தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறையை மீறி வாகனங்களில் எண்கள் எழுதப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ. ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இருசக்கர, நான்குசக்கர உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் எண்களும் போக்குவரத்து விதிமுறைகளுக்கு உள்பட்டு எழுதப்பட்டிருக்கவேண்டும். வாகனப் பதிவு எண்களில் எழுத்துகள் ஆங்கிலத்திலும் எண்கள் பொதுவான எண்களாகவும் எழுதப்பட்டிருக்கவேண்டும். தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் எண்களை எழுதியிருக்கக் கூடாது.
தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்களின் பதிவு எண்கள் வெள்ளை நிற பலகையில் கறுப்பு எண்களில் எழுதப்பட்டிருக்கவேண்டும். வாடகைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் பதிவு எண்கள் மஞ்சள் வண்ண பலகையில் கறுப்பு எழுத்தில் எழுதப்பட்டு இருக்கவேண்டும். வாகனங்களில் விதிமுறைகளை மீறி வாசகங்கள், படங்கள், சின்னங்கள் இடம் பெற்றிருக்கக் கூடாது. போக்குவரத்து விதிமுறையை மீறி வாகனங்களின் எண்கள் எழுதப்பட்டிருந்தால் அதை உடனடியாக மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும்.
இதற்கு பின்னரும் விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட்டுகள் எழுதப்பட்டு இருந்தால் அவற்றின் மீது மோட்டார் வாகனச் சட்டங்களின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மாவட்டத்தில் மரத்தடிகள், வைக்கோல், கன்டெய்னர்கள் ஏற்றி செல்லும் லாரிகள் அனைத்தும் விதிமுறைகளுக்குள்பட்டே பாரங்களை ஏற்றிச் செல்லவேண்டும். மரத்தடி உள்ளிட்ட பாரங்கள் வாகனங்களுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்க கூடாது. இதில் விதிமுறைகளை மீறும் வாகனங்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல மணல், சரள், சாம்பல் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் தார்ப்பாய் போட்டு மூடிக் கொண்டு செல்லவேண்டும். இதை கடைப்பிடிக்காதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்த சட்டம் எல்லோருக்கும் அல்ல...! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[18 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17028
இப்படி எத்தனை வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்..? லாரிகள் அதிவேகம்..! மணல் லாரிகள் மேல் பகுதியில் தார்பாய் கிடையாது.. லாரியை மறித்து பிடித்து அபராதம் போட்டால் மேல் இடத்தில இருந்து தனது லாரியை விடுவிக்கும்படி தொலைபேசி அழைப்பு வரும்... இன்று இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் கனரக வாகனக்கள் எல்லாம் அரசியல்வாதிகளின் பினாமிகள் பெயரில் தான் இயங்குகிறது... நீங்க போடுற சட்டம் எல்லாம் நடைமுறையில் இல்லை.. சட்டம் இருக்கலாம் ஆனால் செயல் பாடுகள் முடங்கி கிடக்கும்..
அப்பாவி மக்களின் சிறு வாகனங்கள் மேல் சில அபராதங்களை போட்டு விட்டு அவர்களை அங்கும் இங்குமாக அலைய விடுவது தான் வாடிக்கையாக இருக்கிறது...
தவறுகள் செய்யும் வாகனங்கள் யாருடையதாக.. யாராக.. இருந்தாலும் சட்டம் தனது நிலைபாட்டை மாற்ற கூடாது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross