ஏப்ரல் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து இரண்டாம் கட்ட முகாம் நடைபெற்றது.
அன்றைய தினம் காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மற்றும் பொதுநல அமைப்புகளின் வளாகங்களில் முகாம் நடத்தி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாத (போலியோ) நோய் தடுப்பு சொட்டு மருந்தளிக்கப்பட்டது.
காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் இயங்கி வரும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற வளாகத்தில் நடைபெற்ற முகாமில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா கலந்துகொண்டு ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்தளித்தார். அவரைத் தொடர்ந்து அதே முகாமில் டாக்டர் ராணி டப்ஸ் மற்றொரு குழந்தைக்கு சொட்டு மருந்தளித்தார்.
அன்றைய தினம் அனைத்து மையங்களிலுமாக மொத்தம் 2,317 குழந்தைகளுக்கு சொட்டு மருந்தளிக்கப்பட்டது.
முகாமில் மருந்தளிக்கப்படாத குழந்தைகளை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து சொட்டு மருந்தளிக்கும் பணி மறுநாள் 16.04.2012 அன்று (நேற்று) காலை முதல் மாலை வரை தன்னார்வப் பணியாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 476 குழந்தைகளுக்கு சொட்டு மருந்தளிக்கப்பட்டது.
முகாம் வாரியாக சொட்டு மருந்தளிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை பட்டியல் பின்வருமாறு:-
காயல்பட்டினத்தில் முகாம் ஏற்பாடுகளை காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்தின் அதிகாரிகளான துளசிராமன், சோமசுந்தரம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர். |