தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட அளவிலான பொறுப்பிடங்களில் ஆளில்லா பொறுப்பிடங்களுக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் புதியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விபரம் பின்வருமாறு:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 02.03.2012 வெள்ளிக்கிழமையன்று தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட பொறுப்புகளில் ஆளின்றியுள்ள பொறுப்பிடங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட துணைச் செயலாளர்களாக ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த ரியாஸ் கான் என்பவரும், குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த முஹம்மத் ரஃபீக் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்ட மருத்துவரணி செயலராக, காயல்பட்டினத்தைச் சேர்ந்த கே.முஹ்ஸின் (முர்ஷித் ஜெராக்ஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தகவல்:
N.M.தமீமுல் அன்ஸாரீ,
துணைத்தலைவர்,
காயல்பட்டினம் நகர தமுமுக. |