சென்னையில் வசிக்கின்ற - சென்னைக்கு வருகின்ற காயல்பட்டினம் நகர மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தகுந்த
வழிகாட்டுதலை அளித்திடும் பொருட்டு அண்மையில் துவக்கப்பட்ட அமைப்பு காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC).
அவ்வமைப்பின் வேலைவாய்ப்பு குழுவின் ஏற்பாட்டில் மார்ச் 31, சனிக்கிழமை அன்று மாலை - WHAT EMPLOYERS EXPECT OUT OF A CANDIDATE? மற்றும் A CANDIDATE'S PREPAREDNESS FOR INTERVIEWS என்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியினை வழிநடத்திய வல்லுனர்கள் கேப்டன் நடராஜ் (ETA Melco DGM HR-Admin) மற்றும் அன்ட்லின் ஜோ (Mafoi Consultants - HR Consultant) ஆகியோரை KCGC இன் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் H.N. சதக்கத்துல்லாஹ் - ஏற்பாடு செய்திருந்தார். வேலைவாய்ப்பு குழு உறுப்பினர் V.M.I.S. முஹம்மது மொஹிதீன் - நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.
தேநீர் இடைவேளையோடு இரு அமர்வுகளாக நடந்த இந்நிகழ்ச்சி முழுவதையும் அன்ட்லின் ஜோ - வழி நடத்தினார்.
மாணவர்கள் Resume Writing மற்றும் Group Discussion போட்டிகள் நடைபெற்றது. கலந்துக்கொண்ட மாணவர்கள் - தங்களுக்கு இது புது அனுபவம் என கருத்து தெரிவித்தனர்.
Resume Writing போட்டியில் வெற்றிப்பெற்ற சேக் சலாஹுதீனுக்கு அன்ட்லின் ஜோ பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தி தந்த அன்ட்லின் ஜோ க்கு - KCGC சார்பாக - வேலைவாய்ப்புக்குழு உறுப்பினர் P.A.K. சுலைமான் நினைவு பரிசு வழங்கினார்.
குளம் முஹம்மது தம்பியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
ஏப்ரல் மாதம் இறுதியில் இது போன்ற நிகழ்ச்சி மீண்டும் நடத்தப்படும் என்றும் அதில் கூடுதல் மாணவர்கள், இளைஞர்கள் கலந்துக்கொண்டு பயனடையுமாறும் KCGC சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்:
முஹம்மது முக்தார்,
ஒருங்கிணைப்பு குழு, KCGC. |