2012 ஆம் ஹஜ் பயணம் குறித்து தமிழ்நாடு ஹஜ் குழு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, ஹஜ்-2012-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான
விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ளவிருக்கிறது. ஹஜ் 2012-ற்கான
விண்ணப்பப் படிவங்களை சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி
டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது
இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப்
படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.
2. பாஸ்போர்ட்டில் மட்டுமே (Passport) ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், ஹஜ் 2012-ல்
பன்னாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். ஹஜ் 2012 - ற்கான
மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.03.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும்.
ஹஜ் 2012 பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு, ஹஜ் 2012-ற்கான வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது
இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் www.hajcommittee.com மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.
3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக்
கட்டணமாக (Processing Fee) பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.32175017712-ல் செலுத்தி அதற்கான
வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பன்னாட்டு கடவுச் சீட்டின் நகலினை இணைத்து தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012
-ற்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
சிறப்பு வகைப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயணிகள் அவ்வகைக்கான அனைத்து வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுவதுடன் அனைத்து
நிபந்தனைக்குட்பட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை. |