காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா நிறுவனத்தின் மேலாளர் – ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த ஹாஜி என்.கே.மிஸ்கீன் ஸாஹிப், 14.02.2012 அன்று (நேற்று) அதிகாலை 04.00 மணியளவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா, நேற்று மாலை 05.00 மணியளவில் காயல்பட்டினம் மகுதூம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பொது நல ஆர்வலரும், காயல்பட்டினம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபையின் செயலாளரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் முஹம்மத் இப்ராஹீம், 14.02.2012 அன்று (நேற்று) மாலை 05.00 மணியளவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 10.30 மணியளவில் காயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பெங்களூரு காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஜாவியா மேலாளரான ஹாஜி என்.கே.மிஸ்கீன் ஸாஹிப் அவர்களின் மறைவுக்கும், மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபையின் செயலாளரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான ஜனாப் பாளையம் இப்ராஹீம் அவர்களின் மறைவுக்கும் எம் மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
மர்ஹூம்களுக்கு வல்ல அல்லாஹ் "ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்" எனும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக... ஆமீன்.
மர்ஹூம்களின் பிரிவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு வல்ல அல்லாஹ் "சபூர்" என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.
இவ்வாறு அந்த பெங்களூரு காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம்,
பெங்களூரு, கர்நாடக மாநிலம். |