2005 - 2006 இல் தமிழ் நாடு மின்சார வாரியத்தின் கூட்டப்பட்ட இழப்பு (Accumulated Loss) 4911 கோடியாக இருந்தது. மார்ச் 31, 2011 முடிய
இது - 40,659 கோடியாக உயர்ந்துள்ளது. மின்சார வாரியத்தின் கடனும் பெரும் அளவு உயர்ந்துள்ளது. 2005 - 2006 இல் 9300 கோடியாக கடன்
இருந்தது. மார்ச் 31, 2011 முடிய இது - 40,300 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த இழப்புகளை - அரசு ஈடு செய்வதில்லை. மின்சார வாரியம் -
வங்கியில் கடன் வாங்கியே ஈடு செய்கிறது. வட்டியாக மட்டும் 400 கோடி ரூபாய் கட்டப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் - ரிசர்வ்
வங்கி - மின்சார வாரியத்தின் தற்போதைய கடன் மிக அதிகமாக உள்ளதால், புதிதாக கடன் வழங்கவேண்டாம் என பிற வங்கிகளுக்கு அறிவுறுத்தி
இருப்பதாக அரசு கூறுகிறது.
மின்சார வாரியத்தின் நிதி நிலை மோசமாக இருக்க முக்கியமாக இரு காரணங்கள் கூறப்படுகின்றன: வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மானியம்
மற்றும் விவசாயிகள்/குடிசைகளில் வாழ்பவர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்.
யூனிட் ஒன்று வழங்க மின்சார வாரியத்திற்கு ஆகும் செலவு - சுமார் 6 ரூபாய். ஆனால் - வாடிக்கையாளர்களிடம் தற்போது - அதற்காக மின்சார
வாரியம் பெறும் கட்டணமோ - யூனிட் ஒன்றுக்கு 65 பைசா முதல் (ஒரு மாதத்தில் 25 யூனிட்கள் பயன்படுத்தும் இல்லங்கள்) 6.50 ரூபாய் வரை
(ஒரு மாதத்தில் 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் வியாபார ஸ்தலங்களுக்கு).
நுகர்வோர் வாரியாக வழங்கப்படும் மானிய (சுமார் 2000 கோடி ரூபாய்) விபரம் வருமாறு:-
மின்சார வாரியம் எதிர்கொள்ளும் இழப்புக்கு மற்றொரு முக்கிய காரணம் - விவசாயிகளுக்கும், குடிசை வாழ் மக்களுக்கும் வழங்கப்படும் இலவச மின்சாரம். தமிழகத்தில் சுமார் 20 லட்சம் - விவசாய மின்சார இணைப்புகளும், 13 லட்சம் குடிசை இணைப்புகளும் உள்ளன.
இவ்விணைப்புகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கபட்டாலும் - இந்த இணைப்புகளுக்கு மீட்டர் பொறுத்த - அரசு சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் பெரும்பாலான இந்த இணைப்புகளுக்கு எந்த மீட்டரும் - அரசியல் நெருக்கடி காரணமாக - இதுவரை பொருத்தப்படவில்லை. இந்த இணைப்புகள் - தவறாக பயன்படுத்தப்படுவதாக - குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த இலவச மின்சார விநியோகத்தால் - ஆண்டு ஒன்றுக்கு ஏற்படும் இழப்பு சுமார் 6500 கோடி ரூபாய் - என தகவல்கள் கூறுகின்றன.
[தொடரும்]
[செய்தி திருத்தப்பட்டது]
|