ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின், புனித மக்கா உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த டிசம்பர் 7 , 2011 நடந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக மார்ச் மாதம் 16 , 2012 , வெள்ளி கிழமை மாலை சகோதரர் Y .M . முஹம்மத் சாலிஹு அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பொறியாளர். பஷீர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். KWA - ஜித்தா காயல் மன்றத்தின் செயலாளர் சகோ. செய்யத் இப்ராஹீம், செயற்குழு உறுப்பினர்கள் பொறியாளர். நசீர், சீனா. மொஹ்தூம் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஜித்தாவிலிருந்து சகோ. சட்னி செய்யத் மீரான் கலந்து கொண்டார். முன்னதாக சகோ. கத்தீப்.மாமுனா லெப்பை கிராஅத் ஓதி கூட்டத்தை துவங்கி வைத்தார். கூட்டத்திற்கு வந்த அனைவர்களையும் மன்ற செயற்குழு உறுப்பினர். Y .M . முஹம்மத் ஸாலிஹ் வரவேற்றார்.
மன்றத்தின் செயல்பாடுகள், சந்தாவின் அவசியம், ஆற்ற வேண்டியபணிகள் குறித்து சுருக்கமாகவும், அழகிய முறையிலும் மன்ற செயலாளர்கள், மற்றும் கூட்ட தலைவர் எடுத்துரைத்தனர். பின்னர் ஏற்கனவே முந்தைய கூட்டத்தில் முடிவெடுத்து, ஜித்தா வில் நடைபெற்ற செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியபடி மக்காவிற்கு புனித பயணம் மேற்கொள்ளும் நமதூர் ஹாஜிகளுக்கு சேவை செய்யும் பொருட்டு மக்கா காயல் சேவை மற்றும் வழிகாட்டு கமிட்டி அமைக்கபட்டு அதன் உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் பின்வரும் சேவைகளை ஹாஜிகளுக்கு வழங்குவது என்று தீர்மானிக்கபட்டது.
1 . மக்காவில் அளிக்கப்படும் மருத்துவ வசதிகள் / மருத்துவமனைகள் மற்றும் உதவிகள் குறித்து உரிய வழிகாட்டுதல் அளிப்பது.
2 . புனித பயணம் மேற்கொள்ளும் காயலர்கள் அவர்களின் தவறிய உடமைகள் மற்றும் யாத்திரிகர்கள் குறித்த உரிய தகவல்கள் அளிப்பது.
3 . வயதான மற்றும் நோயுற்ற யாத்ரிகர்கள் வசதிக்காக, அவர்களின் கோரிக்கை ஏற்ப சக்கர வண்டி (Wheel Chair ) இலவசமாக புனித ஹரத்தில் அளிக்கப்படும் சேவையை பயன்படுத்தி கொள்ள தக்க உதவிகள் மட்டும் தகவல்கள் அளிப்பது.
4 . புனித ஹரமை சுற்றயுள்ள முக்கிய இடங்களை சுற்றி பார்க்க (ஜியாரத்) வசதிகள் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்குவது.
5. உம்ரா யாத்திரை வரும் காயலர்களுக்கு உணவு ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் அளிப்பது.
இந்த காயல் மக்கா வழிகாட்டு அமைப்பின் உறுப்பினர்கள் விபரம் மற்றும் தொடர்பு விபரங்கள் குறித்த தகவல்கள் முழு விவரங்களுடன் அடுத்த KWA செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு வெளியிடப்படும்.
கூட்டத்திற்கு பணி நிமித்தமாக சில மக்கா உறுப்பினர்கள் கலந்துகொள்ள முடியாவிட்டாலும், மற்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் நடந்துகொண்டிருந்த அதேவேளையில் மற்றொரு புறத்தில் இல்லத்தரசிகளின் இனிய சங்கமமும் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் காயல் தனிசுவையுடன் YM ஸாலிஹ் அவர்களால் கஞ்சி, சமூசா, மைசூர்பாகு, மற்றும் ஹல்வா பரிமாறப்பட்டது.
இறுதியாக சகோ. செய்யத் அஹ்மத் அவர்கள் நன்றி கூற, கப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
தகவல்:
சட்னி செய்யத் மீரான்,
ஜித்தாஹ் காயல் நற்பணி மன்றம்.
|