சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், இம்மாதம் 31ஆம் தேதியன்று குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடத்தப்படவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில், அதன் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொள்கின்றனர்.
கூட்ட நிகழ்ச்சி நிரலை வெளியிட்டும், மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிங்கப்பூர் வாழ் அனைத்து காயலர்களுக்கும் - கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர்கள் மற்றும் சிங்கப்பூர் வாழ் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்...
நமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் (AGM), இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 31ஆம் தேதியன்று, சிங்கப்பூர் Fairy Point Chaletஇல், குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை - மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையையும், அதனைத் தொடர்ந்து மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் - மன்றத்தின் ஆண்டறிக்கையையும் சமர்ப்பிக்கின்றனர்.
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவுள்ளனர்.
மன்றத் தலைவரின் ஒப்புதலுடன் - மன்றத்தின் வருங்கால செயல் திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதித்து, முடிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மன்றத்தின் செயற்பாடுகளை இன்னும் மெருகேற்றி நன்முறையில் நகர்நல சேவைகளாற்றிடும் பொருட்டு, நல்ல பல ஆலோசனைகளுடன் தாங்கள் அனைவரும் கூட்டத்திலும், குடும்ப சங்கம நிகழ்விலும் - அன்றிரவு Chaletஇல் தம் குடும்ப அங்கத்தினருடன் தங்கும் வகையில் பங்கேற்க வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நல்ல பல தீர்மானங்களுடன் இக்கூட்டத்தை இன்ஷாஅல்லாஹ் வெற்றிகரமாக நடத்தி முடித்திட மன்ற நிர்வாகம் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறது. கூட்ட ஏற்பாடுகளை ஏற்பாட்டுக் குழுவினர் சிறப்புற செய்து வருகின்றனர்.
கூட்ட நிகழ்முறை பின்வருமாறு:-
வருடாந்திர பொதுக்குழுக் கூட்ட நிகழ்ச்சி நிரல்:
இடம்: FAIRY POINT CHALET 5, ALOHA CHANGI, சிங்கப்பூர்.
நிகழ்முறை:
நாள்: மார்ச் 31, 2012
15:00 மணி - கூட்ட நிகழ்விடத்திற்கு உணவு ஏற்பாட்டுக் குழு வருகை
15:30 மணி - பீச் ரோடு ப்ளாக் 1இலிருந்து உறுப்பினர்களை அழைத்துச் செல்ல வாகனம் வருகை
16:00 மணி - Bedok North Ave 4 ப்ளாக் 98இலிருந்து உறுப்பினர்களை அழைத்துச் செல்ல வாகனம் வருகை
16:30 மணி - மன்ற உறுப்பினர்கள் - குடும்பத்தினர், விருந்தினர்கள் கூட்ட நிகழ்விடம் வருகை
17:00 மணி - அஸ்ர் கூட்டுத் தொழுகை
17:15 மணி - தேனீர் - சிற்றுண்டி உபசரிப்பு
17:30 மணி - குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
18:30 மணி - உறுப்பினர் - விருந்தினர் பெயர் பதிவு (உமர் ரப்பானீ பதிவு செய்வார்.)
19:00 மணி - KWAS ஒருநாள் ஊதிய நன்கொடை சேகரிப்பு
19:15 மணி - மஃரிப் கூட்டுத் தொழுகை
19:45 மணி - AGM வருடாந்திர பொதுக்குழுக் கூட்ட துவக்கம்
21:45 மணி - கூட்டம் நிறைவு
21:50 மணி - இஷா கூட்டுத் தொழுகை
22:00 மணி - இரவுணவு விருந்துபசரிப்பு
22:30 மணி - KWAS அமைப்பின் 2011ஆம் ஆண்டு நகர்நலப் பணிகள் நிழற்பட கண்காட்சி
23:00 மணி - குடும்ப அங்கத்தினர் விளையாட்டுப் போட்டிகள் & பரிசளிப்பு
23:30 மணி - நள்ளிரவு BBQ (தலைமை: எம்.என்.ஜவஹர் இஸ்மாஈல்)
நாள்: ஏப்ரல் 01, 2012
07:30 மணி - தேனீருடன் காலை உணவு
09:00 மணி - வாகனத்தில் இருப்பிடம் திரும்பல்
ANNUAL GENERAL MEETING SCHEDULE
31 March 2012
15:00 Hrs Food preparation team arrival to venue
15:30 Hrs Transport Pickup from Block 1, Beach Road
16:00 Hrs Transport Pickup from Block 98, Bedok North Ave 4
16:30 Hrs Arrival of Members, family & guests to Fairy Point chalet 5
17:00 Hrs Asar Jamath
17:15 Hrs Serving tea with snacks & Biscuits
17:30 Hrs Kids Games
18:30 Hrs Members & Guest Registration by Member Mohamed Omer Rabbani
19:00 Hrs KWAS One Day Salary Scheme Collection
19:15 Hrs Magrib Jamath
19:45 Hrs AGM Meeting Start
21:45 Hrs AGM Meeting Ends
21:50 Hrs Isha Jamath
22:00 Hrs Dinner Served
22:30 Hrs Highlights of KWAS Year 2011 (Photo Session)
23:00 Hrs Family Members Games followed by Prize Distribution
23:30 Hrs Mid-Night BBQ with Lead by Member M N Jawahar Ismail
01 April 2012
07:30 Hrs Breakfast with Tea
09:00 Hrs Return to Home by Bus
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |