இந்தோனேஷியா நாட்டில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளின்படி 8.9 என நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அடையாளங்கள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் உணரப்பட்டுள்ளது. சென்னையில் பூமி அதிர்ச்சியை உணர்ந்த பொதுமக்கள் தமது குடியிருப்புகளிலிருந்து வேக வேகமாக வெளியே வந்து நடு வீதியில் கூடி நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்று மாலை 05.00 மணி முதல் 07.00 மணிக்குள் ஆழிப்பேரலை (சுனாமி) எதிர்பார்க்கப்படுவதால், கடலோரப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாறிச் செல்லுமாறு, தூத்துக்குடி மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காயல்பட்டினம் கடற்கரைப் பகுதிக்கு வந்த திருச்செந்தூர் வட்டாட்சியர், கடலோரப் பகுதியிலுள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாறிச்செல்லுமாறு கேட்டுக்கொண்டார். |