காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில், மவ்லவீ எம்.நிஜாமுத்தீன் அஹ்ஸனீ சிறப்புரையாற்றினார். திரளான பொதுமக்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.
விழா நிகழ்வுகள் குறித்து அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா,
கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்களின் நினைவு நாள் விழா,
எம் மன்றத்தின் 24ஆம் ஆண்டு துவக்க விழா
ஆகியன அடங்கிய முப்பெரும் விழா 25.03.12 ஞாயிற்றுக்கிழமையன்று, காயல்பட்டினம் பெரிய சதுக்கை வளாகத்தில் நடைபெற்றது.
காலை நிகழ்ச்சிகள்:
அன்று காலை 06.00 மணியளவில் மன்றத்தின் மறைந்த மன்ற முன்னோடிகளுக்காக கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
காலை 07.30 மணியளவில், என்.எஸ்.ஏ.சுல்தான் ஜமாலுத்தீன் தலைமையில் பூமான் நபியின் புகழ்பாடும் புனித மவ்லித் ஓதப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காலை 09.30 மணியளவில் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவ இலவச முகாம் நடைபெற்றது.
மாலை நிகழ்ச்சிகள்:
அன்று மாலை 04.30 மணிக்கு மாலை அமர்வு மேடை நிகழ்ச்சியாக நடைபெற்றது. சமூக ஆர்வலர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எல்.எஸ்.ஹசன் இர்பான் கிராஅத் ஓதி, நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
எம்.டி.சேக் அப்துல் காதிர் ஸூஃபீ அனைவரையும் வரவேற்றப் பேசினார். அதனைத் தொடர்ந்து, ஹாஜி எம்.ஏ.கிழுறு முஹம்மத், ஹாஜி துளிர் எம்.எல்.ஷேக்னா லெப்பை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ சிறப்புரையாற்றினார்.
இரவு நிகழ்ச்சிகள்:
மஃரிப் தொழுகைக்குப் பிறகு, இரவு 07.00 மணிக்குத் துவங்கிய இரவு அமர்விற்கு மவ்லவீ டபிள்யு.எம்.எம்.செய்யத் முஹம்மத் பாக்கவீ காதிரீ ஸூஃபீ (ஊண்டி ஆலிம்) தலையேற்று தலைமையுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மன்ற செயலர் ஹாஜி எம்.எஸ்.மஹ்மூத் ரஜ்வீ மன்றத்தின் ஆண்டறிக்கையை எழிச்சியுரையாக வழங்கினனார். அதனை தொடர்ந்து முஹ்யத்தீன் மணவர் மன்றத்தினரின் தஃப்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இஷா தொழுகைக்குப் பின், இரவு 08.30 மணியளவில், “சீரழிவின் விளிம்பில் இளைய சமுதாயம்” என்ற தலைப்பில், திருவிதாங்கோடு ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.நிஜாமுத்தீன் அஹ்ஸனீ சிறப்புரையாற்றினார்.
நிறைவாக, மன்றத்தின் துணைச் செயலாளர் கே.எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் நன்றி கூற, பாத்திஹா துஆ ஸலவாத்துடன் விழா நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றன, அல்ஹம்துலில்லாஹ்!
அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்றத்தின் சட்ட ஆலோசகர் நோனா மஹ்மூத் முன்னிலையில், மன்ற செயலர் ஹாஜி மஹ்மூத் ரஜ்வீ தலைமையில், துணைச் செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன், இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர், அபூ, ஜே.ஹைதர் அலீ, ,பிரபு செய்யித் அப்துர் ரஹ்மான், அப்துல் அஜீஸ், எல்.டி.அஹ்மத் முஹ்யித்தீன், குளம் ஜமால், தீன் முஹம்மத் முஹ்யித்தீன், சோனா ஷாஹுல் ஹமீத் ஆகியோர் செய்திருத்தனர்.
முப்பெரும் விழா சிறப்பு விருந்தினரின் உரை அசைபட (வீடியோ) தொகுப்பை, இங்கே சொடுக்கி காணலாம்.
இவ்வாறு, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்களில் உதவி:
முஹம்மத் முஹ்யித்தீன்,
துணைச் செயலாளர்,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்,
பெரிய சதுக்கை, சதுக்கைத் தெரு, காயல்பட்டினம். |