பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அன்று காயல்பட்டினத்தில் பெரிய நெசவு தெருவில் ஒரு கட்டிடமும், எல்.கே.லெப்பை தம்பி சாலையில் ஒரு
கட்டிடமும் - நகராட்சி சாலையினை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன எனக் கூறி - போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில்
இடிக்கப்பட்டன. மேலும் - எல்.கே. லெப்பை தம்பி சாலையில் வேறு சில கட்டிடங்களுக்கும் - காயல்பட்டினம் நகராட்சி மூலம் - இது குறித்து
நோட்டீஸ் - பிப்ரவரி 1 அன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதில் - கடிதம் கிடைக்கப்பெற்ற 7 நாட்களில் - ஆக்கிரமிப்பு அகற்றப்படவேண்டும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கடிதம் பெற்ற கட்டிடங்களில் ஒன்றின் உரிமையாளர் எம்.எம். நூர்ஜஹான். அவருக்கு சொந்தமான எஸ்.எம். காம்ப்ளெக்ஸ் -
ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக நகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 அன்று அவரின் கட்டிடம்
இடிக்கப்படவில்லை.
இருப்பினும் - அவர் கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கட்டிட உரிமையாளரின் மகன் ஜாகிர் ஹுசைன்
குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் காயல்பட்டணம்.காம் - இணையதளத்திற்கு தெரிவிக்கையில்:-
தற்போது ஆக்கிரமிப்பு என நகராட்சியால் கூறப்படும் இடம் - காயல்பட்டினம் பேரூராட்சியின் 30.4.82 அன்றைய தீர்மானம் எண் 19 மூலம் - இந்த
இடத்தை நாங்கள் பயன்படுத்த ஆட்சேபனை இல்லை என அறிவிக்கப்பட்ட இடம். இந்த இடத்திற்கு பட்டா பெற, மாவட்ட ஆட்சியரிடம்
விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம்.
இதற்கிடையில் பிப்ரவரி 1 அன்று நகராட்சி பெயரில் அனுப்பப்பட்ட கடிதத்தினை தொடர்ந்து - நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை
கிளையினை அணுகினோம். பிப்ரவரி 20 அன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் - மாவட்ட ஆட்சியர், எங்கள் பட்டா விண்ணப்பம் குறித்து - இரு
வாரங்களுக்குள் முடிவினை கூறவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் - மாவட்ட ஆட்சியர் தனது முடிவினை அறிவிக்கும் வரை, எங்கள்
கட்டிடம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது (Status Quo) எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் - பிப்ரவரி 27 அன்று எங்கள கட்டிடத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற ஆணையினை அவமதித்த செயலாகும்.
இவ்வாறு கட்டிட உரிமையாளரின் மகன் ஜாகிர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினம் பேரூராட்சியின் 30.4.82 அன்றைய தீர்மானம் எண் 19 மூலம் - இந்த இடத்தை நீங்கள் பயன்படுத்த ஆட்சேபனை இல்லை என அறிவிக்கப்பட்ட செய்தி... அது அன்று...!
ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக நகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள செய்தி... இது இன்று...!
நீதிமன்ற பிரச்சனைகள் நிலுவையில் இருக்கும் போது மின்சாரத்தை துண்டித்தது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது...
தாங்கள் காயல்பட்டிணம் மின்சார வாரியத்தின் மீது மேல் நடவடிக்கை எடுக்கலாம்..!
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross