நஸூஹிய்யா மத்ரஸாவில் நடைபெற்ற மகளிர் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கில் திரளான பெண்கள் பங்கேற்றனர். விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள அல்மத்ரஸதுன் நஸூஹிய்யாவில், “மகளிர் கல்வி விழிப்புணர்வு” என்ற தலைப்பில், 23.02.2012 அன்று மாலை 05.00 மணியளவில் கருத்தரங்கம் நடைபெற்றது.
ஹாஜ்ஜா வி.பி.எம்.முஹம்மத் ஃபாத்திமா தலைரமை தாங்கினார். மாணவி வி.எஸ்.எஸ்.மாதிஹா கிராஅத் ஓதி கருத்தரங்க நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
நஸூஹிய்யா மத்ரஸாவின் ஒருங்கிணைப்பாளரும், காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியின் ஆலோசகருமான துளிர் எம்.எல்.ஷேக்னா லெப்பை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஹாஜ்ஜா இசட்.ஏ.ரஜீனா மற்றும் திருக்குர்ஆனை மனனம் செய்துள்ள ஹாஃபிழாக்கள் கருத்துரை வழங்கினர்.
காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவில் செயல்பட்டு வரும் சமுதாயக் கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.புகாரீ இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “மகளிர் கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பொறியாளர் ஏ.டி.மஸ்ஊதா நன்றி கூற, எஸ்.ஃபாத்திமாவின் இறைப்பிரார்த்தனையுடன் கருத்தரங்க நிகழ்வுகள் நிறைவுற்றன.
இக்கருத்தரங்கில் பங்கேற்ற ஆண்கள் திரை மறைவிலிருந்து உரையாற்றினர். நஸூஹிய்யா மத்ரஸா சுற்றுவட்டாரத்திலுள்ள மகளிர் திரளாகக் கலந்துகொண்டனர். |