தமிழகத்தில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று துவங்கி, 23.04.2012 திங்கட்கிழமையுடன் நிறைவுறுகிறது.
சென்ற கல்வியாண்டில் 01ஆம், 06ஆம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் நடைபெறும் முதல் பொதுத் தேர்வு இதுவாகும். நடப்பாண்டில், சுமார் 12.5 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.
காயல்பட்டினத்திலிருந்து 516 பேர் தேர்வெழுதுகின்றனர்.
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 082 மாணவர்களும்,
எல்.கே. மேனிலைப்பள்ளியிலிருந்து 115 மாணவர்களும்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 015 மாணவ-மாணவியரும்,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 142 மாணவியரும்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 125 மாணவியரும்,
சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப்பள்ளியிலிருந்து 025 மாணவியரும்,
எல்.கே.மெட்ரிக் மேனிலைப்பள்ளியிலிருந்து 012 மாணவியரும்
இவ்வாண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.
காயல்பட்டினத்தில், எல்.கே.மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர். தேர்வுகள் காலை 10.00 மணிக்கு தேர்வு துவங்கி, நண்பகல் 12.45 வரை நடைபெறும்.
[செய்தி திருத்தப்பட்டது @ 00:05/05.04.2012] |