பொது நல ஆர்வலரும், காயல்பட்டணம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கசபையின் செயலாளரும், காயல்பட்டணம் நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் முஹம்மது இப்ராஹீம் - இன்று மாலை 5 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 66.
நகர்மன்றத் தலைவர் பீ.எம்.ஐ. ஆபிதா சேக் உட்பட அவருக்கு நான்கு பெண்மக்களும், மர்ஹூம் பாளையம் முஹ்சின் மற்றும் மொஹிதீன் அப்துல் காதர் என இரு சகோதரர்களும், இரு சகோதரிகளும் உண்டு.
அவரது மகள்களின் ஒருவரான் ரஃபியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார்.
அன்னாரின் ஜனாஸா நாளை (பிப்ரவரி 15) காலை 10 மணி அளவில் - புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
2. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byNoohu Lebbai (Kayalpattinam)[14 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16824
இன்னாலில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜிஹூன். மர்ஹூம் அவர்களுக்கு வல்ல அல்லா "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன். மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த வருத்தத்தை சமர்பிக்கிறேன். வல்ல அல்லாஹ் "சபூர்" என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக.
3. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byshaik abbas faisal.d. (kayalpatnam)[14 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16825
அஸ்ஸலாமு அலைக்கும்,அன்னார் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்,மேலும் அவர்களை சபூர் என்னும் பொறுமையை கடை பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து மேலான ஜென்னதுள் பிர்தௌஸ் என்னும் சுவர்கத்தை அன்னார்க்கு அளிப்பானாக ஆமீன்
பாளையம் இப்ராஹீம் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தேன். சிறந்த பண்பாளர். கிருபையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக்கொடுப்பானாகவும். ஆமீன்.
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல நாயன் மேலான பொறுமையை கொடுப்பானகவும். ஆமீன்.
11. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted bySHAJAHAN (DAMMAM)[14 February 2012] IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16836
அஸ்ஸலாமு அலைக்கும்,அன்னார் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்,மேலும் அவர்களை சபூர் என்னும் பொறுமையை கடை பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து மேலான ஜென்னதுள் பிர்தௌஸ் என்னும் சுவர்கத்தை அன்னார்க்கு அளிப்பானாக ஆமீன்
வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து, "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்.
அவர்களின் பிரிவால் வாடும் நமது நகர்மன்றத் தலைவர் பீ.எம்.ஐ. ஆபிதா மற்றும் அன்னாரின் குடும்பத்தாருக்கு அனைவருக்கும் . வல்ல அல்லாஹ் "சபூர்" என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக..ஆமீன்
20. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byP.S.ABDUL KADER (JEDDAH,KSA)[14 February 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16847
அஸ்ஸலாமு அழைக்கும்
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கசபையின் செயலாளரும், நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் இப்ராஹீம் அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன்.
மர்ஹூம் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, எனது சாலத்தை தெரிவித்துக் கொள்கிறோம் அஸ்ஸலாமு அழைக்கும்.
21. பிரியமானவர் பிரிந்தார் !!!!!!!!!!! posted byA.R.Refaye (Abudhabi)[14 February 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16848
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
" இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் "
எல்லாம் வல்ல அல்லாஹ்! அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.
அவர்கள் பிரிவால் வாடும் நகரத்தலைவர் ,குடும்பத்தார், உற்றார் அனைவருக்கும் வல்ல அல்லாஹ்! சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள வேண்டுகிறோம்.
22. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted bymackie noohuthambi (colombo)[14 February 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 16849
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எனது பாசத்துக்குரிய நண்பர். 1980 களிலே பம்பாயில் காயல் நல மன்றம் ஆரம்பித்து என்னை செயலாளராக ஆக்கி முஹ்சின் அவர்களை பொருளாளராக ஆக்கி ஊர் மக்களுக்கு, குறிப்பாக அரபு நாடு செல்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் முனைப்புடன் பணியாற்றியவர். அவர் வீட்டுக்கு உள்ளே இருந்தாலும் பரப்பாக தேடப்படுபவர். வெளியே இருந்தாலும் பரபரப்பாக செயல்படுபவர்
HE HAD DUAL FRIENDSHIP WITH FUNDAMENTALISTS AND CONSERVATIVES.HE WILL TALK WITH SKY ROCKETED FLAT OWNERS AND WALK WITH LOW LYING SLUM DWELLERS EQUIVOCALLY.HE SPOKE OPENLY WHAT HE FELT RIGHT, WHETHER IT IS RIGHT OR WRONG, HE WILL NOT YIELD TO CIRCUMSTANCES. HE EXPRESSED HIS VIEWS CLEARLY AND I HAD SEVERAL OPPORTUNITIES OF ARGUING WITH HIM BOTH IN RELIGIOUS AND WORLDLY MATTERS. HE HAD HIS OWN WAY OF THINKING AND ACTING.
நான் அந்த கருங்கல்லோடு மோதியதுண்டு. கருங்கல்லும் உடைந்ததில்லை, எனது தலையும் நசுங்கியதில்லை.உறவுகளை பேணுவதில் அவர் ஒரு அடைமழை உரிமைகளுக்கு குரல் கொடுக்கும்போது அவர் ஒரு எரிமலை. அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர் நற்செயல்களை அங்கீகரித்து மேலான சுவர்க்க வாழ்வை கொடுப்பானாக. அவர்களது குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுப்பானாக.
சகோதரி ஆபிதா அவர்கள் தன தந்தை காண ஆசைப்பட்ட ஒரு சிறப்பான காயல்பட்டினத்தை உருவாக்கும் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொள்வதே தன தந்தைக்கு ஆற்றும் கைம்மாறு என்று கூறி அவர்களையும் பொறுமையுடன் இருக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். மக்கி நூஹுதம்பி
23. إنا لله وإنا اليه راجعــون posted bys.s.md meerasahib (zubair) (riyadh)[14 February 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16850
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாம் வல்ல அல்லாஹ்....
للهم اعفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة
அன்னவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களின் கபுரை சுவன பூங்காவாக மாற்றி அருள்வானாக ஆமீன்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன். வஸ்ஸலாம்.
24. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byMauroof, S/o. Mackie Noohuthambi (Dubai)[14 February 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16851
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும் குற்றங்குறைகளை மன்னித்தும் அருள் புரிவானாக. அவர்களுடைய மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான மறுமை வாழ்க்கையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் நல்ல பொறுமையை அல்லாஹ் கொடுத்தருள்வானாக.
குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். இறைவன் அவர்களது பிழைகளை மன்னிப்பானாக! அவர்களது குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்.
28. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byAbdul Cader S.H. (Jeddah)[14 February 2012] IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16856
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் தலைவியின் தந்தையும் என் அன்புக்குரியவருமான ஜனாப் பாளையம் இப்ராஹிம் அவர்கள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த நான், இன்று அன்னாரின் வபாத் செய்தியை கண்ணுற்று கவலை கொண்டாலும், இறைவனின் கட்டளைக்குட்பட்டு நடக்கும் எந்த காரியத்தையும் நாம் தடுத்து விட முடியாது என்பதனை அறிந்து கொண்டு சபூர் செய்து கொண்டேன்.
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன்.
மர்ஹூம் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், சபூர் எனும் பொறுமையை கடைபிடித்து மர்ஹூம் அவர்களுக்காக நாம் துஆ கேட்போமாக!
பிரிவில் வாடும் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்..
30. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byமுத்துவாப்பா... (அல்-கோபர்)[14 February 2012] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16859
இப்ராஹீம் காக்கா அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம் . எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை வழங்கிடுவானாக .... மேலும் அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு சப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை கொடுப்பானாக ....
31. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byJaffer SAthick (Dubai,UAE)[14 February 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16860
இன்னாலில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜிஹூன். மர்ஹூம் அவர்களுக்கு வல்ல அல்லா "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன். மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த வருத்தத்தை சமர்பிக்கிறேன். வல்ல அல்லாஹ் "சபூர்" என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக.
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கசபையின் செயலாளரும், நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் இப்ராஹீம் அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சிறந்த பொதுநல சேவகர்.
மாணவர்களின் மார்க்க கல்விபணியில் தன்னை முழுமையாக அர்பணித்தவர். குறிப்பாக "சுன்னத் வல் ஜமாஅத் " கொள்கையில் உறுதியாக தானும் இருந்து, பிறருக்கும் அந்த கொள்கையை வலியுறுத்தி சொல்லி வழிகாட்டியவர். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் அன்னாரின் மகள் நமது நகர்மன்ற தலைவர், மற்றும் அவரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் ,மல்ஹருள் ஆபிதீன் சன்மார்க்க சபையினர்க்கும், அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன் .அல்லாஹ் நம் அனைவருக்கும் அழகிய பொறுமையையும், நற்கூலியையும் தருவானாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் சகல பாவங்கள், குற்றம்,குறைகளை மறைத்து,மன்னித்து, கப்ரை ஒளிவாக்கி, விசாலமாக்கி, சுவன சோலையாக்கி, நாளை மறுமையில் அண்ணல் நபி (ஸல் )அவர்களின் "சபா'அத்தை"பெற்று அன்னாரோடு சுவனபதியில் அவர்களையும் ,நம்மையும் குடியிருக்க செய்வானாக ! ஆமீன்! السلام عليكم ورحمة الله وبركاته
33. என்னை காணும் போதல்லாம் என் மேல் பாச உணர்வோடு அறிவுரைகள் கூறுவதை தவற மாட்டார்கள்.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[14 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16863
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எனது பாசத்துக்குரிய எனது பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் அணைத்து சமுதாய மக்களும் போற்றும் பொதுநல சேவை வாதி நான் சிறு வயதில் அவர்கள் வீட்டு முடுக்கில் விளையாடிய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை என்னை காணும் போதல்லாம் என் மேல் பாச உணர்வோடு அறிவுரைகள் கூறுவதை தவற மாட்டார்கள்..
இன்று அவர்களின் மரண செய்தி அறிந்து மிக வேதனை அடைந்தேன்..! அல்லாஹ்வின் அழைப்பு வரும் போது யாரால் தடுக்க முடியும்...! மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார்கள் அனைவர்களும் சபூர் செய்து கொள்ளவும்.. வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக.. ஆமின்..
35. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted bykm.mohideen (AL-KHOBAR)[14 February 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16865
இன்னாலில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜிஹூன். மர்ஹூம் அவர்களுக்கு வல்ல அல்லா "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன். மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த வருத்தத்தை சமர்பிக்கிறேன். வல்ல அல்லாஹ் "சபூர்" என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக.
37. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byM.H. Syed Mohamed sahib (Kowloon, Hong Kong)[14 February 2012] IP: 113.*.*.* China | Comment Reference Number: 16869
சர்வ சமய மக்களுடன் சகோதர வாஞ்சையுடன் சமத்துவமாக பழக கூடிய சிறந்த மத நல்லிணக்க வாதியும், சுன்னத் ஜமாஅத் அகீதாவை பேணி பாதுகாத்தவரும், தேசிய ஒருமைப்பாடு, சமய சார்பின்மையின் பாதுகாவலருமாக விளங்கிய பாசமிகு அன்பு சகோதரர் பாளையம் இப்ராஹீம் காகா அவர்களின் வபாத் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் நகராட்சி தலைவி புரட்சி மகள் ஆபிதா மற்றும் குடும்பதவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதுடன், அன்னாரின் மக்பிரதிட்காக துஆ செய்வோமாக.
M.H. செய்யத் முஹம்மத் சாஹிப்
மற்றும்
நடுவுலப்பா முஹம்மது லெப்பை ஆலிம் குடும்பத்தினர்.
39. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byMuthu Muhammad (Dubai)[14 February 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16872
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து உயரிய சுவன பதியை கொடுத்தருள்வானாக- ஆமீன்
43. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byahmed meera thamby (kayal(makkah))[14 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16878
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
வல்ல அல்லாஹ் அவர்ஹல் அறிந்து அறியாமல் செய்த பிழைகளை மன்னித்து சுவன பதவியை குடுப்பானாக!ஆமீன்
என் தம்பி சொல்வது போல் அவர்ஹல் எங்கள் தெருவில் எல்லோருடனும் ஒரு குடும்ப நபர் போல் பழகுவார்கள்,அவர்களை பிரிந்து அவர்கள் குடும்பம் கவலை படுவது போல் ஜமாஅத் மக்கள் எல்லோரும் துயர படுகிறோம்(அல்லாஹ் பொறுமையை தருவாக)பொது சேவையை தம் வாழ்க்கையாக ஆக்கி கொண்ட அந்த நல்ல உள்ளம் கொண்ட பாளையம் இப்ராஹீம் காக்காவின் கப்ரை அல்லாஹ் விசால மாக்கி பிரகாச ஒலி கொடுத்து புது மாப்பிள்ளை போல் அவர்கள் தூங்க அருள் புரிவாக!ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
நட்புடன்--தமிழன் இஸ்மாயிலின் காக்கா
அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ் (காயல்)
46. ஆழ்ந்த அனுதாபங்கள் posted bySalai Sheikh Saleem (Dubai)[14 February 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16881
இன்னாலில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜிஹூன்.
வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து, "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்.
அவர்களின் பிரிவால் வாடும் நமது நகர்மன்றத் தலைவர் பீ.எம்.ஐ. ஆபிதா மற்றும் அன்னாரின் குடும்பத்தாருக்கு அனைவருக்கும் . வல்ல அல்லாஹ் "சபூர்" என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக..ஆமீன்
நகர் மன்ற தலைவி ஆபிதா அவர்களே, நடந்த கருமத்தை சபூர் செய்துகொண்டு, தங்களின் அன்பு தந்தையார் உங்களுடன் வாழும் சமயத்திலேயே நீங்களும் நகர் மன்ற தலைவியாகி உங்களின் பேராவலை சாதித்துகாட்டி விட்டீர்கள் ! இனி உங்கள் தகப்பனார் அறிவுரைகளின் படி அவர்கள் கண்ட கனவு காயலை உருவாக்கி சாதனைகள் பல புரிந்திட வல்ல அல்லாஹ் உங்களுக்கு மன உறுதியை தந்தருள்வானாகவும். ஆமீன்.
49. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byKayal R.S.Elavarasu (chennai)[14 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16886
இன்னா லில்லாஹி வ இன்னா இளைகி ராஜிஊன் .
பாளையம் இப்ராஹீம் காக்கா வபாத் செய்தி மனதை வாட்டுகிறது.
உலக இஸ்லாமிய தொலைகாட்சி வரலாற்றில் அதிகாலை சாகர் நேர நிகழ்ச்சியினை பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த போது என்னை சென்னைக்கு வந்து வாழ்த்திச் சென்நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர்.தனக்கென எதையும் எப்போதும் எதிர்பாராதவர். புதிய முயற்ச்சிகள் எதில் ஈடுபட்டாலும் அதில் முதல் வாழ்த்து இப்ராஹீம் காக்கா உடைய வாழ்த்தாகத்தான் இருக்கும். திறமைசாலிகளை தேடிப்பிடித்து பாராட்ட தயங்காதவர்.
நான் காயல்பட்டினம் வரும்போதெல்லாம் அக்கம் பக்கத்து ஊர்க்காரர்,அல்லது வேறு யாரயாவது அழைத்து வந்து அறிமுகப்படுத்தி அவர்களின் திறமையை பற்றி கூறி ஏதாவது பத்திரிக்கை அல்லது தொலைக்காட்சியில் அவர்களின் பேட்டி வர வேண்டும் என்று முயர்ச்சிப்பார். அவர்களது முயற்ச்சியால் என் மூலமே நான்கு பேர் வெளிச்சத்துக்கு வந்துள்ளார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் என்னையும் என் மனைவியையும் தன் வீட்டுக்கு அழைத்து கௌரவப்படுத்தியவர் அவர். நகர் மன்ற தலைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர்களே. அவர்களின் மறைவு எனது மூத்த சகோதரரின் மறைவாக எண்ணி துயருறுகிறேன். அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு இறைவன் பொறுமையை வழங்குவானாக! பாளையம் இப்ராஹீம் காக்கா உடைய மக்பிரத்துக்காக வல்ல ரஹ்மானிடம் இரு கரம் ஏந்தி நிற்கிறேன்.
50. வல்ல ரஹ்மான் சபுரன் ஜமீலா என்ற அழகிய பொறுமை தருவானாக.... posted byMOHIDEEN ABDUL KADER (Abudhabi)[14 February 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16887
அஸ்ஸலாமு அழைக்கும்..
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன். வல்ல நாயகன் அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை அடைய செய்வானாக! ஆமீன்.
எனது குடுமத்தின் சலாதினை தெரிவித்துகொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்,
பாளையம் இப்ராஹீம் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தேன். சிறந்த பண்பாளர். கிருபையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக்கொடுப்பானாகவும். ஆமீன்.
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல நாயன் மேலான பொறுமையை கொடுப்பானகவும். ஆமீன்.
பாளையம் இப்ராகிம் அவர்கள் நகரின் பல்வேறு பொது நல அமைப்புகளுக்கும், பொது தொண்டு ஆற்றும் இளைஞர்களுக்கும் ஊக்கம் தந்தவர். சர்வ சமய நல்லிணக்கத்துக்கு தொடர்ந்து முயன்றவர். ஏற்றம், இறக்கம் பாராது அனைவரிடமும் சமமாக பழகியவர். மாற்று சிந்தனையாளர், நலிந்தோர் பலருக்கு அரசு உதவிகள் பெற வழிகாட்டியவர். தான் என்று தம்பட்டம் அடிக்கும் இந்த காலத்தில், ஓசை இல்லாமல் சேவையாற்றி ஓய்ந்து போன பாளையம் இப்ராகிம் அவர்களின் வாழ்கை வெறும் கதை அல்ல நிஜம்.
அன்னாருக்கு சுவனபதியை கொடுத்தருளவும், அவரின் குடும்பத்தாருக்கு பொறுமையை தரவும், வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
வக்கீல். அஹ்மத்
நிறுவனர் & பணிப்பாளர், துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி.
காயல்பட்டினம்.
ஜனாப் பாளையம் இப்ராகிம் அவர்கள் மறைவு அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம்.
அவர்கள் பொது வாழ்வில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் ஜொலித்தவர். கொண்ட கொள்கையில் வுருதியானவர். பல்வேறு விசயங்களில் விளம்பரம் இல்லாமல் சுமூகமாக முடித்தவர்.
ஒற்றுமைக்கும் , ஒருமைபாட்டிற்கும் உழைத்தவர். மலுஹருள் ஆபிதீன் சன்மார்க்க சபையை தொய்வின்றி நடத்தியவர் அப்படி பட்ட நல்லவர் அல்லாஹ்வின் கட்டளை படி வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை கொடுப்பானாக. மர்ஹூம் அவர்களின் மண்ணறையை பிரகாசமாக்கி, மேலான சுவனபதியில் நுழைய செய்வானாக .ஆமீன்
M .E .L .நுஸ்கி
மற்றும் காயல் சகோதரர்கள்
ரியாத்
சவுதி அரேபியா
நகர் மன்றத் தலைவி சகோதரி ஐ.ஆபிதா அவர்களின் அன்புத் தந்தை மர்ஹூம்,பாளையம்-இபுறாஹிம் அவர்களின் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்யூன்.
சமூக சேவயைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்ட பெருமகன்.ஆபிதாவின் வெற்றிக்குப் பெரிதும் உதவிய புற நகர்(சகோதர சமுதாய) மக்களின் ஆதரவும் அன்பும் எப்போதும் இவர்களுக்கு இருந்து வந்தது உண்மையே!
அன்னாரின் பிழைகளை பொறுத்து வல்ல நாயன் மேலான சொர்க்கப்பதியை வழங்கியருள வேண்டுகின்றோம். இவர் தம் மறைவாலும்,பிரிவாலும் வாடும்,அன்பு மக்களுக்கும்,மூத்த மருமகன்-செய்கு அப்துல் காதர்,இளய மருமகன்-தாவூத்,பேரப்பிள்ளைகள்-அப்துர் ரஹீம் ஃபவாஸ்,ஃபாயிஸ்,ஜெய்னப் ஃபுவைஜா மற்றும் குடும்பத்தினர் அனைவர்க்கும். எமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
56. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted bySalai. Mohamed Mohideen (USA)[14 February 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 16895
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். எங்கள் பாசத்துக்குரிய பாளையம் இப்ராஹீம் காக்காவின் வபாத்து செய்தி அறிந்து கவலை அடைந்தோம். மர்ஹூம் அவர்களை பற்றி எவ்வளவோ எழுதலாம். ஏனென்றால் அவர் என்னுடைய அண்டைவீட்டார் மற்றுமன்றி, எனது சிறு வயது முதல் நல்ல பழக்கம். அதிலும் குறிப்பாக மல்ஹரூல் ஆபிதீன் சன்மார்க்கசபையில் படித்த நாட்களில் அவர்கள் ஆற்றிய சேவைகளை என்றும் மறக்க இயலாதது. ஊரில் சந்திக்கும் போது சிறு புன்னகையுடன் எப்பொழுதும் நலம் விசாரிப்பார்கள்!
பொதுச்சேவைக்கு பெயர்போனவர் மட்டுமன்றி பொதுச்சேவைகளில் மாற்று மதத்தினர்களுடன் இணைந்து எவ்வித பாகுபாடின்றி பணியாற்ற பழகித்தந்து ஒரு முன்மாதிரியை (communal harmony) நமதூரில் ஏற்படுத்தியவர். மர்ஹூம் அவர்களை நினைத்தால்...முதலில் நம் நினைவுக்கு வருவது அவர்களின் புன்னகைதான். எப்பொழுதும் புன்னகையுடனும் சாந்தமான முகத்துடனுமே அவர்களை பார்த்திருக்கிறேன். பொதுச்சேவையிலேயே தனது வாழ்நாளை கழித்தவர் இன்று நம்மில் இல்லையென்றாலும் அவர்கள் விட்டு சென்ற நல்ல விஷயங்கள் என்றும் மறையாமல் மனதில் நிற்க்கும்.
வல்ல அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து, அவருக்கு ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை அளிப்பானாக!! ஆமீன். மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த வருத்தத்தை சமர்பிக்கிறேன். வல்ல அல்லாஹ் "சபூர்" எனும் அழகிய பொறுமையை அவர்களுக்கு தந்தருள்வானாக.
57. சமய நல்லிணக்க ஆசான் நம்மை விட்டும் பிரிந்து விட்டார் ! அன்னார் மீது அல்லாஹ்வின் அருள் மழை ஆஹிர் வரை பொழியட்டும் ! ஆமீன்!! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[14 February 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16897
தோன்றிற் புகழோடு தோன்றுக ! என்னும் பொய்யா மொழிக்கேற்ப , உலகில் வாழ்ந்த எங்கள் பாசத்துக்குரிய மாமா பாளையம் இப்ராஹீம் அவர்கள் மறைந்த செய்தியை இந்த நடு நிசியில் பார்த்தவுடன் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடிய வில்லை. காரணம் , 40 வருட நட்பு..உறவு. இறுதியாக , சென்ற இரண்டு மாதத்துக்கு முன்பு , அவர்களின் இல்லத்தில் வைத்து பார்த்த போதும் அந்த இயலாத நிலையிலும் மருமகன் ஹபீபு என்று என்னை அடையாளம் கண்டு அழைத்து , ஏதோ சொல்ல வந்தார்கள் .ஆனால் முடிய வில்லை ..கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்தோடிய போது அதை நான் துடைத்து விட்டு , நீங்கள் எது சொன்னாலும் ஊர் சம்பந்தப் பட்டதாக த்தான் இருக்கும் இன்ஷா அல்லாஹ் விரைவில் குணம் அடைந்து என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள் மாமா என்று சொல்லி விட்டு விடை பெற்ற அந்த சம்பவம் இன்னும் என் கண் முன்னே நிற்கிறது.
எங்கள் பொது வாழ்வின் நிழலாய் திகழ்ந்தவர்கள் . ஊர் நலனில் சதா அக்கறை மிக கொண்டவர்கள். அனைத்து சாதி சமய மக்களின் நன் மதிப்பை பெற்று, அவர்களின் இதயங்களில் இடம் பெற்றவர்கள். இஸ்லாமியன் அதுவும் காயலான் இவ்வளவு மனிதாபிமானம் உள்ளவனா என்று அனைவரும் ஆச்சர்யம் கொள்ளும் அளவுக்கு அடக்கத்தோடு மாற்று சமுதாய சகோதரர் மத்தியில் புகழ் பெற்றவர்கள். பாமரர் முதல் பட்டத்தில் உச்சியில் இருக்கும் அனைத்து தரப்பினரோடும் சகஜமாக பழகும் குணம் கொண்டவர்கள். வாழ்வில் எதிரியை எதிர் நோக்காதவர் . குணத்தால் , சீரிய பேச்சால் , சிறந்த முற்போக்கு சிந்தனையால் , சமுதாய தொலை நோக்கு பார்வையால் , கருணையால், மத நல்லிணக்க செயல் பாட்டால், சன்மார்க்க தீன் சேவையாற்றும் திறமையால் எல்லோர் இதயங்களிலும் தவறாமல் குடி கொன்றிருப்பவர் ! இப்படி சொல்லி கொண்டே போகலாம் அவர்களின் தூய வாழ்வின் அடிச்சுவட்டை...
அன்னாரின் ஜனாஸா அடக்கத்தின் போது இவை அனைத்தையும் அங்கே காண முடியும்....கூடி குழுமி இருக்கும் மக்களின் மூலம் ! அவர்கள் இன்று அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள் ஆனால் அவர்களின் செயல் பாடுகள் இன்ஷா அல்லாஹ் , நம்மை போன்றவர்களின் மூலம் இந்த உலகத்தில் தொடரத்தான் போகிறது . அதன் நன்மைகளின் பங்கும் அவர்களுக்கு வல்ல ரஹ்மான் வழங்கத்தான் போகிறான் ,ஆமீன்.
துயருற்றிருக்கும் அன்பு மாமாவின் குடும்பத்தார் அனைவருக்கும் கருணை மிகுந்த அல்லாஹ் சப்ரை கொடுப்பானாக! அவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் .
மர்ஹூம் இப்ராஹீம் மாமாவின் நல்ல சேவைகள் அனைத்தையும் கிருபையுள்ள ரஹ்மான் அங்கீகரித்து , கப்ரில் சுவனத்து காற்றை சுவாசித்தவர்களாக , நாளை மறுமை நாளில் , மஹ்மூது நபிகளின் நேசத்தை பெற்றவர்களாக, உயர்வான சுவன பதியை அடைய இரு கரம் ஏந்தி கண்ணீர் மல்க து ஆ இறைஞ்சுகிறோம். அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக , ஆமீன் !
குடும்பத்தார் அனைவருக்கும் , குறிப்பாக அருமை சகோதரி , நகர் மன்ற தலைவி அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தாரின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வ பறக்காதுஹு .
வருத்தத்துடன் ,
K.V.A.T. குடும்பத்தினர் ,
குறுக்குத்தெரு ,
காயல் பட்டணம்
மற்றும் கத்தார் .
60. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted bysyedahmed (GZ, China)[15 February 2012] IP: 113.*.*.* China | Comment Reference Number: 16907
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து
மேலான உயர் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை
கொடுப்பானாக, ஆமீன். அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்திற்கு மன ஆறுதலையும் இரங்கல்
சலாத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
காயல்பட்டணம் மழ்ஹருல் ஆபிதீன்
சன்மார்க்கசபையின் செயலாளரும்,
நம் நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான
எங்கள் பாசமிகு மரியாதைக்குரிய
பாளையம் முஹம்மது இப்ராஹீம் அவர்கள்
இன்று 14 -02- 2012 மாலை 5 மணியளவில் காலமானார்கள் எனும் செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இறைவனுடைய நாட்டப்படி ஏற்பட்டுவிட்ட இந்த கர்மத்திற்காக நாங்கள் ஸபூர் செய்து கொண்டோம்..
மர்ஹூம் அவர்களைப் பிரிந்து வாடும் அன்னாரின் அன்புமிகு சகோதரர் ,மகள்கள் ,மருமக்கள்கள் மற்றும் குடும்பத்தினர்
அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வளவு பெரிய இழப்பைத் தாங்கும் இதயத்தையும்,
அழகிய பொறுமையையும் குடும்பத்தார்கள் அனைவருக்கும்
வழங்க இறைவனிடம் நெஞ்சுருக பிரார்த்திக்கிறோம். ஆமீன்
கருணையே உருவான வல்ல அல்லாஹ்
மர்ஹூம் அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி,ஒளிமயமாக்கி வைத்து,
ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை நிறைவான நற்கூலியாக வழங்கி கிருபை செய்தருள்வானாக ஆமீன்...
எல்லாம் வல்ல அல்லாஹ்! அவர்களின் பிழைகளைப் மன்னித்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.
அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ்! சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள வேண்டுகிறோம்.
66. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted bySeyed Ibrahim S.R. & Family (Ajman(U.A.E.))[15 February 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16917
Innallillahi Wa Inna Illaihi Rajihoon. May Almighty Allah forgives his sin and make him to enter in Jannah. At this time, let Almighty Allah make the deceased family members to observe 'Sabran Jameela' for the irrepairable loss.
67. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted bySyed Muhammed Sahib Sys (Dubai, UAE)[15 February 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16918
إنا لله وانا اليـه راجعــــــون
اللهــم اغـفـر له وارحمــه
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்து வைப்பானாக, அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் மேலான பொறுமையை கொடுத்து அருள் புரிவானாக, ஆமீன்.
68. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byNOOHU SAHIB (Dubai)[15 February 2012] IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16919
இன்னாளில்லாஹி வா இன்னா இலைய்ஹி ராஜிஊன்
சமூதாய சிந்தனையாளர் பாளையம் முஹம்மத் இப்ராகிம் காக்கா அவர்களின் மறைவு நமது ஊருக்கும் சமூதாயதிர்க்கும் பெரிய இழப்பஹும் .அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை அளிப்பானஹா ஆமீன்.
69. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byn.abdul kader (colombo)[15 February 2012] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 16922
அஸ்ஸலாமு அலைக்கும்,அன்னார் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்,மேலும் அவர்களை சபூர் என்னும் பொறுமையை கடை பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து மேலான ஜென்னதுள் பிர்தௌஸ் என்னும் சுவர்கத்தை அன்னார்க்கு அளிப்பானாக ஆமீன்
71. சொந்த நலனுக்காக பயன்படுத்தாமல் திறமைகளை சமுதாயத்துக்காக செலவழித்த மனிதநேயர் posted byLebbai (Zatni) (Riyadh)[15 February 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16924
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.
எங்கள் முஹல்லாவில் இருக்கும் சிறார்களை தீன்மார்க்கக்கல்வி கற்க ஆர்வமூட்டி உற்சாகப்படுத்தியவர்கள்.
காயல்பதியின் பாரம்பரியத்தையும், கண்ணியத்தையும் இளைய தலைமுறை பாதுகாத்திடும் பொருட்டு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள்.
நாங்கள் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கச்சபையில் மார்க்கக்கல்வி பயிலும் சமயத்தில், மதநல்லிணக்கம் என்று நாம் இன்று அறிந்துவைத்திருப்பதை அன்றே எங்களுக்கு கற்றுத் தந்தவர்கள்.
சமுதாயத்துக்காக தன்னை அர்பணித்து சேவை செய்தவர்கள். பல திறமைகள் இருந்தும் அனைத்தையும் தன் சொந்த நலனுக்காக பயன்படுத்தாமல் திறமைகளை சமுதாயத்துக்காக செலவழித்த மனிதநேயர்.
நாங்கள் எங்கள் தெருவில் விளையாடும் சமயம் முதல் இன்று வரை காணும்போதெல்லாம் ஒரு புன்சிரிப்பு செய்து அறிவுரை சொல்பவர்கள்.
மேலும், நமதூரின் சமுதாய ஒற்றுமைக்கும், மேம்பாட்டிற்கும், மதநல்லிணக்கத்திற்கும் பாலமாக விளங்கிய எங்கள் சபையின் செயலாளர் அவர்கள் மறைவால் நாங்கள் பெரிதும் துயர்கொண்டுள்ளோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.
அவர்கள் பிரிவால் வாடும் நகரத்தலைவர், குடும்பத்தார்கள், உற்றார்- உறவினர்கள், நம் சபையின் அங்கத்தினர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் ஷப்ருன் ஜமீல் என்னும் பொறுமையை தந்தருள வேண்டுகிறோம்.
74. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[15 February 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16930
அஸ்ஸலாமு அழைக்கும் .
நமது ஊர் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கசபையின் செயலாளரும் and நமது ஊர் பஞ்சாயத் தலைவி ஆபிதா அவர்களின் தந்தையுமான பாளையம் இப்ராஹீம் அவர்கள் காலமானார்! என்கிற நடப்பு கேள்வி பட்டு மனதுக்கு வருத்த மானது
.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுஊன் .
கிருபையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக்கொடுப்பானாகவும். ஆமீன்.
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
76. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byM.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI)[15 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16933
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
إنا لله وانا اليـه راجعــــــون اللهــم اغـفـر له وارحمــه
எமது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கச்சபையின் செயலாளர் பாளையம் இப்ராஹீம் அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன். அவர்கள் எங்களோடு பணியாற்றிய காலங்கள் எங்கள் நினைவுக்கு வந்தது. காலங்கள் மாறி வரும் நிலையில் மார்க்க கல்வி, Quran ஓதுவதை பள்ளி செல்லும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்கள். எமது சபை இவர்களை இழந்தது மிகவும் கவலையாக உள்ளது.
மேலும் சமுதாய சேவைகளில் சொல்ல இயலாத அளவுக்கு அவர்கள் செய்த சேவைகளை யாராலும் மறக்க முடியாது. எவ்வளவு பெரிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளையும் எளிதில் தொடர்பு கொள்ள கூடியவர். அவர்கள் பல சமுதாய மக்களையும் இணைத்து வாழ சொல்லி தந்த பாடம்தான் HOLD HANDS TO SAVE PEACE.
அவர்கள் எங்கு சென்றாலும் HOLD HANDS TO SAVE PEACE என்ற இந்த ஒற்றுமையை நிலை நிறுத்தும் வாசகத்தை சொல்லி தருவது இன்றும் எங்கள் நினைவுக்கு வருகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ்! அவர்களின் பிழைகளைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுப்பானாக.
அவர்கள் பிரிவால் வாடும் நகரத்தலைவர், குடும்பத்தார்கள், உற்றார்- உறவினர்கள், நம் சபையின் அங்கத்தினர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் பொறுமையை தந்தருள்வனாக. ஆமீன்!
BY
M.A.MOHAMED THAMBY B.SC.,
C/O.BARAKATH MAHAL
CHENNAI.
77. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byM.N Seyed Ahmed Buhari (Chennai(mannady))[15 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16934
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவர்க்க பதவியை கொடுப்பனஹா... ஆமீன்.. அவர்கள் குடும்பத்தார் அனைவர்க்கும் என் சலாம்
அஸ்ஸலாமு அழைக்கும்.....
78. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted bysuaidiya buhari (chennai)[15 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16935
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன். மர்ஹும் அவர்களின் பாவங்களை அல்லாஹு மன்னித்து ஜனதுள் பிர்தௌஸ் எனும் சொர்க்கதில் இர்க்க செய்வானாக ஆமீன். என் உடைய deepest அனுதாபத்தினை மர்ஹும் அவர்களின் குடுபத்திற்கு தெரிவித்து கொள்கிறேன்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் தலைவியின் தந்தை பாளையம் இப்ராஹீம் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தேன்.
சிறந்த பண்பாளர்.
மாற்று மத சகொதர்களிடமும் அன்பு பாராட்டுபவர்
நமதூர் அரசு மருத்துவமனை இத்தனை தூரம் சிறப்பாக செயல் படுவதற்கு அரும் பாடு பட்டவர்
எத்தனையோ ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு பள்ளி கூடம் தர்கா பள்ளி வாசல் போன்றவைகளுக்கு மீட்டு குடுத்தவர்
கடந்த நகராச்சி தேர்தல் பரப்புரையின் போது அதிகமான மக்கள் சகோதரி ஆபிதா அவர்களிடம் தந்தையின் உடல் நலம் பற்றி அநேக பேர் விசாரித்தார்கள் குறிப்பாக அடித்தட்டு மக்கள் அநேகம் பேர் அவர்கள் மீது மிகுந்த அன்புகொண்டிருந்தார்கள்
சமூக சேவகர் விமரசனங்களை புன்முறுவலுடன் எதிர்கொண்டவர் மடசார்பற்று பலக கூடியவர் அணைத்து பெரிய அதிகாரிகளுக்கும் அறிமுக மாணவர்
அன்னாரின் இழப்பு குடும்பத்துக்கு மட்டுமின்றி நமதூருக்கும் நம்மனைவருக்கும் மிகப்பெரிய ஓர் பேரிழப்பாகும்
மதிப்பிற்குரிய பாளையம் இப்ராஹீம் மாமா அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை நல்குவானாக...
வல்ல ரஹ்மான் அவர்களின் மறுமைப் பேற்றை கண்ணியமிக்கதாக்கி, பாவங்களை பொருத்தருளி, மன்னிப்பை நல்குவானாக...
அவர்களது மண்ணறை வாழ்வை ஒளிமயமானதாக்குவானாக... அவர்களின் பொதுச் சேவைகளை அங்கீகரிப்பானாக...
84. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted bymubarak ali (Abudhabi)[15 February 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16944
அஸ்ஸலாமு அழைக்கும்..
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன். வல்ல நாயகன் அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை அடைய செய்வானாக! ஆமீன்.
எனது குடுமத்தின் சலாதினை தெரிவித்துகொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்,
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும் குற்றங்குறைகளை மன்னித்தும் அருள் புரிவானாக. அவர்களுடைய மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான மறுமை வாழ்க்கையை கொடுத்தருள்வானாக - ஆமீன். மேலும் மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் நல்ல பொறுமையை அல்லாஹ் கொடுத்தருள்வானாகவும் ஆமீன்!
நல்ல பண்பாளர், சிறு வயதில் அறிவுரை கூறும் போது கூட அவர்ஹள் ஸ்டைலில் மெதுவாஹ புரியும் படி சொல்வர்ஹள். அஜ்ஜமள்ளஹு அஜ்ஜரக்.
மிக்க வருத்தமுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ்.எச். + குடும்பதினர்ஹள்
ரியாத். சவுதி அரேபியா.
86. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted bySYED OMER KALAMI (colombo)[15 February 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 16951
SHOCKING TO HEAR DEMISE OF PALAYAM IBRAHIM KAKA.MY HEART FELT DEEPEST CONDOLENCE TO HIS FAMILY MEMBERS.MAY ALMIGHTY FORGIVE ALL HIS SIN &GIVE HIM JANNA.
87. பலவற்றில் என் வழிகாட்டி! posted byS.K.Salih (Kayalpatnam)[15 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16960
மறைந்த பாளையம் இப்றாஹீம் மாமா அவர்களோடு பல்லாண்டு காலம் பழகியவன்...
என் தந்தை மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் அவர்களைப் போலவே தானறிந்த வழியில் பொதுச் சேவையை ஆர்வத்துடன் முன்னின்று செய்தவர் இப்றாஹீம் மாமா அவர்கள்...
எனது செய்திப் பணியின் துவக்க காலங்களில் நிறைய அறிவுரைகளைச் சொல்லி, என் எழுத்திலுள்ள குறைகளை ஏதோ இயன்றளவுக்கு குறைக்க பெரும் தூண்டுகோலாய் அமைந்தவர்கள்... சுயநலனைக் குறிக்கோளாய்க் கொண்டு மனிதர்கள் வாழும் இவ்வுலகில், சூட்சுமங்களை எதிர்கொள்ளும் தந்திரங்களை அவர்களிடம் ஓரளவு கற்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதை எண்ணி மகிழ்கிறேன்.
எதற்கும் அஞ்சாத நெஞ்சுறம் கொண்டவர்கள்... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதிருந்தவர்கள்...
தனக்கென பலவற்றைச் சேர்க்க வழியிருந்தும், பொதுவாழ்வில் அவ்வாறு செய்வதை வெறுத்தே வாழ்ந்து முடித்தவர்கள்...
சில நகர்நல அம்சங்களுக்காக செல்வந்தர்களை அவர்கள் நாடுகையில், அவர்கள் அளிக்கும் பணத்தை தன் கையால் வாங்காமல், ஆக வேண்டிய வேலையைச் சொல்லி, அதற்கான கட்டண ரசீதைக் கொடுத்து, “இன்ன இடத்தில் அந்த தொகையை சேர்த்து உதவுங்கள்” என்று அச்செல்வந்தரிடம் இலகுவாக சொல்லி, தான் நினைத்த காரியத்தை கரை படாமல் செய்து பழக்கப்பட்டவர்கள் என்பதற்கான நாடமாடும் பல சாட்சிகளில் நானும் ஒருவன்.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொறுத்தருளி, அவர்களது நற்செயல்களை கபூல் செய்து, மேலான சுவனபதியை நற்கூலியாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
நான் பார்த்த பாளையம் மாமாவை, அவர்களின் மகளார் - நம் நகர்மன்றத் தலைவர் அவர்களின் நடவடிக்கைகளிலும் கண்டு வருகிறேன்... தந்தை விட்டுச்சென்ற நல்லவற்றை, தங்கள் பொறுப்புமிக்க பதவியால் செய்து, அதன் நன்மைகளில் தங்கள் தந்தைக்கும் பங்குகள் கிடைக்கச் செய்யுமாறு அன்புச் சகோதரி ஆபிதா லாத்தாவைக் கேட்டுக்கொள்கிறேன்.
வல்ல அல்லாஹ் மறைந்த பெருந்தகையின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக...
91. Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted bykavimagan (kayalpatnam)[16 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16973
எளிமை,நேர்மை,நெஞ்சுரம்,இவற்றின் மொத்த உருவமான
தோழவாப்பா பாளையம் இப்ராஹீம் அவர்கள்,மறைந்த
எனது தந்தையாரின் நெருங்கிய நண்பர் ஆவார்கள். இடர்பாடுகளையும்,அடக்குமுறைகளையும் புன்சிரிப்பால் வென்றவர்கள்.ஆயிரம் ஆயிரம் கோடரிகளை அன்பென்னும்
பூக்களால் வீழ்த்திக் காட்டிய சமூகப்போராளி.
எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின் பிழைகளைப் பொறுத்து,அவர்களுக்கு மேலான சுவர்க்கப்பதியை தந்தருளப்
பிரார்த்திக்கும் ஆயிரம் ஆயிரம் நெஞ்சங்களுடன்,எனது இதயத்தையும் இணைக்கின்றேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross