தமிழக பட்ஜெட் இன்று (மார்ச் 26) காலை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் 2012 - 2013 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். வரும் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.3 சதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட் உரை - முழுமையாக ஆங்கிலத்தில் காண இங்கு அழுத்தவும்
பட்ஜெட் உரை - முழுமையாக தமிழில் காண இங்கு அழுத்தவும்
பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் ...
<> மின் சிக்கன விளக்குகளுக்கு 5% ஆக வரி குறைப்பு
<> வணிக வரித்துறை முற்றிலும் கணினி மயமாக்கப்படும்
<> சொத்துக்களுக்கான முத்திரைக் கட்டணம் 5% ஆக குறைப்பு
<> கோதுமை மீதான வரிகள் அனைத்தும் முற்றிலும் விலக்கு
<> கோதுமை மீதான மதிப்புக் கூட்டு வரி நீக்கம்
<> ஓட்ஸ் மீதான 5% வரி விலக்கிக் கொள்ளப்படும்
<> இன்சுலின் மருந்து மீதான மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் நீக்கம்
<> ஹெல்மெட்டுகளுக்கான வரிகள் நீக்கப்படுகிறது
<> சேனிட்ரி நாப்கின்களுக்கான வரி 5% ஆக குறைப்பு
<> வாகனங்களுக்கு விருப்ப எண்களை பதிவு செய்வதற்கான கட்டணம் இருமடங்காக அதிகரிப்பு
<> மின்சக்தியால் இயங்கும் வாகனங்களுக்கு 5% ஆக வரி குறைப்பு
<> 6% முத்திரை தீர்வை ஏப்ரல் முதல் 5% ஆக குறைப்பு
<> மரப்பட்டைகள், மரக்குச்சிகளுக்கு 5% ஆக வரி குறைப்பு
<> பல்வேறு ஓய்வூதிய திட்டத்திற்கு உயர் ஆய்வு அட்டைகள் வழங்கப்படும்
<> அகதிகள் முகாம்களில் உள்ள அனைத்து இலங்கை தமிழர்களுக்கும் தமிழக நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்
<> பீடி தொழிலாளர்களுக்கான வீட்டு வசதித் திட்டம்
<> அரசுப் பணிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்
<> சேலம், திருச்சி, மதுரையில் மண்டல பயிற்சி மையங்கள் திறப்பு
<> நகர்ப்புறங்களில் குறைந்த நடுத்தர வருவாய் பிரிவினருக்கு வீடுகள் வழங்க திட்டம்
<> அண்ணா பயிற்சி மையம் மேம்படுத்தப்படும்
<> திருமண நிதியுதவி திட்டத்திற்கு ரூ.748 கோடி ஒதுக்கீடு
<> விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிற வழங்கப்படும்
<> ஹஜ் குழு மானியத் தொகை ரூ.20 லட்சமாக உயர்வு
<> கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தொட்டில் குழந்தை திட்டம் விரிவுபடுத்தப்படும்
<> பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளை மேம்படுத்த நடவடிக்கை
<> 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஜாமென்ட்ரி பாக்ஸ்
<> பள்ளிக் கல்வித் துறைக்கு 14552.82 கோடி ஒதுக்கீடு
<> நெல்லையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டம்
<> நடப்பு நிதியாண்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு
<> மதுரையில்அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம். இதற்காக ஒரு முறை சிறப்பு நிதி ஒதுக்கீடாக ரூ.250 கோடி
<> ஆதிதிராவிடர் விடுதிகளில் பயில்வோருக்கு உணவுப் படி அதிகரிப்பு. இதற்காக 76 கோடி ஒதுக்கீடு
<> ஆதிதிராவிடர் மாணவ,மாணவியருக்கு புதிதாக 44 விடுதிகள் கட்டப்படும்
<> சுயநிதி கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை
<> ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் மேம்பாட்டிற்கு ரூ. 6108 கோடி ஒதுக்கீடு
<> ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்
<> நேமம், சோழவரம் ஏரிகளை மேம்படுத்த 1.30 கோடி ஒதுக்கீடு
<> 7000 கிராமங்களில் குடிநீர் வசதி மேம்படுத்தப்படும்
<> கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ரூ.90 கோடி செலவில் குடிநீர் மறு சுழற்சி நிலையம்
<> தனியார் பள்ளிகள் 25 சதவீத இடத்தை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்
<> அனைவருக்கும் கல்வி திட்டத்திற்காக ரு.2000 கோடி ஒதுக்கீடு
<> அனைவருக்கும் கல்வி இயக்கம் ரூ.1891 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
<> 6 முதல்14 வயதுள்ள அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கை பெற வேண்டும்
<> 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்
<> 20 கோடியில் அறுவை சிகிச்சை மையங்கள் தரம் உயர்த்தப்படும்
<> கீழ்ப்பாக்கம் தீக்காய சிறப்புப் பிரிவு 6 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்படும்
<> 1முதல் 5ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா வண்ண பென்சில் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும்
<> 1 முதல் 10ம் வகுப்புமாணவ, மாணவியருக்கு விலை இல்லா நோட்டுப் புத்தகம் வழங்கப்படும்
<> 1 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்படும்
<> மாணவர்களுக்கு விலையில்லா கணினி வழங்கும் திட்டம் தொடரும்
<> கடலூர் மீன் பிடி துறைமுகத்திற்கு 10 கோடி ஒதுக்கீடு
<> பாசன வசதிக்கு ரூ. 745.4 கோடி ஒதுக்கீடு
<> உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க 50 கோடி ஒதுக்கீடு
<> 12000 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்படும்
<> விருதுநகரில் காமராஜர் நினைவிடம் புதுப்பிக்கப்படும்
<> அண்ணா, எம்ஜிஆர் நினைவிடங்களை புதுப்பிக்க நடவடிக்கை
<> மருத்துவத் துறைக்கு 5569 கோடி ரூபாய் ஒதுக்கீடு
<> மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை
<> இந்த நிதியாண்டில் இதற்காக 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு
<> வரும் ஆண்டில் இந்து சமய அறநிலையத் துறை மூலம் 1006ம் கோயில்கள் புதுப்பிக்கப்படும்
<> தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 368 கோடி ஒதுக்கீடு
<> 30% மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை
<> புவி நிலைக்காட்டி மூலம் மின்னணு பயணச்சீட்டு முறை
<> பழனி, ஸ்ரீரங்கம் கோயில்களில் 24 மணி நேரமும் அன்னதானத் திட்டம்
<> கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை
<> சென்னையில் மோனோ ரயில் திட்டம்
<> மோனோ ரயில் திட்டத்தை மேம்படுத்த சர்வதேச அளவில் ஒப்பந்த புள்ளி கோரல்
<> சென்னையில் 57 கி.மீ. தூரத்திற் மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படும்
<> சென்னையில் 3 பாதைகளில் மேனோ ரயில்திட்டம்
<> பாதை 1 - கிழக்கு தாம்பரத்தில் இருந்து வண்டலூர் வழியாக வேளச்சேரி
<> பாதை 2 - பூந்தமல்லியில் இருந்து போரூர் வழியாக கத்திப்பாரா
<> பாதை 3 - பூந்தமல்லியில் இருந்து வளசரவாக்கம் வழியாக வடபழனி
<> சென்னையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அரசு கேபிள் சேவை வழஙகப்படும்.
<> நொய்யலாற்றை மேம்படுத்த நடவடிக்கை
<> நாகை துறைமுகம் தனியார் ஒத்துழைப்புடன் ரூ.380 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
<> பேருந்து கட்டண உயர்வால் பேருந்து போக்குவரத்து துறை முன்னேற்றம் அடைந்து வருகிறது
<> புதிதாக 3000 பேருந்துகள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்து. இதற்காக 505 கோடி ரூபாய் ஒதுக்கீடு
<> முதல் தலைமுறை தொழில் முனைவோரை ஊக்குவிக்கத் திட்டம்
<> உற்பத்தித் துறையில் ரூ.20000 கோடி முதலீட்ட ஈர்க்கத் திட்டம்
<> சிப்காட் மூலம் 20,000 ஏக்கர் நிலவள வங்கி
<> சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி
<> 50 கோடி ரூபாயில் விலைக்கட்டுப்பாட்டு நிதியம்
<> கழிவுநீர், சுத்திகரிப்பு மையங்களை நவீன முறையில் மாற்ற நடவடிக்கை. இதற்காக ரூ.200 கோடி வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்
<> சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் தொழில்பேட்டைக்கு மாற்றப்படும்
<> எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலையை மேம்படுத்த நடவடிக்கை
<> சங்கரன் கோவில் மற்றும் விழுப்புரத்தில் கறிக் கோழிப் பண்ணைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்
<> உரங்களுக்கு மதிப்புக் கூட்டு வரியில் இருந்து விலக்கு
<> பருப்பு வகைகள் சலுகை விலையில் வழங்க திட்டம்
<> அத்தியாவசியப் பொருட்கள் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
<> உணவு மானியத்திற்கு ரூ.4900 கோடி ஒதுக்கீடு
<> கால்நடை மருத்துவ பராமரிப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு
<> கால்நடை பராமரிப்புக்கு ரு. 814 கோடி
<> கால்நடை தீவன உற்பத்திக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு
<> தனிநபர் வருவாயை 9 மடங்காக உயர்த்த முடிவு
<> அடுத்த 3 ஆண்டுகளில் 3,307 ஏரிகள் மேம்படுத்தப்படும்
<> வணிக ரீதியில் நாட்டுக்கோழி வளர்ப்புக்கு சிறப்பு திட்டம்
<> தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க திட்டம்
<> நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு ரூ.50 கோடி
<> காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்
<> தீயணைப்புத் துறைக்கு 197.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு
<> நீதி நிர்வாகத்திற்கு ரூ.236.15 கோடி ஒதுக்கீடு
<> வரும் ஆண்டில் 1 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும்
<> ஓட்டு பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்படும். இதற்காக ரூ. 15 கோடி ஒதுக்கீடு
<> வேளாண் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.3,804 கோடி ஒதுக்கீடு
<> வரும் நிதியாண்டில் 120 லட்சம் மெட்ரிக் கடன் உணவு தானிய உற்பத்திக்கு இலக்கு
<> நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு
<> அரசு மற்றும் பொதுமக்களுக்கு இடையே நடைபெறும் பணிகளில் வெளிப்படைத்தன்மை
<> கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள குடிசை வீடுகள் கான்க்ரீட் வீடுகளாக மாற்றப்படும். இதற்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
<> 400 கோடி ரூபாய் செலவில் 4,340 காவலர் குடியிருப்புகள் புதிதாக கட்டப்படும்
<> 39 நிலஅபகரிப்பு சிறப்புப் பிரிவுகள் துவங்கப்படும். அதேப்போல 25 சிறப்பு நிலஅபகரிப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்
<> மாவட்ட தொழில் மையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு
<> பொருளாதார வளர்ச்சி 9.30% ஆக இருக்கும். சேவைத் துறையில் பொருளாதார வளர்ச்சி
<> பட்டா மாற்றும் முறை எளிதாக்ப்படும்
<> கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக 22.49 கோடி ரூபாய் ஒதுக்கீடு
<> புதிதாக 9 தீயணைப்பு நிலையங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ. 320 கோடி ஒதுக்கீடு
<> மதுரை கோவை மாவட்டங்களில் ஈ செலான் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
<> கடந்த 10 மாதங்களாக அமைதி நிலவி வருகிறது. அமைதி, சட்டம் ஒழுங்கை தொடர்ந்து நிலைநாட்ட நடவடிக்கை
<> 32 மாவட்டங்களில் தனியார் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்படும்
<> நகர்ப்புற வறுமை ஒழிப்பிற்கு ரூ. 200 கோடி
<> தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கு புதிய திட்டம். 50% பெண்களுக்கு வாய்ப்பு. இதற்காக 100 கோடி ரூபாய மானியம் ஒதுக்கீடு
<> கிராமப்புற வறுமை ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்
<> 20000 தெரு விளக்குகள் புதிதாக பொருத்தப்படும்
<> நில ஆவணங்களை ஒழுங்குபடுத்த புதிய திட்டம்
<> தமிழகத்தின் உள்கட்டமைப்புப் பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதி. 2 கோடி திறன்மிக்க பணியாளர்கள் தேவைப்படுவார்கள்
<> நிதிநிலை மேம்பாடு, வோளாண், மின்சார கட்டமைப்பு உள்ளிட்ட சவால்கள் கவனமுடன் எதிர்கொள்ளப்படும்
<> மக்கள் வாழ்வாதாரத்திற்காக எண்ணற்ற புதிய திட்டங்கள் அறிமுகம்
<> பேரிடர் நிவாரணம் : கடலூர், விழுப்புரம் பகுதிகளில் உடனடி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக 850 கோடி ஒதுக்கீடு
<> ரூ.740 கோடி ஒதுக்கீட்டில் 1500 கி.மீ. தூர சாலைகள் அகலப்படுத்தப்படும்
<> கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய சட்டம் விரைவில் அமல். இதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு
<> விஷன் 2023ல் ரூ.15 லட்சம் கோடி, இந்த ஆண்டில் ரூ.1000 கோடி
<> நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.5,651.68 கோடி ஒதுக்கீடு
<> 100 கோடி ரூபாய் செலவில் பிளாஸ்டிக் சாலைகள்
<> உணவு மானியத்திற்கு ரூ.4,900 கோடி ஒதுக்கீது
<> தேசிய கிராமப்புற சுகாதார இயக்க திட்டங்களுக்கு ரூ.950 கோடி ஒதுக்கீடு
<> அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சமாக உயர்வு
<> தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
<> 60,000 வீடுகளுக்கு சூரிய ஒளியில் இயங்கும் வீடுகள். இத்திட்டத்திற்கு ரூ.1,050 கோடி ஒதுக்கீடு
<> வணிக வரி வருவாய் ரூ.6,678 கோடி
<> சூரிய ஒளியுடன் கூடிய வீடுகள் தமிழகத்தில் இந்த நிதியாண்டில் துவக்கப்படும்
<> 548 கோடி செலவில் புதிய பேருந்துகள் வாங்கப்படும்
<> சாலை பராமரிப்புக்காக ரூ.1,180 கோடி ஒதுக்கப்படும்
<> அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்திற்கு ரூ.2000 ஒதுக்கீடு
<> அரசு ஊழியக்ளுக்கு வீட்டு வசதிக் கடன் ரூ.15 லட்சத்தில் இருந்து 25 லட்ச ரூபாயாக உயர்வு
<> 2011-12ம் ஆண்டின் தமிழகஅரசின் சொந்த வரி வருவாய் ரூ.59,932 கோடி
<> வரி அல்லாத இனங்கள் மூலம் வருவாய் ரூ.6,032 கோடி
<> அன்னதானத் திட்டம் மேலும் 50 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்
<> புதிதாக 3000 பேருந்து இயக்கப்படும்
தகவல்:
தினமணி |