சென்னையில் வசிக்கின்ற - சென்னைக்கு வருகின்ற காயல்பட்டினம் நகர மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தகுந்த
வழிகாட்டுதலை அளித்திடும் பொருட்டு அண்மையில் துவக்கப்பட்ட அமைப்பு காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு
மையம் (KCGC).
அவ்வமைப்பின் வேலைவாய்ப்பு குழுவின் ஏற்பாட்டில் மார்ச் 31, சனிக்கிழமை அன்று மாலை 3:00 மணி அளவில் - WHAT EMPLOYERS EXPECT OUT OF A CANDIDATE? என்ற தலைப்பில் MAFOI அதிகாரியும், A CANDIDATE'S PREPAREDNESS FOR INTERVIEWS என்ற தலைப்பில் ETA MELCO நிறுவனத்தின் பொது மேலாளரும் உரை நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விரும்பும் காயலர்கள் - தங்கள் சுயவிபரங்களுடன் (பெயர், முகவரி, தொடர்பு எண்) - உடனடியாக
jobs@kcgc.in என்ற ஈமெயில் முகவரியை தொடர்பு கொள்ளவும். மேலதிக விபரங்களுக்கு - பீ.ஏ.கே. சுலைமான் (98410 73994) அல்லது குளம் முஹம்மது தம்பி (98401 84838) - ஆகியோரையும் தொடர்பு கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சி KCGC அலுவலகமான -
No.144 Greams Road,
ESKAY Building,
Thousand Lights,
Chennai.
- என்ற முகவரியில் நடைபெறும்.
தகவல்:
முஹம்மது முக்தார்,
ஒருங்கிணைப்பு குழு, KCGC.
|