Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:56:25 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8261
#KOTW8261
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 5, 2012
500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3455 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய மின் கட்டணம் நடைமுறைக்கு வந்தது. பெரும் அளவில் மின்கட்டணங்கள் - எல்லா வகையான பயனீட்டாளர்களுக்கும் - உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின் கட்டணம் குறைக்கப்படும் என ஏப்ரல் 3 அன்று தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். முதல்வர் அறிவிப்பின் விபரம் வருமாறு:-

1. இரு மாதங்களில் 100 யூனிட்டுகள் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 10 பைசாவில் இருந்து 1 ரூபாயாக குறைக்கப்படும்.

2. இரு மாதங்களில் 200 யூனிட்டுகள் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 80 பைசாவில் இருந்து 1 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும்.

3. இரு மாதங்களில் 500 யூனிட் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம், முதல் 200 யூனிட்டுகளுக்கு 3 ரூபாயிலிருந்து 2 ரூபாய் என்றும், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான கட்டணம் 3 ரூபாய் 50 பைசாவிலிருந்து 3 ரூபாய் என்றும் குறைக்கப்படும்.


இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:500 யூனிட் வரை மின்சாரம் ...
posted by Kader K.M (Dubai) [05 April 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18071

ஆடி தள்ளுபடியோ? கேக்கிறவன் ..........(புரிகின்றவர்களுக்கு புரிந்தால் சரி!) முதலில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பில் கட்டுவதை மாற்ற வேண்டும். மாதாமாதம் கட்டினால் குறிப்பிட்ட அந்த கட்டனதிற்க்குள் அடங்கும். ஒரு யூனிட் கூடுதல் ஆனாலும் அடுத்த slab இல் மாறிவிடும். நஷ்ட்டம் நமக்குதான். சிந்திப்பீர் ! செயல் படுவீர்!! வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:500 யூனிட் வரை மின்சாரம் ...
posted by MOHD IKRAM (saudi arabia) [05 April 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18074

அம்மா வின் ஆட்சியில் நம் எல்லோருக்கும் எலெக்ட்ரிக் பில் கண்டிப்பாக குறைவாகத்தான் வரும் . ஏன் என்றால் கரண்ட் ஒரு நாளைக்கு மிக குறைவகதானே வருகிறது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:500 யூனிட் வரை மின்சாரம் ...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [05 April 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18075

அன்புள்ள கணவருக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைவர்களும் நலம். தாங்கள் நலமறிய ஆவல். பற்பல வருடங்களுக்கு பின்பு கடிதம் வாயிலாக தொடர்பு கொள்கிறேன். போனில் பேச ஆரம்பித்தால் உடனே உங்களுடைய தாயார் அருகில் வந்து அமர்ந்துகொள்கிறார்கள்.

தற்போது விலைவாசிகள் எல்லாம் அதிகரித்து விட்டன. அம்மாவின் ஆட்சியில் பால் முதல் பஸ் வரை அனைத்தும் பல மடங்கு உயர்ந்து விட்டன. போதாது என்று கரண்ட் கட்டணமும் அதிகரித்து விட்டன. வீட்டு செலவுகள் பன்மடங்கு எகிறி விட்டது.

ஆனால், தாங்கள் தங்களின் தாயார் மூலம் தரும் மாத வரி இன்னும் அதே நிலைமையில்தான் உள்ளது. ஆகவே அம்மாவின் ஆட்சியை நினைத்து, உங்கள் அம்மாவிடம் சொல்லி மாத செலவு தொகையை அதிகரித்து தரவும்.

அன்புடன்,
உங்கள் மனைவி.

(Forwarded this letter to my General Manager )

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:500 யூனிட் வரை மின்சாரம் ...
posted by Matheen (Milton Keynes, UK) [05 April 2012]
IP: 90.*.*.* United Kingdom | Comment Reference Number: 18076

Ziaudden kaka's comment is very nice. (has got both humour and content).

Inflation in India is crazy. May be in the next few years, the yearning we do in foreign countries won't be sufficient to satisfy family needs at Kayal.

அது சரி General Manager க்கு பார்வர்ட் பண்ண ஈமெயில் அரபிக் translate பண்ணிங்கள? otherwise he may think you have drawn a nice art and will give you only verbal appreciation (no fluoos :)

Sorry for my Thanglish


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:500 யூனிட் வரை மின்சாரம் ...
posted by OMER ANAS (DOHA QATAR.) [05 April 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 18082

அன்புள்ள மனைவிக்கு அஸ்ஸலாமு அழைக்கும்.

ரொம்ப நாள் கழித்து உன் கடிதம் கண்டு மனம் ரொம்ப பூரிப்பானது. உன் எண்ணமும்,எழுத்தும்,சரியே! எனக்கும் உன் மாதவாரியை கூட்டி கொடுக்கவே ஆசை.எது விசயமா GM அவருக்கு பெட்டிசன் போட்டேன். அவர் என்னடான்னா இந்த வருடம் வாங்கின சம்சாரம் ரொம்பஅதிகம் மகர் கொடுத்து வாங்கி விட்டேன். அதனால் கம்பனிக்கு நஷ்ட்டம்.

இன்ஷாஅல்லாஹ் அடுத்த வருடம் கம்மியான மகருக்கு சம்சாரம் கிடைக்கும் போது உங்கள் சம்பளத்தை கூட்டுகிறேன் என்கிறார்! என்ன செய்வது? இவ்வளவு நாள் பொறுத்துக் கொண்டே.இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள் என் செல்லமே!

என்றும் அன்புடன் உன்
மணாளன்!
உமர் அனஸ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அன்புள்ள மகனுக்குத் தாயார் எழுதிக் கொள்வது....!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டணம்.) [06 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18086

அன்புள்ள மகனுக்குத் தாயார் எழுதிக் கொள்வது, நலம், நலமறிய ஆவல்,இக் கடிதம் ஆள் மூலம் கொடுத்து அனுப்புகின்றேன்.

ஆள் புறப்பட்டு போவதாக உன் மனைவிகூட சொல்ல வில்லை! பக்கத்து வீட்டு சாச்சப்பா சொல்லி தான் தெரியும். உடனேயே வாப்பாவை முத்து ஸ்வீட்டுக்கு அனுப்பி உனக்குப் பிடித்த மைசூர் பாக்கும், காரச்சேவும் இக் கடிதம் கொண்டு வரும் நபர் வசம் கொடுத்து விடுகின்றேன்.பெற்றுக்கொண்டு முடிந்தால் ஃபோன் போடவும்.

வாப்பா என் அருமை கண்மணி நீ அங்கு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்றாய் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை. விலைவாசி உயர்ந்தாலும்,கரண்ட் பில்,ஃபோன் பில், தண்ணீர் பில்,பால்,பள்ளிக்குட செலவுகள் பன்மடங்கு உயர்ந்தாலும், நீ உன் மனைவிக்கு கொடுக்கும் மாத வரி என்னமோ குறைவானதாக இல்லை! இரண்டு பிள்ளைகளுக்கும் அவளுக்கும் அது போதுமானதே!

தேவையில்லாத வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி கணவனின் வருமானத்திற்கு ஏற்றபடி குடும்பத்தை நடத்திச் செல்பவள் தான் நல்ல மனைவி. உன் மகள் ஓதி முடித்து விட்டாள் சரி ஹைர். அதற்காக ஊர் முழுக்க பாச்சோறு பகிர வேண்டும் எனும் அவசியம் என்ன? நீ படும் பாடு உன்னைப் பெற்ற தாய் நான் அறிவேன். தாரம் அறிவாளா? என்பது தெரியவில்லை.

கொடுக்கிறதெல்லாம் காணாது,காணாது என்று பணத்தாசை பிடித்தலையும் உன் மனைவியின் சொல்லுக்கு நீ ஆடிக்கொண்டிருந்தால் நாளை உன் மளுக்கு நீ எதை சேமித்து வைக்க முடியும்?

வரும் ஞாயிற்றுக் கிழமை உன் மனைவி வீட்டில் எல்லோரும் தோப்புக்குப் போகின்றார்களாம். களறி சோறு,கத்திரிக்காய் மாங்காய், கோழி பொறித்து சாப்பிட சமையல் கூலி உட்பட ஒரு ஆளுக்கு ஐந்நூறு ரூபாயாம்,பிள்ளைகளுக்கு இரு நூற்றைம்பது. உன் கணக்கிற்கு, மனைவி,மக்கள்,மாமா, மாமி,கொளுந்தியாள்,மச்சினன் இப்படி இரண்டாயிரத்தி ஐந்நூறு ரூபாய் வரும்,அடுத்த மாதம் ஸ்கூல் திறப்பதால்,புத்தகங்கள்,யூனிஃபார்ம்,ஃபீஸ் என பல செலவுகலும் உள்ளது.நீ புத்தியோடு நடந்து கொள்.

உன் தங்கையைப் பார்! மச்சான் அனுப்பிக் கொடுக்கும் சொற்ப தொகையில் தான் உண்டு, தன் பிள்ளைகள் உண்டு என வாயை வயிற்றைக் கட்டி சிக்கனமாக சிறுகச் சிறுக சேமித்து வீட்டுக்குத் தேவையான வாஷிங் மெஷின்,ஃபிரிட்ஜ் எடுத்துப் போட்டுள்ளாள். அடுத்த மாசம் மச்சான் ஊர் வர இருப்பதால் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றாள்.அறியவும்.

நம் வீட்டு நிலமைகள் இப்படி இருக்க உன் மனைவி வீட்டு நிலமைகளைக் கொஞ்சம் நீ நிதானத்தோடு எண்ணிப்பார்! உனக்கும் வயது போய்க்கொண்டிருக்கின்றது. மனைவி மக்களுக்கு கொடுப்பதை இந்த தாய் ஒரு போதும் தடுக்க மாட்டேன்.ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பதைத் தான் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றேன்.

உம்மாவுக்கும் காடு வா,வா என்கிறது வீடு போ,போ என்கிறது. நீ எதற்கும் கவலைப் படாதே! உடம்பை நன்றாகப் பார்த்துக்கொள். யாராவது ஊர் வந்தால் அவர்களிடம் முடிந்தால் மீசைக்காரத் தைலம் ஒரு பாட்டில் கொடுத்தனுப்பு. முட்டு உளைச்சல் தான் கொஞ்சம் வேதனையாக உள்ளது.

மருமக்கள் எல்லோரும் உன்னைத் தேடுகின்றனர். வாப்பா உனக்கு ஸலாம் சொல்லச் சொன்னார்கள். மற்றவை உன் மேலன பதில் கண்டு, வஸ்ஸலாம்.

இப்படிக்கு,
உன் அன்புத் தாயார்.

குறிப்பு:
மேற்கூறிய கடிதம் ஒரு தாயாருக்காக எழுத்துதவி புரிந்தது,
-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மின்சாரமும் சம்சாரமும்!!
posted by Salai. Mohamed Mohideen (USA) [06 April 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 18090

மூட்டை மூட்டையாய் பொதியை கழுதையின் மீது ஏற்றி வைத்து விட்டு, சுமைதாங்காமல் அது தள்ளாடும் போது மேய்ப்பாளான் ஒரு துரும்பை எடுத்து அக்கழுதை பார்க்கும்படி தூக்கி வெளியே எறிந்து விட்டால்... 'அது' தன் சுமை குறைந்து விட்டது போல நினைத்துக்கொள்ளுமாம். அது போலத்தான் நாமும் இந்த மின்கட்டணம் குறைப்பு... கண் துடைப்பும்!!

உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வாதாரம் / சம்பளம் ஒவ்வொரு வருடமும் உயருதோ இல்லையோ ஆனால் வருடம் தவறாமல் மனிதனின் அத்தியாவசிய பொருள்களாகிய பால், பஸ் கட்டணம், மின்சாரம், பெட்ரோல் , மண்ணெண்ணெய், சிலிண்டர் என அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்துக் கொண்டே போகின்றது. குடும்பத்தலைவரின் வருமானத்தை மட்டுமே வைத்து ஒரு குடும்பத்தை நிம்மதியாக நடத்துவதென்பது அவ்வளவு எளிதல்ல என்ற நிலை.

நமது வாசர்களின் கடிதப்போக்குவரத்து ரசிக்கும் படியாக உள்ளது. ஒரு காலத்தில் இதுமாதிரி 'தாங்கள்' எழுதிய கடிதப் போக்குவரத்தை நம்மிடம் பகிர்ந்து... மனைவியிடம் சொல்லத் தயங்கும் தங்களது கஷ்டங்களை மறைமுகமாக ஊடங்கள் வாயிலாக சொல்கிறார்களோ என்னவோ.

ஒரு காலத்தில் அபுல் காசிம் காக்கா, "நாளைக்கு 'ஜித்தாக்கு' ஆள் போவுது கடிதம் குடுக்கனும்னா இன்னைக்குலே 'சபையர் மெடிக்கல்லே' கொடுத்திருங்க" என்று சொல்லிவிட்டு போவார். அந்த சப்த்தத்தை நமதூரில் இப்பொழுது கேட்க முடியவில்லை.

சவுதியில் இருக்கும் என்னுடைய மாமாமார்களுக்காக கம்மாவிடம் காசு வாங்கி (கையூட்டுப் பெற்று) கடிதம் எழுதி நாட்கள்தான் நினைவுக்கு வருகின்றது.

நவீன யுகத்தில் இது போன்ற கடிதப் போக்குவரத்து () குறைந்து விட்டதால் நம்மில் பெரும்பாலானோருக்கு கல்லூரி படிப்பிட்கு (பரிட்ச்சை பேப்பரில்) பிறகு இது போன்று பேனா கொண்டு எழுதும் பழக்கம் அறவே போய்விட்டது. தமிழில் சொல்லும் கமன்ட்சை கூட கணினி கொண்டுதான் டைப் பண்ண வேண்டியதிருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:500 யூனிட் வரை மின்சாரம் ...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [07 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18101

மனைவி கணவன் கடிதமெல்லாம் சரிதான். இன்னும் உம்மாவுக்கு அனுப்பி மனைவிக்கு மாசப்படி கொடுக்கும் நிலைதான் நிலவுகிறதா...?கஷ்ட்ட காலமே...!இதை எதிர்த்து யாராவது கமெண்ட்ஸ் எழுதுவார்கள் என எதிர் பார்த்தேன். பயனில்லை.

இன்னுமொன்று....மின்சாரம் இல்லை என்பதால் மின்கட்டணம் ஒன்றும் குறைவாக வராது. மீட்டர் ஓடியபடிதான் இருக்கும் நீங்கள் உங்கள் வீட்டு மீட்டரை OFF செய்து வைத்தால் மட்டுமே அது ஓடாது கட்டணமும் குறையும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. கருத்தாளம் மிக்க நகைச்சுவைகள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [07 April 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18103

இங்கே கருத்துக்கள் பதிவு செய்த இளவல்கள் ஜியா, ரஃபீக் மற்றும் என் அன்பு மச்சான் சுஐப் ஆகியோர் மிவும் நகைச்சுவையாக ஆனால் பட்டவர்த்தமான சில உண்மைகளை மிகவும் எதார்த்தமாக வெளிகொனர்ந்திருக்கிறனர். பாராட்டுக்கள்.

ஆனால் நாம் இங்கே சிந்திக்கவேண்டிய விஷயம் உம்மாவிற்கு பணம் அனுப்பி பொண்டாட்டியிடம் கொடுக்க சொல்லும் பழக்க வழக்கம் இப்போது தேவைதானா? அந்தக்காலத்தில் இதையெல்லாம் பொறுத்துக்கொண்ட பொண்டாட்டி, இப்போது இல்லையே. தான் தன் கணவர் என்ற POSSESSIVENESS கூடிவிட்ட இந்தக்காலகட்டத்தில் நாம் கொஞ்சம் சிந்திக்கத்தான் வேண்டும். அதேபோலே தாயாக இருத்தாலும் தாரமாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் இருக்கும், ஒருவர் செய்வது அவருக்கு சரியாக இருக்கும் ஆனால் மற்றவருக்கு அப்படி இருக்க வேண்டியது இல்லையே. அதனால் இருவரும் எழுதுவதும் செய்வதும் நமது நன்மைக்காக வேண்டிதான் இருக்கும். ஆனாலும் எதையும் தீர விசாரிக்காமல் தயவுசெய்து விபரீதமான முடிவுகளை எடுத்து விடாதீர்கள். இப்படித்தான் பல குடும்பங்கள் தாய் தாரத்திற்கு இடையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்றன. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் இப்படிப்பட்ட சிக்கல்களிலிருந்து காப்பாற்றுவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:500 யூனிட் வரை மின்சாரம் ...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [07 April 2012]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 18108

அன்புள்ள ஜியா பாய் அவர்களுக்கு ,

அஸ்ஸலாமு அழைக்கும் . நலம் , நலமறிய ஆவல் . தங்கள் மனைவியின் கடிதத்தை இந்த இணையதலத்தின்மூலம் பார்க்க நேர்ந்தது . உங்களுக்குள் இருக்க வேண்டிய அந்தரங்க விஷயங்கள் இப்படி வெளியே வந்துவிட்டதே என்று மனது மிகவும் வேதனைப்படும் வேளையில் , என் மனைவியும் எனக்கு மின்னஞ்சல் மூலமாக " ஜியாபாய் வீட்டுலஎல்லாம் மாதவரி கூட்டி கேக்குறாங்களே , எனக்கும் கூட்டி தாங்கோ ன்னு கேட்குறா . ( சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்துட்டீங்க )

மேலும் உங்கள் மனைவி உங்களுடன் போனில் பேசும் சமயம் , உங்கள் தாயார் அறிகிலே இருப்பதாக தெரிகிறது ! இதற்குத்தான் நம்ம ஊர் வழக்கப்படி , மனைவி அவளுடைய தாயாருடனேயே இருப்பது நல்லது .

சரி போகட்டும் , உங்கள் General Manager இடம் இருந்து என்ன பதில் வந்தது ?

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved