சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்ற பொதுக்குழுவில், 2012-13ஆம் ஆண்டு பருவத்திற்கான மன்றத்தின் புதிய நிர்வாகக் குழு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நிகழ்முறை:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது ரியாத் காயல் நற்பணி மன்ற 43ஆவது பொதுக்குழுக் கூட்டம் 10.02.2012 வெள்ளிகிழமையன்று மக்ரிப் தொழுகைக்கு பின் ரியாத் பத்ஹா ஹால்ப் மூன் ஹோட்டல் பார்ட்டி ஹாலில் ஜனாப் பிரபு எஸ்.டி.ஷெய்குனா ஆலிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கே.பி.செய்யித் அஹ்மத் ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கிவைத்தார். மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் CARREFOUR என்.எம்.செய்யி இஸ்மாயில் வந்தோரை வரவேற்றார் .
இன்னிசைத் தென்றல் ஜனாப் எஸ்.எச்.ஷைக் அப்துல் காதர் அவர்கள் இனிமையான பாடல் ஒன்றை பாடி மகிழ்வித்தார்.
தலைமையுரை:
அடுத்து, கூட்டத் தலைவர் தலைமையுரையாற்றினார். ஸதக்காவின் சிறப்புக்கள் பற்றி சீரிய முறையில் நயம்பட அவர் தனதுரையில் எடுத்துரைத்தார். “இம்மன்றத்தின் செயல்பாடுகள் மிகவும் என்னை ஈர்த்து விட்டது... இதன் நிர்வாகிகள் மிகச் சிறப்பான முறையில் முன்கொண்டு செல்கிறார்கள்... எல்லாம்வல்ல அல்லாஹ் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் அவனளவில் பொருந்திக் கொள்வானாக” என்று கூறி பிரார்த்தித்தார்.
புதிய நிர்வாகம்:
நடப்பு ஆண்டு 2012 & 2013 ஆண்டுக்கான மன்றத்தின் புதிய நிர்வாகிகளாக கடந்த செயற்குழுவில் ஒரு மனதாக தெரிவு செய்யபட்டோரின் பெயர்கள் மற்றும் அவர்களின் பொறுப்புகள் பட்டியலை அல்ஹாஃபிள் ஷைக் தாவூத் இத்ரீஸ் அவர்கள் வாசிக்க, பொதுக்குழுவில் கலந்துகொண்டோர் தக்பீர் முழக்கத்துடன் அதை அங்கீகரித்தனர்.
தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம் பின்வருமாறு:-
தலைவர்:
ஜனாப். ஹாஜி .M .N .மின்ஹாஜ் முஹ்யித்தீன்
துணைத் தலைவர்கள்:
ஜனாப் ஹாஜி அல்ஹாபிள்.M.A.ஷைக் தாவூத் இத்ரீஸ்
ஜனாப் ஹாஜி A.H.முஹம்மத் நூஹு
செயலாளர்:
ஜனாப் .ஹாஜி கூஸ் S.A.T.முஹம்மத் அபூபக்கர்
துணைச் செயலாளர்கள்:
ஜனாப் .ஹாஜி M.S..நயீமுல்லாஹ்
ஜனாப் .ஹாஜி அல்ஹாஃபிள் P.M.முஹம்மத் சர்ஜூன்
பொருளாளர்:
ஜனாப் ஹாஜி A.T.சூபி இப்ராஹீம்
இணைப் பொருளாளர்:
ஜனாப் .ஹாஜி Y.A.S.ஹபீப் முஹம்மத் முஹ்சின்
கணக்குத் தணிக்கையாளர்:
ஜனாப் .ஹாஜி P.M.S.முஹம்மத் லெப்பை
காயல்பட்டணம் RKWA பிரதிநிதிகள்:
ஜனாப் ஹாஜி A.தர்வேஷ் முஹம்மத்
ஜனாப் .ஹாஜி சோனா .ஷாகுல்ஹமீத்
செயற்குழு உறுப்பினர்கள்:
01. ஜனாப் ஹாஜி பிரபு S.D.ஷைகுனா ஆலிம்
02. ஜனாப் ஹாஜி S.D.முஹம்மத் பாரூக்
03. ஜனாப் ஹாஜி A.S.L.சுலைமான் லெப்பை
04. ஜனாப் ஹாஜி M.E.L.நுஸ்கி
05. ஜனாப் ஹாஜி S.M.A.முஹைதீன் சதகதுல்லாஹ்
06. ஜனாப் ஹாஜி S.M.B.செயத் முஹம்மத் சாலிக்
07. ஜனாப் ஹாஜி V.S.H.செயத் முஹம்மது அலி
08. ஜனாப் ஹாஜி S.M.முஹம்மத் லெப்பை
09. ஜனாப் ஹாஜி S.A.K.மஹ்மூத் சுல்தான்
10. ஜனாப் ஹாஜி S.S.மீரா சாஹிப்
11. ஜனாப் ஹாஜி S.L.சதகதுல்லாஹ்
12. ஜனாப் ஹாஜி ஹாபிள் P.S.J.ஜைனுல் ஆப்தீன்
13. ஜனாப் ஹாஜி N.M.செயத் இஸ்மாயில்
14. ஜனாப் K.S. முஹம்மத் நியாஸ்
15. ஜனாப் ஹாஜி K.M.N.அபூபக்கர் சம்சுதீன்
16. ஜனாப் ஹாஜி M.N.முஹம்மத் ஹசன்
17. ஜனாப் ஹாஜி V.M.A.மொக்தூம் அமீன்
18. ஜனாப் ஹாஜி SA .சித்தீக்
19. ஜனாப் ஹாஜி S.H.செய்யத் முஹம்மத்
20. ஜனாப் ஹாஜி H.A.உமர் பாரூக் பாஸி
தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகக் குழுவினருக்கு பல்வேறு பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
புதியோர் அறிமுகம்:
அடுத்து புதிய பொதுகுழு அங்கத்தினர்களை வரவேற்று, அவர்களை அறிமுகப்படுத்தி மன்ற இணைப் பொருளாளர் ஜனாப் Y.A.S.ஹபீப் முஹம்மத் முஹ்சின் உரையாற்றினார்.
நிதிநிலையறிக்கை:
நிதி நிலை அறிக்கையை மன்ற பொருளாளர் .ஜனாப் A.T.சூபி இப்ராகிம் சமர்ப்பித்தார்.
பல்வேறு தேவைகளுக்காக உதவிகளை எதிர்பார்த்து நம் மன்றத்தால் பெறப்பட்ட கடிதங்கள் அனைத்தையும் பரிசீலித்து, கூடுமான வரை உதவி செய்வதாக தனதுரையில் அவர் குறிப்பிட்டார். நமது சங்க அங்கத்தினர்கள் சந்தாக்களை துரிதமாக தாமதம் இல்லாமல் வழங்கி ஒத்துழைக்குமாறு அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.
அடுத்து மன்ற துணை செயலர்களில் ஒருவரான ஜனாப் M.S.நஈமுல்லாஹ் மன்றத்திற்கு வந்திருந்த கடிதங்களில் மூன்று கடிதங்களை வாசித்து காட்டி குறிப்பாக வந்திருக்கும் கடிதங்கள் கேன்சர் சம்பந்தமாக அதிகம் வருகிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் தான் நமது ஊரை காப்பாற்ற வேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி, இது போன்ற விசயங்களில் நமது மக்கள் தம்மால் முடிந்த உதவிகளை துரித மாக வழங்கி ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
வாழ்த்துரை:
அடுத்து சிற்றுரையாற்றிய ஜனாப் மக்கி அஹ்மத் சாஹிப் ஆலிம் அவர்கள் நமது அமைப்பு ஆற்றும் பணி அல்லாஹ்விடத்தில் மகத்தான நன்மையை கொடுக்கும் .இது போன்ற விசயத்தில் நமது சகோதரர்கள் முன்னை விட சிறப்பாக செயலாற்றுவதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டார்.
அடுத்து உரையாற்றிய ஜனாப் M.E.L.நுஸ்கி இதுவரை மன்றம் ஆற்றியிருக்கும் பணிகளை தனதுரையில் தெள்ளத் தெளிவாக எடுத்து உரைத்தார்.
மன்றம் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தவிருப்பதாகவும், அதற்கு உறுப்பினர்கள் அனைவரது மனப்பூர்வமான ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார். காயலர்கள் பலர் இன்னும் மன்றத்தில் தம்மை உறுப்பினர்களாக்கிக் கொள்ளாமலிருப்பது வருத்தமளிப்பதாகவும், நகர்நலச் சேவையில் ஒத்துழைப்பளிக்கும் வகையில் அவர்கள் ஆர்வத்துடன் வந்திணைய வேண்டும் என்றும், அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் செயல்திட்டத்துடன் செயலாற்றி வரும் இம்மன்றத்தின் வாசல்கள் அவர்களுக்காக என்றும் திறந்தேயுள்ளதாகவும், மனமாச்சரியங்களுக்கு இடமளிக்காமல், நீடித்த நன்மையைப் பெற்றுத் தரும் இவ்வுயரிய சேவையில் அனைவரும் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும் என தாம் விரும்பிக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்து லால்பேட்டை ஜனாப் அப்துல் நாசர் வாழ்த்துரை வழங்கினார். அவர் தனதுரையில், மன்றம் ஆற்றும் சேவைகள் - அதிலும் குறிப்பாக இளைய சமூகத்தினர்கள் இவ்வளவு சிறப்பாக மக்கள் பணியே இறைவனின் பொருத்தம் என்ற ஒரே எண்ணத்தில் பாடுபடுவதை தாம் நேரில் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகக்குறிப்பிட்டார்.
அடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தின் தலைவர் ஜனாப் மின்ஹாஜ் முஹ்யித்தீன் உரையாற்றினார். எடுத்துக்கொண்ட பொறுப்பை இனிதே நிறைவேற்றி, நகர்நல சேவைகள் புரிவதற்கு உறுப்பினர்கள் அனைவரும் தமக்கு உற்சாகமும், உத்வேகமும், நல்ல ஆலோசனைகளும் வழங்கிட வேண்டும் என்று அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
அடுத்து சிறப்புரை ஆற்றிய ரியாத் தமிழ் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான பரங்கிப்பேட்டை கவிஞர் பக்ருதீன் என்ற இப்னு ஹம்தான் உரையாற்றினார்.
காயல்பட்டணத்துக்கும், பரங்கிபேட்டைக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது... கிபி .ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் முதல் முதலாக காயல்பட்டணம், பரங்கிபேட்டை, கீழக்கரை, பழவேற்காடு ஆகிய ஊர்களில் நமது முனோர்கள் வந்து இறங்கினார்கள்... இதன் கல்வெட்டு இன்னும் பழவேற்காட்டில் உள்ளது...
பரங்கிப்பேட்டையில் அப்பா பள்ளி தெரு என்று ஒரு தெரு இருக்கிறது... அதில் காயல்பட்டன முன்னோர்கள் வாழ்ந்ததாக சரித்திர குறிப்பேடு உள்ளது... எனது முன்னோர்களும் அந்த தெருவை சார்ந்தவர்கள்தான்... அந்த வகையில் நானும் உங்கள் ஊரின் உறவினர்தான்...
இவ்வாறு அவர் மகிழ்வுற குறிப்பிட்டார். பின்னர், மனித நேயம், ஒற்றுமை குறித்த கருத்துக்களடங்கிய தன் கவிதையொன்றை வாசித்து அனைவரையும் மகிழ்வித்தார்.
அவரைத் தொடர்ந்து, மன்ற செயலாளர் ஜனாப் கூஸ் அபூபக்கர் உரையாற்றினார்.
மன்ற உறுப்பினர்கள் தான் மற்றும் அல்லது தமக்கு தெரிந்த நண்பர்களிடமும் சொல்லி தம்மால் முடிந்த ஒரு மகத்தான பணியை செய்ய வேண்டும் என்றும், மனித நேயத்துடன் நமது மன்றம் முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கும் உதவி புரிந்ததையும் பெருமிதத்துடன் எடுத்துரைத்தார்.
அங்க அசைவால் அறியும் போட்டி:
அடுத்து அங்க அசைவுகளைக் கொண்டு எந்த நபி மொழி ,மற்றும் பழமொழி சொல்ல வேண்டும் என்னும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியை (DUMB CHARADE), ரியாத் தமிழ் மன்றத்தின் நிருவாகிகளில் ஒருவரும் சிறந்த செயல் வீரருமான லக்கி ஷாஜஹான் அவர்கள் கலகலப்பாக நடத்தினார் . நான்கு அணியாகப் பிரித்து நமது உறுப்பினர்கள் ஆர்வமாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மகிந்தனர்.
அதன் பின் தமது உரையில் பல்வேறு கேளிக்கைகளில் தங்கள் நேரத்தை ஒதுக்கும் இந்த காலத்தில் கிடைக்கும் வார விடுமுறையை தமதூர் மக்களுக்காக ஒதுக்கி வாரி வாரி கொடுக்கும் உங்களில் ஒருவனாக என்னையும் உங்கள் அங்கத்தில் இணைத்திட கேட்டுகொள்கிறேன் என்று தமதுரையில் அழகாக எடுத்துரைத்தார்.
குலுக்கலில் பரிசு:
இறுதியாக கலந்து கொண்ட உறுப்பினர்களில் மூவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட அனைவருக்கும் ஜனாப் S.S.மீரா சாஹிப் நன்றி தெரிவித்தார். இறுதியாக கூட்ட தலைவரின் துவாவுக்குப் பின், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் மீது ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
விருந்துபசரிப்பு:
கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கு, சுவையான பிரியாணி சாப்பாட்டுடன் விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுக்குழு நிகழ்வுகளின் இதர படக்காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 18:30/16.02.2012]
[படத்தொகுப்பு இணைக்கப்பட்டது @ 07:36/17.02.2012] |