மாநிலத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க - சென்னையில் மின்வெட்டு நேரங்கள் - மேலும் அதிகரிக்கப்படலாம். அதனை தொடர்ந்தும், தற்போதைய உற்பத்தி சீரடைவது மூலமும், வெளியில் இருந்து அதிகமாக வாங்க திட்டமிடப்பட்டுள்ள மின்சாரம் மூலமும் - சில நாட்களில், மாநிலத்தின் இதர பகுதிகளில் நிலவும் மின் தட்டுப்பாடு ஓரளவு குறையலாம்.
இருப்பினும் - நிரந்தர தீர்வு, தற்போது நிறைவுபெறும் தருவாயில் உள்ள திட்டங்கள் மூலமும், புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள மின் நிலையங்கள் மூலமுமே கிட்டும். அதற்கு இன்னும் பல மாதங்கள் மக்கள் காத்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது.
அடுத்த சில மாதங்கள்/ஆண்டுகளில் புதிதாக 13,450 MW திறன் மின் நிலையங்கள் அமைக்க/நிறைவுபெற உள்ளன. அவைகளின் விபரம் வருமாறு:-
இவ்வாண்டு நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் [4640 MW]
இவ்வாண்டு துவங்கி அடுத்த சில ஆண்டுகளில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் [5100 MW]
ஒப்புதல் பெற்று, இவ்வாண்டு/அடுத்தாண்டு பணிகள் துவங்கி, அடுத்த சில ஆண்டுகளில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் [3800 MW]
[முற்றும்]
|