வரும் ஏப்ரல் மாதம் 09ஆம் தேதியன்று, காயல்பட்டினம் நகராட்சியில் பின்வருமாறு பொருட்கள், நகராட்சி சேவைகள் ஏலம் விடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது:-
இதனால் காயல்பட்டினம் நகராட்சி பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்,
காயல்பட்டினம் நகராட்சிக்குப் பாத்தியப்பட்ட கீழ்க்கண்ட பட்டியலில் காணப்படும் இனங்களுக்கு பொது ஏலம் 2012-2013ஆம் வருடத்திற்கு, 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09ஆம் தேதியன்று காலை 10.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் வைத்து, ஆணையர் அவர்களால் அல்லது அவரது அங்கீகாரம் பெற்றவரால் பொது ஏலத்தில் விடப்படும்.
அத்துடன், எல்லா இனங்களுக்கும் மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள், ஏலம் நடைபெறும் நாளில் காலை 10.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நகராட்சி அலுவலகத்தில், ஆணையாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் பெற்றுக்கொள்ளப்படும்.
வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகள், சம்பந்தப்பட்ட இனத்திற்கான ஏலம் ஏலத்தில் கலந்துகொள்ளும் ஏலதாரர்கள் மற்றும் ஒப்பந்த புள்ளிதாரர்கள் முன்னிலையில் 03.00 மணிக்கு திறக்கப்படும்.
ஒவ்வொரு இனத்திற்கும், ஏலத்திற்கு தனித்தனியாக வைப்புத் தொகைகள் செலுத்தப்பட வேண்டும்.
இதர விபரங்களை நிபந்தனைகளிலும், அலுவலக வேலை நாட்களில் அலுவலகத்திலும் நேரில் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
New Page 1
வ.எண் |
ஏலம் விடப்படும் பொருள் / சேவை |
குத்தகை காலம் |
டேவணி தொகை ரூ. |
01 |
நகராட்சி வளாகத்திலுள்ள கிணற்றில் வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுக்கும் உரிமம் (காலை
06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டும்) |
10.04.2012 முதல் 31.03.2013 முடிய |
5,000 |
02 |
நகராட்சி பேருந்து நிலைய வளாகத்திலுள்ள கடை எண் 5 |
10.04.2012 முதல் 31.03.2013 முடிய |
5,000 |
03 |
கடற்கரை பூங்காவிற்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம்
வசூலிக்கும் உரிமம் |
10.04.2012 முதல் 31.03.2013 முடிய |
2,000 |
04 |
நகராட்சி வளாகத்தில் மற்றும் நகராட்சி பகுதியில் ஆடு / மாடு அறுக்கும் தொட்டி |
10.04.2012 முதல் 31.03.2013 முடிய |
25,000 |
05 |
நகராட்சி பேருந்து நிலைய வளாகத்திலுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை |
10.04.2012 முதல் 31.03.2013 முடிய |
5,000 |
06 |
நகராட்சி அலுவலகத்தில் உபயோகப்படுத்தப்பட்ட தினசரி நாளிதழ் (பிப்.29ஆம்
தேதிக்குட்பட்ட நாளிதழ்கள் மட்டும்) |
10.04.2012 முதல் 31.03.2013 முடிய |
100 |
07 |
நகராட்சி அலுவலக மற்றும் தெரு விளக்கு உபயோகத்திற்காக பயன்படுத்தப்பட்ட பழைய
மின் சாதனங்கள், சோக்கு, ஸ்டார்ட்டர், குழல் விளக்கு |
10.04.2012 முதல் 31.03.2013 முடிய |
100 |
08 |
நகராட்சியில் ஆடு, மாடு அறுக்கும் தொட்டியில் சேகரிக்கப்பட்ட உதப்பை |
10.04.2012 முதல் 31.03.2013 முடிய |
100 |
09 |
நகராட்சி குடிநீர் பிரிவில் பயன்படுத்தப்பட்டு உபயோகமற்ற மற்றும் பழுதடைந்த
பொருட்கள் |
10.04.2012 முதல் 31.03.2013 முடிய |
1,000 |
10 |
சுகாதார பிரிவிலுள்ள பழுதடைந்த பொருட்கள் ஏலம் |
10.04.2012 முதல் 31.03.2013 முடிய |
100 |
நிபந்தனைகள்:
(01) ஏலம் கேட்க விருப்பமுள்ளவர்கள், டேவணித் தொகை முழுவதும் செலுத்தி ஏலம் கேட்க வேண்டும்.
(02) கூடுதல் ஏலம் எடுத்தவர், ஏலத் தொகை முழுவதையும் ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும்.
(03) கூடுதல் ஏலம் நகராட்சி மன்ற அங்கீகாரத்திற்குட்பட்டது.
(04) ஏலம் முடிவு செய்யப்பட்டதும், ரூபாய் 20க்கான ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும்.
(05) ஏலத்தில் கலந்துகொள்ளும் எந்தவொரு நபரும், இதற்கு முன்பு நகராட்சிக்கு சம்பந்தப்பட்ட கடைகளையோ அல்லது இடங்களையோ குத்தகைக்கு எடுத்து, முறையாக ஏலத்தொகை செலுத்தாதிருந்தால், அவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
(06) எவ்வித காரணமும் காட்டாமல் ஏலத்தை ரத்து செய்யவோ அல்லது மறு ஏலம் கேட்கவோ நிர்வாக அதிகாரிக்கு அதிகாரமுண்டு.
(07) எந்த சந்தர்ப்பத்தில் தேவையானது என நிர்வாக அதிகாரி அவர்களால் கருதப்படும் எந்த விதமான முடிவை எடுக்கவும் அவருக்கு அதிகாரமுண்டு.
(08) ஒப்பந்தக் கட்டுப்பாட்டை மீறி நடந்த குற்றத்திற்கான பொறுப்புத் தொகையை பறிமுதல் செய்வதில் மன்றத்தின் தீர்மானமே முடிவானதாகும்.
(09) ஏலத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்க நிர்வாக அதிகாரிக்கு உரிமை உண்டு.
(10) நகராட்சி நிர்ணயம் செய்யும் கட்டணத்தை மட்டுமே ஏலதாரர் வசூல் செய்ய வேண்டும்.
(11) கிணறுகளில் வண்டிகள் மூலம் தண்ணீர் எடுத்துக்கொள்வதற்கு கட்டணம் வசூல் செய்யும் உரிமம் மட்டுமே ஏலதாரருக்கு உண்டு. பொதுமக்கள் தண்ணீர் எடுப்பதில் எவ்வித பிரச்சினையும் செய்யக்கூடாது.
(12) மின் கட்டணத்தை ஏலதாரரே செலுத்த வேண்டும்.
(13) மின் மோட்டார் பழுது ஏற்பட்டால் ஒப்பந்தக்காரர் பொறுப்பில் செய்ய வேண்டும்.
இவ்வாறு ஏல அறிவிப்புகள் அமைந்துள்ளன. இந்த ஏல அறிவிப்பை, காயல்பட்டினம் நகராட்சிப் பகுதி முழுவதும் டாம்டாம் செய்து, தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க நகராட்சி சுகாதார ஆய்வாளர் பணிக்கப்பட்டுள்ளார்.
முந்தைய ஏலதாரர்கள், (நகராட்சி) அலுவலக விளம்பரப் பலகை, கிராம நிர்வாக அலுவலக தகவல் பலகை, சார்பதிவாளர் அலுவலக தகவல் பலகை, காயல்பட்டினம் நகராட்சி ஒப்பந்ததாரர்கள், காயல்பட்டினம் நகராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு இந்த ஏல அறிவிப்பின் நகல் அனுப்பப்படுவதாக ஏல அறிவிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |