தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.
காயல்பட்டினம் நகராட்சியின் கோரிக்கைகளை அமைச்சர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும் நேரில் வழங்க சென்னை வந்திருந்த - நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குழு, தங்கள் பயணத்தின் மூன்றாம் நாளான செவ்வாய் (ஏப்ரல் 3) அன்று - மதியம் 12:30 முதல் 1:00 மணி வரை - தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை நேரில் கண்டுகளித்தது.
சட்டப்பேரவையின் மூத்த அலுவலர்கள் - பி.எஸ்.கே. சிங்காரவேலன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் - சட்டப்பேரவை கூட்ட நிகழ்வுகளை காண்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முன்னதாக - உறுப்பினர்களின் விஜயத்திற்கான ஏற்பாடுகளை செய்ய மார்ச் 21 அன்று சென்னை வந்திருந்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா - சட்டப்பேரவை செயலாளர் - ஏ.எம்.பி. ஜமாலுதீனை நேரில் சந்தித்து - நகர்மன்ற உறுப்பினர்கள் பேரவை நிகழ்ச்சிகளை காண்பதற்கான அனுமதி கோரியிருந்தார்.
1. Re:தமிழக சட்டசபையில் நகர்மன்... posted bymackie noohuthambi (colombo)[05 April 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 18077
சகோதரி ஆபிதா அவர்கள் நகரமன்ற தலைவர் வேட்பாளராக களம் இறங்கியபோது அவரை எதிர்த்து கூட்டம்போட்டு முன்னாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக கழக முன்னணி பேச்சாளர் ஒருவர் பேசும்போது, ஆபிதா அவர்கள் தலைவராக வரமாட்டார் அப்படியே ஒரு வேளை அதிசயம் நடந்து அவர் வந்தாலும் புரட்சி தலைவி அவர்களை சந்திக்க சென்றால், யாரிது, ஊரையே எதிர்த்து பெரியவர்களையே எதிர்த்து நின்றவளா, சீ வெளியே போ என்று சொல்லமாட்டார்களா என்று ஏளனம் பேசியவர்கள் இப்போது என்ன சொல்ல போகிறார்கள்.
"பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" என்று சங்கத்தமிழ் நன்றாகவே அன்று சொல்லியிருக்கிறது, "உருவு கண்டு எள்ளாமை வேண்டும், உருள் பெருந் தேர்க்கு அச்சாணி அன்னார உடைத்து" என்று வள்ளுவம் சொல்கிறது. அதை எல்லாவற்றுக்கும் மேலாக நபிகள் நாயகம் இளைஞர்களைத்தான் " YAA MAUSHARA SHABAAB " என்று அழைத்து அவர்கள் கரங்களில் பொறுப்புக்களை ஒப்படைத்தார்கள்.
எனவே இளைஞர்களை உட்சாகபடுதுங்கள். பெரியவர்கள் ஒதுங்க வேண்டாம் அவர்களுக்கு துணையாக இருங்கள். தவறு செய்தால் தட்டி கேளுங்கள். நன்மை செய்தால் தட்டி கொடுங்கள்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன மகளை சான்றோன் எனக்கேட்ட தாய் எனபது போல் சகோதரி ஆபிதாவின் எழுச்சிமிக்க பயணம் கண்டு அவர்கள் தாய் மகிழ்ச்சி அடைவார்கள். வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் பயணம் சட்ட மன்றத்தை பார்வை இட்டதோடு நின்று விடக்கூடாது. "கொக்கொக்க கூம்பும் பருவத்து அதன் குத்தொக்க சீர்த்த இடத்து "என்று வள்ளுவம் சொல்வது போல் அங்கிருந்து முதல்வரை சந்தித்து ஊருக்கு ஏதாவது சாதனைகளை கொண்டுவாருங்கள்.
2. அந்த மக்களின் நினைப்பை வீண் செய்திட வேண்டாம்...? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்)[05 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18078
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை நேரில் போய் சந்தித்து இருக்கிறீர்கள் அப்படியே தமிழக முதலமைச்சரை சந்தித்தால் மிகவும் நன்று..
தமிழக முதலமைச்சரை நேரில் சந்திக்காமல் பதவி உத்திரவாதம் இல்லாத பல துறை அமைச்சர்களை சந்தித்து நகருக்கு ஒரு திட்டமும் நடக்க வாய்ப்புகள் இல்லை என்றே கருதுகிறேன்...!
நகரில் பெரும்பாலானோர் தாங்களின் சென்னை பயணம் முதல்வரை சந்தித்து நகரின் கிடப்பு திட்டத்தை அமுல் படுத்த.. கோரிக்கை வைக்க போய் இருக்கிறார்கள்... என்றே நினைக்கின்றனர்... அந்த மக்களின் நினைப்பை வீண் செய்திட வேண்டாம்...?
தாங்கள் தமிழக முதல்வரை சந்திப்பதால் ஊர் மக்களின் நன் மதிப்பை பெறுவீர்கள்.. அதில் சந்தேகம் அல்ல...
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - வி சி க
3. Re:தமிழக சட்டசபையில் நகர்மன்... posted byMohamed Adam Sultan (kayalpatnam)[07 April 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 18094
தமிழக முதல்வரை சந்தித்தால்தால்தான் செயலாற்ற முடியும் என்றல்ல, அத்துறை அமைச்சர்களை முறைப்படி சந்தித்து முறையிட்டாலே போதும்.
அக்காரியத்தை தான் நம் தலைவி அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்களுடன் நமதூர் ஆளும் கட்சியில் பொறுப்பிலிருக்கும் நியாய உணர்வுள்ள சகோதரர்கள் உறுதுணையாய் இருந்திருக்கிறகர்கள். இதை நேரிலும் என்னிடம் சொன்னார்கள், கிடைத்த செய்திகளும் உறுதிபடுத்தின. எப்படியாயினும் உண்மையான முயற்சிக்கு அல்லாஹ் வெற்றியை தருவான்.
சகோதரர் மக்கி அவர்களே, நீங்கள் குறிப்பிட்ட விசயம், தேர்தல் காலத்தில் உணர்ச்சிவசப்பட்டு கருத்து குருடர்கள் கக்கிய வார்த்தைகள். எந்த கல் நெஞ்சுள்ள முதல்வாராக இருந்தாலும் ஒரு நகராட்சி பெண் தலைவியை சீ வெளிய போ என்று சொல்ல மாட்டார்.
ஆகவே அந்த அரசியல்வாதியின் அசிங்கத்தை அடிக்கடி அம்பலபடுத்தாதீர்கள். மக்கள் மறந்திருக்கிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross