இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காயல்பட்டினம் கிளை அலுவலக வெற்றுப் பணியிடத்திற்கு புதிதாக பெண் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வங்கியில், கடந்த சில காலமாக நிலவி வந்த அலுவலர் பற்றாக்குறை காரணமாக பெண்கள் பகுதியிலிருந்து பெண்கள் வங்கிச் சேவையைப் பெற்றிட இயலாத நிலை இருந்து வந்தது.
இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், வங்கியின் காயல்பட்டினம் கிளை மேலாளருக்கு நேரிலும், வங்கியின் தூத்துக்குடியிலுள்ள மண்டல மேலாளருக்கு அஞ்சல் வழியிலும் கோரிக்கைக் கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது காயல்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புதிதாக ஒரு பெண் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், பெண்கள் மீண்டும் தமது தனிப்பகுதியிலிருந்தவாறே வங்கிச் சேவைகளைப் பெற்றிட இயலும் என்று தெரிகிறது. |