காயல்பட்டினம் வாவு வஜிஹா வனிதயர் கல்லூரியில் மாநில அளவிலான தகவல் தொழில் நுட்ப (information Technology - ITI) அறிவுப் போட்டி (Info-Retina"12) கல்லூரிகளுக்கிடையே 29.02.2012 (புதன் கிழமை) காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
கல்லூரியின் நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் முன்னிலை வகித்தார்.. கல்லூரி முதல்வர் முனைவர் .மெர்ஸி ஹென்ரி துவக்க உரையாற்றி, போட்டிகளைத் துவக்கி வைத்தார். கல்லூரி செயலர் ஹாஜி வாவு முஃதஸிம் பாராட்டுரை வழங்கினார்.
இப்போட்டியில், திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, திருநெல்வேலி சாரதா கல்லூரி, தூத்துக்குடி வ.வு.சிதம்பரனார் கல்லூரி, திருநெல்வேலி ரோஸ் மேரி கல்லூரி, தூத்துக்குடி பிஷப் கால்டுவெல் கல்லூரி, தூத்துக்குடி தூய மரியம்மை கல்லூரி, திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆகிய 8 கல்லூரிகளில் இருந்து 97 மாணவியர் கலந்துகொண்டனர்.
மாணவியருக்கிடையே Paper Presentation, Hardware Marketing, Software Developing, Word Hunt போன்ற அறிவுப் போட்டிகள் நடைபெற்றது. மாலை 03.00 மணி அளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் கணிப்பொறியியல் பேராசிரியர் முனைவர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தகவல் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார்.
தகவல் தொழில் நுற்ப அறிவுப் போட்டி (Info-Retina"12)இல் திருநெல்வேலி ஸ்ரீ சாரதா கல்லூரி மாணவியர் முதலிடம் பெற்றனர். இவர்களுக்கான வெற்றிக் கேடயத்தை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் கணிப்பொறியியல் பேராசிரியர் முனைவர் மகேந்திரன் வழங்கினார். பின்னர், போட்டியில் கலந்துகொண்ட அனைத்து கல்லூரி மாணவியருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போட்டி ஏற்பாடுகளை, கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் ஷர்மின் மேரி ஜானகி மற்றும் துறை பேராசிரியையரும், மாணவியரும் செய்திருந்தனர். |