தமிழக அரசால் அமைக்கப்பட்டு வரும் கிழக்கு கடற்கரை சாலை (ECR Road) காயல்பட்டினம் வழியாக அமைக்கப்பட வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் காயல்பட்டினம் நகர கிளை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும். கிழக்கு கடற்கரைச் சாலை(ECR road) நமதூருக்கு கண்டிப்பாக தேவை. ஏன் என்றால் இப்பொழுது ரயில் ஏற நாம் ஆறுமுகநேரி செல்கிறோமோ அதேபோல் பஸ் ஏறவேண்டும் என்றால் ஆறுமுகநேரி சென்று ஏற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அதனால் இது விஷயத்தில் நாம் (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) கவனம் கொண்டு சென்ற மூன்று மாதங்களுக்கு முன்னாள் நமது நகர் மன்ற தலைவி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து அது சம்பதமாக விளக்கி சொன்னோம். அவர்களும் உடனே அதற்கான மனு தயார் செய்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
அதேபோல் காயல்பட்டணம் நகர தேசிய முற்போக்கு திராவிட கழகம்சார்பாக கடந்த 26/03/2012 அன்று மாவட்ட ஆட்சியருடம் கிழக்கு கடற்கரைச் சாலை (ECR road) நமதூர் வழியாக கொண்டு வர வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.
இதேபோல் நமதூரில் உள்ள அனைத்து சங்கங்களும், அனைத்து பொதுநல அமைப்புகளும் தனித்தனியே மாவட்ட ஆட்சியருக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் உடனடியாக மனு அளித்து நமதூர் மக்கள் நமதூரிலேயே பஸ் ஏறக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு காயல்பட்டணம் நகர தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு, தேமுதிக காயல்பட்டினம் நகர தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |