திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் - திருத்தல் - நீக்கல் முகாம் குறித்த வழிகாட்டுத் தகவல்களுடன், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலியங்கி வரும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு பின்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது:-
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் (படிவம் 6), முகவரி மாற்றம் - விபரங்களைத் திருத்தல் (படிவம் 8), வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள பிழைகளைத் திருத்தல் மற்றும் காணாமல் போன பழைய அடையாள அட்டைக்குப் பகரமாக புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல் (படிவம் 001C) ஆகிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான முகாம் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் தகுந்த படிவத்தைப் பூர்த்தி செய்து, தங்கள் பகுதி (வார்டு) சத்துணவு பணியாளரிடம் ஒப்புதல் பெற்று, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து, உடனுக்குடன் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதுகுறித்த மேலதிக விபரங்களைப் பெற்றிட எமது அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தை (+91 81 22 44 07 88) தொடர்புகொள்ளுமாறு கேடடுக்கொள்ளப்படுகிறீர்கள்.
குறிப்பு:- முகாமில் புதிய அட்டை பெறுவதற்கான கட்டணம் ரூ.15 தொகையை உடன் கொண்டு செல்க!
இவ்வாறு, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக,
ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத்,
காயல்பட்டினம். |