வரும் மார்ச் மாதம் 03ஆம் தேதியன்று, அய்யா வைகுண்டசாமி பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் அய்யா வைகுண்டசாமி வழிபாட்டுத் தலங்களில் அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அய்யா வைகுண்டசாமி பக்தர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக இருப்பதால், மேற்படி மாசி மாதம் 20ஆம் நாள் (03.03.2012 சனிக்கிழமை) மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
மேற்படி மாசி மாதம் 20ஆம் நாள் (03.03.2012) அன்று மாவட்டம் முழுமைக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும். எனினும், 03.03.2012 அன்று அரசுத் தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ / மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி (Negotiable Instrument Act) பொது விடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது.
இந்நேர்வில், அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா, 03.03.2012 விடுமுறை நாளான சனிக்கிழமையில் வருவதால், அன்றைய தினம் வேலை நாளாக உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்காக / கல்வி நிறுவனங்களுக்காக இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
எனவே, 03.03.2012 அன்று வேலை நாளாக உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு / கல்வி நிறுவனங்களுக்கு இதற்கு பதிலாக 10.03.2012 இரண்டாவது சனிக்கிழமை மாற்றுப் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |