திறந்த வெளியாக இருக்கும் மாணவியர் விடுதி வராண்டாவை, பருவ நிலை மாற்றங்களுக்கேற்ப மாணவியருக்கு பாதுகாப்பானதாக அமைத்திட நிதியுதவி தேவைப்படுவதாக காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் வேண்டுகோள்!
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்...
இறையருளால் கடந்த 23 வருடங்களாக நமது அயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி அதன் தூய நோக்கோடும் ஏகத்துவ கொள்கை பிடிப்போடும் இயங்கி வருவதை தாங்களெல்லாம் அறிவீர்கள்.
கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மாணவியர் தற்போது நமது கல்லூரியில் பயின்று வருகின்றனர் அவர்களுள் 200க்கும் மேற்பட்ட வெளியூர் மாணவியர் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர் விடுதியின் உள் கட்டமைப்பு திறந்தவெளியாக இருப்பதால், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவியர் கோடை காலம், குளிர் காலம் மற்றும் மழைக் காலங்களின் தட்ப-வெப்ப நிலைகளின் தாக்குதலால் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
அது மட்டுமின்றி, நமது கல்லூரியில், ஆண்டுவிழா மற்றும் மார்க்கப் போட்டிகள் ஆண்டுதோறும் இருபெரும் நிகழ்ச்சிகளாக அழகிய ஏற்பாட்டுடன் மாணவியர்களின் இஸ்லாமிய அறிவுத் திறனை உயர்த்தும் வண்ணம் நடைபெற்று வருகிறது.
இவ்விழா நாட்களிலும் தாழ்வாரம் இல்லாத சூழ்நிலைகள் சிரமத்தை ஏற்படுத்துவதால் இச்சிரமங்களை எல்லாம் போக்க நிரந்தர கூரை போட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம். விடுதியின் உள் வளாகம் கிட்டத்தட்ட 5804 சதுர அடி அளவில் உள்ளது. இந்த வளாகத்தில் இரும்பு ஆங்கிள் அடித்து கூரை போடுவதற்கு ரூபாய் 8 லட்சம் தேவைப்படுகிறது.
எனவே நல்லுள்ளம் கொண்டவர்கள் இந்த நன்மையான காரியத்தை முடித்து தருவதின் மூலம் இறைவனிடம் இம்மை மறுமையின் நற்பேறுகளை பெறும் நல்லடியார்களாக திகழ்வோமாக!
இவ்வகைக்காக நிதியுதவி செய்ய விரும்புவோர்
Bank: INDIAN OVERSEAS BANK
Branch: KAYALPATTINAM
IFSC Code: IOBA0000491 [For online / NEFT Transfer]
Account Type: Savings
Account No: 049101000018460
Name: M.S. Syed Katheeja
என்ற வங்கிக் கணக்கில் தங்களது பொருளாதார ஒத்துழைப்புகளை அனுப்பித் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம். ஜஸாக்குமுல்லாஹு கைரா...
இவ்வாறு, ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 15:53/03.03.2012] |