளித்து சேர்க்கையை உறுதி செய்துகொள்ளலாம் என்றும், தஃவா சென்டர் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. |