வரும் ஏப்ரல் மாதம் 02ஆம் தேதியன்று, அரிமா சங்க தூத்துக்குடி மாவட்ட ஆளுநர் காயல்பட்டினம் வந்து, துளிர் பள்ளியில் மூலிகைத் தோட்டத்தையும் திறந்து வைக்கிறார். விபரம் பின்வருமாறு:-
அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் வருடாந்திர வருகைக் கூட்டம், வரும் 02.04.2012 திங்கட்கிழமை மாலை 05.00 மணிக்கு, காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், அரிமா சங்க மாவட்ட ஆளுநர் கே.எஸ்.மணி மற்றும் அவரது துணைவியார் பங்கேற்கவுள்ளனர்.
துவக்கமாக, துளிர் பள்ளி வளாகத்திலுள்ள மூலிகைத் தோட்டத்தை அவர் திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து அரிமா நிர்வாகத்தின் சிறப்புக் கூட்டம், செய்தியாளர் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
ஹாஜி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத், சுயம்பு ராஜன் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றவுள்ளனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயல்பட்டினம் அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், செயலர்களான வி.டி.என்.அன்ஸாரீ, துளிர் எம்.எல்.ஷேக்னா லெப்பை, பொருளாளர் கே.அப்துர்ரஹ்மான், ஆசிரியர் அப்துல் ரசாக் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
|