காயல்பட்டினத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்செந்தூரிலிருந் 8 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள பரமன்குறிச்சி கிராமத்தில், தேவைப்படும் சகல கட்டமைப்பு வசதிகளுடன் ஆயத்த நிலையிலுள்ள மத்ரஸாவை நிர்வகிக்க முன்னனுபவமிக்கவர்கள் தேவை என மத்ரஸா நிர்வாகக் குழு மற்றும் ஜமாஅத்தார் சார்பில்வின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ஒரு நற்செய்தி!
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மத்ரஸா நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கும், புதிய மத்ரஸா ஆரம்பிக்க இடவசதி, பண வசதி இல்லாதவர்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு!
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா - திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், பரமன்குறிச்சி கிராமம், மில்லத் நகரில் சுமார் 3000 சதுர அடி விஸ்தீரணத்தில் அனைத்து வசதிகளும் கொண்டு சிறப்பாக கட்டப்பட்டுள்ள புதிய மத்ரஸாவை அல்ஹாஜ் எஸ்.அக்பர்ஷா (எல்.கே.எஸ்.கோல்டு ஹவுஸ், தி.நகர் - சென்னை) அவர்களின் பொற்கரங்களால் திறந்து வைக்கப்பட்டு, மத்ரஸா ஆரம்பிக்க எல்லா வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
மத்ரஸாவின் சிறப்பம்சங்கள்:
(01) அலுவலக அறை
(02) இமாம்கள் தங்கும் அறை
(03) மாணவர்கள் தங்கும் அறை
(04) வகுப்பறை
(05) மாணவர்கள் உணவருந்தும் அறை
(06) சமையலறை, சமையற்கூடம்
(07) சாமான் அறை (ஸ்டோர் ரூம்)
(08) விளையாட்டு மைதானம்
(09) குளிக்க, குடிக்க சுத்தமான தண்ணீர்
(10) மின்தடையின்போது பயன்படுத்த ஜெனரேட்டர் வசதி
(11) கழிப்பறைகள், குளியலறைகள்
(12) உணவு ஏற்பாடுகள் (மூன்று வேளை)
(13) உடை
(14) 30 முதல் 40 மாணவர்கள் தங்குவதற்கும், ஓதுவதற்கும், ப்ளஸ் 2 வரை படிப்பதற்கும் அனைதது வசதிகளும் முற்றிலும் இலவசமாக செய்து தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்ரஸா நடத்தி அனுபவம் உள்ளவர்கள், தகுதி உள்ளவர்கள் முழுமையாக விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
+91 98842 00468
+91 94429 64663
+91 99411 77386
+91 98411 13207
+91 94440 33556
நேர்காணல் தேதி:
04.03.2012 முதல் 06.03.2012 வரை தினமும் சரியாக மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை மட்டும்.
நேர்காணல் இடம்:
ஜும்ஆ பள்ளிவாசல், மில்லத் நகர், பரமன்குறிச்சி கிராமம், திருச்செந்தூர் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம்.
நேர்காணலுக்கு வரும்போது தகுந்த ஆவணங்களுடனும், புகைப்பட ஆதாரங்களுடனும் வரவும்.
வஸ்ஸலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலதிக விபரங்களைக் கேட்கையில்,
மத்ரஸாவை நிர்வகிக்க ஆகும் செலவினங்கள் அனைத்திற்கும் நிர்வாகம் பொறுப்பேற்குமென்றும், மாணவர் சேர்க்கை, அவர்களுக்கான பாடங்களை நடத்தல், உணவு ஏற்பாடுகளை கவனித்தல் உள்ளிட்ட மத்ரஸாவின் அனைத்து செயல்பாடுகளை முறையாக செய்வதை மட்டுமே நேர்காணலுக்கு வருவோரிடம் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், மத்ரஸா நிர்வாகக் கமிட்டி தலைவர் ஐதுரூஸ் தெரிவித்தார். |