மதுரையிலிருந்து, ஆறுமுகநேரி - காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் செல்லவேண்டிய அரசுப் பேருந்து ஒன்று இன்று நண்பகல் 12.20 மணியளவில், ஆறுமுகநேரிக்குள் செல்லாமல், பேருந்து போக்குவரத்துக்கு வரையறுக்கப்படாத காயல்பட்டினம் புறவழிச்சாலை வழியாக வந்தது.
ஐக்கிய விளையாட்டு சங்க முனையை பேருந்து வந்தடைந்தபோது வழிமறித்து விசாரிக்கையில், வழியில் பழுது ஏற்பட்டதால் பயண நேரம் தாமதமாகிவிட்டதாகவும், எனவே மாற்றுப்பாதையில் வர நேரிட்டதாகவும் அப்பேருந்தின் நடத்துனர் தெரிவித்தார்.
2. Re:என் வழி தனீ... வழி! (?!)... posted byRefai (Dar Es Salaam)[18 February 2012] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 17030
ஆமா ஆமா அந்த கஷ்டம் எங்களுக்குதான் தெரிஞ்சி இருக்கும்.
இப்படித்தான் ஈரோடு வண்டி ஒரு முறை என் மகனை ஏற்றி வந்தது. டிக்கட் எடுத்தது என்னவோ காயல் பட்டினம்! நடாத்துனரும் அப்படித்தான் பதிவு செய்துள்ளார். ஆனால் தூத்துக்குடி வந்ததும் காயல் பட்டணம் போகாது அடைக்கலாபுரம் வழியாகத்தான் போகும் என்று சொன்னாராம்.உடனே நானும், வேறு ஒருவருடன் ஆறுமுகநேரி சென்று காத்து இருந்தோம். வண்டியும் வந்தது.
பல பிரச்சினைக்கு மத்தியிலும் ஆறுமுகநேரி மக்கள் ஒரேபிடியாக காயல்பட்டணம் வழியாகத்தான் இந்தவண்டி போக வேண்டும் என்று எங்களோடு ஒன்று சேர்ந்து விடாப்பிடியாக காலை நாலரை மணிக்கு எங்களோடு போராடி வண்டியை காயல்பட்டணம் வழியாக விட்டார்கள்!
6. பூனைக்கு யார்.. மணிகட்டுவது என்ற.. கதையாகி விட்டது..! posted byநட்புடன்... தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[19 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17037
ஆறுமுகநேரி வழித்தடத்தில் செல்லகூடிய திருச்சி பேருந்து ஆறுமுகநேரி வழியாக செல்லாமல் நமது பைபாஸ் ரோடு வழியாக சென்று கொண்டு இருக்கிறது.. நமது சகோதர சமுதாய பேயின்விளை, ஆறுமுகநேரி மக்கள் திருச்சி செல்வதற்கு ரெம்ப அவதிகள் படுகிறார்கள்.. இது பலமுறை நடைபெறுகிறது...!
பேயின்விளை, ஆறுமுகநேரி மக்கள் திருச்சி செல்வதற்கு பேருந்து வரும் என்று காத்துகிடந்து ஏமாற்றம் அடைகிறார்கள்..
8. Re:என் வழி தனீ... வழி! (?!)... posted byFasi Ismail (Kayalpatnam)[19 February 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 17039
சரி விடுங்க Express வண்டி அதான் குருக்குவளியிலே வண்டியை விட்டுட்டாரு இத போய் பெருசு பண்ணிட்டு. ஊர்ல ஒருநாளிக்கு 10 மணி நேரம் பவர் கட்பண்றாங்க இந்த பிரச்சனைக்கு கூட்டம் கூடி எதாவது ஒரு நல்ல முடிவு எடுங்க.
9. Re:என் வழி தனீ... வழி! (?!)... posted bys.சம்சுதீன் (காயல்பட்டணம்)[19 February 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 17040
இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது சரியான வழித்தடத்தில் வராதது கண்டிக்கதக்கது .நமதூரில் ஒருவழிப்பாதை ஆன பிறகும் பெரும்பாலான பேருந்துகள் அடைககலாபுரம் வழியாகத்தான் செல்கிறது.
இது விஷயத்தில் நாம் கவனம் செலுத்தி நமது வழித்தடத்தில் வரவேண்டிய பேருந்துகள் ஒழுங்காக வருவதற்க்கு வழிவகை செய்து நமது மக்களின் சிரமங்களைப் போக்கவேண்டும்.
10. Re:என் வழி தனீ... வழி! (?!)... posted byP.S.ABDUL KADER (JEDDAH,KSA)[19 February 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17042
ஊருக்குள் பஸ் வந்தாலும் குறை, ஊருக்கே வராது அடைகலபுரம் வழியாக போனாலும் குறை, நகர வீதி வழியாக பேருந்து வருவதற்கும் தடை, மறியல் என்று இருக்கும்போது பேருந்து ஓட்டுனர் என்னதான் செய்வர்? காலதாமதம் கண்டுதானே பைபாஸ் வழியாக தனியாக வந்து இருக்கிறார். இதில் தவறு ஏதும் இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross