காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் முப்பெரும் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மருத்துவ இலவச முகாம்களில், 560 பயனாளிகள் பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெற்றனர். இதுகுறித்து அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா,
கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்களின் நினைவு நாள் விழா,
எம் மன்றத்தின் 24ஆம் ஆண்டு துவக்க விழா
ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு, மாபெரும் இலவச மருத்துவ முகாம், 25.03.12 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 09.30 மணியளவில், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சென்ட்ரல் பள்ளிகளின் தாளாளரும், கே.எம்.டி. மருத்துவமனை செயலாளருமான ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம் முகாம் துவக்க நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, அகர்வால் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ஜெயராஜ், சார்லி பல் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அனிதா, சித்த மருத்துவர் டாக்டர் எம்.என்.செய்யித் முஹ்யித்தீன் ஆகியோர் தங்கள் துறையின் பயன்களை சுருக்கமாக விளக்கிப் பேசினர்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சித் தலைவர் முகாமைத் துவக்கி வைத்தார். இம்முகாமில், கண், பல் மருத்துவம், சித்த மருத்துவம், அக்குபஞ்சர் மற்றும் அக்குப்ரஷர் மருத்துவ ஆலோசனைகள் தனித்தனி பிரிவுகளாக நடைபெற்றது.
இதில், 257 பேருக்கு கண் மருத்துவ ஆலோசனையும், 136 பேருக்கு பல் மருத்துவ ஆலோசனையும், 101 பேருக்கு சித்த மருத்துவ ஆலோசனையும், 66 பேருக்கு அக்குபஞ்சர் மற்றும் அக்குப்ரஷர் சிகிச்சையும் வழங்கப்பட்டது. மொத்தத்தில், 560 பேர் இம்மருத்துவ முகாம்களில் பங்கேற்று பயன்பெற்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்களில் உதவி:
முஹம்மத் முஹ்யித்தீன்,
துணைச் செயலாளர்,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்,
பெரிய சதுக்கை, சதுக்கைத் தெரு, காயல்பட்டினம். |