Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:54:39 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8206
#KOTW8206
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 27, 2012
தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா பாடலில் காயல்பட்டினம் குறித்த வரிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 7208 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்டம் பிறந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கடற்கரையில், 25.03.2012 அன்று மாலையில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார், தமிழக அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவும் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில், ஆர்.பாக்யராஜ் இசையமைப்பில், எம்.இசக்கியப்பன் எழுத்தில், திரைப்பட பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடி தயாரிக்கப்பட்ட - தூத்துக்குடி மாவட்டத்தின் பாரம்பரிய சிறப்புகளை வெளிப்படுத்தும் விதத்திலான பாடல் குறுந்தகடு - சிடி வெளியிடப்பட்டது. இப்பாடலைக் கேட்க இங்கே சொடுக்குக!

அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வெள்ளி விழாவையொட்டி நேற்று காலை நடந்த மினி மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, வெள்ளி விழா சின்னத்தையும், பாடல் குறுந்தகட்டையும் வெளியிட, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா அவற்றைப் பெற்றுக் கொண்டார்.







வெள்ளி விழாவை முன்னிட்டு தயாரித்து வெளியிடப்பட்டுள்ள இப்பாடலில், காயல்பட்டினம் நகர் குறித்தும் சில வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. பாடல் வரிகள் பின்வருமாறு:-

எங்கள் ஊரிது எங்கள் உறவிது முத்து நகரென்னும் பேரிது
தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் பிறந்த ஊரிது
தமிழகத்தின் நுழைவு வாயிலாம் துறைமுகத்தைக் கொண்டது

பல அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள்,
தலைவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியிது.

புதுமை கவிதையில் புரட்சி படைத்த பாரதி பிறந்தது நம் ஊரே
வெள்ளையரை எதிர்த்து சுதேசி கப்பலை இயக்கிய வ.உ.சி. நம் ஊரே
கட்டபொம்மன் ஊமைத் துரை அண்ணன் தம்பி இருவரும்
பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை கட்டி வரி கட்ட மறுத்து
அந்நியரை எதிர்த்து வெற்றி வாகையை சூடினரே.

ஆங்கில ஆட்சியரை மணியாச்சி என்னும் ஊரில் சுட்டுக்கொன்று
தன் உயிர் மாய்த்த வாஞ்சி நாதனே எங்கள் வ.உ.சி.யே!
எங்கள் கட்டபொம்மனே! எங்கள் ஊமைத் துரையே! எங்கள் பாரதியே!

எத்தனை வளங்கள் கடலில் உண்டு இது போல் செல்வம் வேறெங்குண்டு
தூத்துக்குடியின் முத்துக் குளியல் உலகம் முழுவதும் அறிந்ததுண்டு

கடல் அட்டைகள் கடல் ஆமைகள் கடல் பசுக்கள் கடல் குதிரைகள்
முத்துநகர் ஆரம்பித்து இரேமேஸ்வரம் வரையிலும் இருக்கின்ற தீவுகள் மூ-வேழு (21)
அதனால்தானே சுனாமியின்றி பிழைத்தோம் அனைவரும் நலமோடு

பொதிகையில் பிறந்து தரணியில் தவழ்ந்து வழியெங்கும் வாழ வைக்கும் ஆதாரம்
நம் ரத்தத்தில் கலந்து கடலில் கலப்பாள் தாமிரபரணி வாழ்வாதாரம்.
இவை அனைத்தையும் காப்பது நம் பொறுப்பு நம் தூத்துக்குடி வளத்தைக் காத்திடுவோம்

எத்தனை கிராமிய கலைகள் உண்டு. அதை ஆடிட பாடிட கலைஞர் உண்டு.
அண்ணாமலையார் பாடிய சிந்து கழுகுமலையில் என்றும் உண்டு.
ஸ்ரீவைகுண்டம் என்ற ஊரும் உண்டு அதில் குமர குருபரர் ஒருவர் உண்டு.
அவர் பாடிய பாடிய பிள்ளைத் தமிழுக்கு தேசம் அனைத்திலும் பேருண்டு.
வில்லுப்பாட்டு பொறந்தது நம் ஊரு அத காத்து நிக்குறது நம் ஊரு.
எத்தனை கலைகள் வந்தாலும் கிராமிய கலைக்கு நிகரேது?

உப்பு விளையுது நம்மூரு அதை தப்பாம உணருது வெளியூரு
அட சில்லுக் கருப்பட்டி நம்மூரு அத சாப்பிட்டு பாத்தாலே படு ஜோரு

பழமை வாய்ந்த மாதா கோவில் நானூறு வருடமாய் இங்குண்டு
பாண்டிய மன்னனின் சிவன் கோவிலும் திருமந்திர நகரில் இன்றும் உண்டு.
நவ கயிலாயங்கள் நவ திருப்பதிகள் இருக்கின்ற இடங்கள் நம் ஊரே
மசூதிகள் நிறைந்த இஸ்லாமியர் வாழும் காயல்பட்டினமும் நம் ஊரே
ஆறு படை வீடுகளில் இரண்டாம் வீடு திருச்செந்தூரும் நம் ஊரே
உலகப் புகழ் பெற்ற தசரா நடக்கும் குலசை பட்டினமும் நம் ஊரே

எத்தனை மதங்கள் இருந்தாலும் நாம் அன்பாய் ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்
என்றும் உயர்ந்திடுவோம் என்றும் செழித்திடுவோம்
என்றும் வளர்ந்திடுவோம் ஒன்றாய் இணைந்திடுவோம்.


இவ்வாறு அந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. இப்பாடலைக் கேட்க இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாவட்ட ஆட்சியர்க்கு மனமுவந்த நன்றி...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக், ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டணம்.) [27 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17939

நம் மாவட்ட ஆட்சியர் திரு.ஆஷிஷ் குமார் ஒரு வித்தியாசமான மனிதர். மாவட்டத்தின் மேன்பாட்டிற்கு தம்மால் ஆன வரையில் உதவுகின்றார் .நல்ல திறமை,மற்றும் நேர்மையான அதிகாரிகள் நிலைத்து நிற்பதில்லை! அரசியல் சதுரங்கத்தில் உருட்டப்படும் பகடைக்காய்களான அதிகாரிகளுக்கு ஆட்சியாளர்களின் நெருக்கடி அடிக்கடி வருவதுண்டு.அதையெல்லாம் தாண்டி,தாங்கி தத்தளித்து நீந்திக் கரையேறி பணியாற்றும் அதிகாரிகள் சிலரே! நம்மவர் அதில் ஒருவர் என்பது தான் உண்மை! வெள்ளி விழாக் குறுந்தகட்டின் பாடல் வரிகளில் எமதூரின் பெயர் சேர்த்திருப்பதற்கு நன்றி!!!
-ராபியா மணாளன். காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:தூத்துக்குடி மாவட்ட வெள்ள...
posted by mackie noohuthambi (colombo) [28 March 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17946

பாடலில் இதையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

காயல்பட்டினம் எங்கள் இஸ்லாமிய இன்சுவை சமையலில் உப்பு சேர்த்த கலை நகரம். இங்கே கிடப்பது புளுதியல்ல, மக்கமா மலரின் மகரந்த பொடிகள். சதக்கத்துல்லா அப்பாவை சதக்காவாக ஞாலத்துக்கு ஈந்த ஞான பூமி, செத்தும் கோடை கொடுத்த சீதக்காதி வள்ளலையே வாரி வழங்கிய வள்ளல் மண் இது. இஸ்லாம் எங்கள் வழி இன்பதமிழ் எங்கள் மொழி என்றுகூறி வாழ்ந்து தமிழுக்கும் அரபி மொழிக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தி அரபு தமிழ் என்று ஒரு புது மொழியை உலகுக்கு அறிமுகம் செய்த அற்புத நகரம் இது. இங்கே ஏறல் எழுத்திலும் இறை மறை இருக்கும் மழலைகள் வாய்களும் ஹதீதுகள் பேசும்.

நன்றி கவிக்கோ அப்துர்ரஹ்மான். வாழ்க காயல்பட்டினம். மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved