தொடர் மின்வெட்டு மற்றும் கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தி காயல்பட்டினம் அரசியல் கட்சிகள், வணிகர்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (02.03.2012) வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் பழைய தொலைபேசி நிலையத்தின் பின்புற வளாகத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து, நகர பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் வணிகர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினத்தில் தினமும் 10 மணி நேர மின்தடையால் பொதுமக்கள், வணிகர்கள், பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாகத் திறக்கவும், மத்திய - மாநில அரசுகளின் கவனத்திற்கு தெரியப்படுத்தவும் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தங்களது அமைப்பின் நிர்வாகிகள் அவசியம் கலந்து, ஆலோசனை வழங்க அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். இக்கலந்தாலோசனைக் கூட்டத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர். |