காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டரில், இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வது குறித்த பயிற்சி வகுப்புகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறாவது வகுப்பு, 18.03.2012 அன்று நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து, தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தஃவா சென்டரின் தொடர் தர்பிய்யா வகுப்பு - 6 (தஃவா பயிற்சி)
தஃவா பயிற்சி பட்டறையின் வகுப்பான 6 ஆம் வகுப்பு 18-03-2012 காலை முதல் மாலை வரை குறித்த நேரத்தில் நடைப் பெற்றது. இதில் கலந்து ஒவ்வொரு முறையும் பயிற்சி பெற்றுக்கொண்டிருப்பவர்கள் கல்லூhயில் படிக்கும் மாணவர்கள், வேலை செய்பவர்கள், மற்றும் உயர் பதவி வகிப்பவர்கள் என்பதை நாம் முன்பு வெளியிட்டிருந்த செய்தியின் மூலம் அறிவோம். வழக்கம் போல வகுப்பில் முதலாவதாக சென்ற வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்கள் பற்றிய தேர்வு நடத்தப்பட்டது.
பின்னர்,
‘‘ஹிந்து சகோதரர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது!” என்ற தலைப்பில், முன்னாள் சினிமா நடிகரான குருசாமி (என்ற) முஹம்மது அமீருதீன் அவர்கள் இஸ்லாமிய அழைப்பாளர், சென்னை. - ஹிந்து மக்களிடையே காணப்படும் மூடப்பழக்க வழக்கங்களினால் தோற்றி இறைக்கொள்கைகளை மையமாக வைத்து பாடம் நடத்தினார். மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தக்க விளக்கங்களையும் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
மதியம் சகோதரர் எம்.சி.முஹம்மது அவர்களின் ‘‘குர்ஆனாக வாழ்ந்திடு….” என்ற தலைப்பில் நமது ஆத்மாவை எவ்வாறு குர்ஆனோடு ஒன்றினைப்பது என்று நபி(ஸல்) வழியின் மூலம் அழகிய முறையில் எடுத்துரைத்தார்கள்.
பின் சகோதரர் பிலால் அவர்கள் நபிவழி பிரார்த்தனை என்ற அன்றாடம் நாம் ஓத வேண்டிய துஆக்களை மனனம் செய்ய பணித்தார்கள். இதில் சென்ற முதல் வகுப்பில் மனனம் செய்ய தந்த துஆக்களை அனைவரும் சிறந்த முறையில் மனனம் செய்திருந்தது குறிப்பிடதக்கது அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் மாணவர்களுக்கு பயின்ற பாடத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றிய இறுதி வகுப்பு இன்ஷாஅல்லாஹ் வருகிற ஏப்ரல் மாதம் 22 -ஆம் தேதியும் அதற்கு அடுத்த மாதம் பயிற்சியினுடைய பலனாக கிரமங்களுக்கு அழைத்து சென்று பிறமத சகோதரர்களுடன் நேரடி தஃவா பயிற்சியுடன் (செய்தலுடன்) இந்த Batch முடிவடைகிறது.
இதனைத் தொடர்ந்து தஃவா பயிற்சியின் (Dawah Training Camp – DTC) Batch- 2 தொடரும் இன்ஷாஅல்லாஹ்.
இவ்வாறு, காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |